search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ரோகித் சர்மா நீக்கம்

    இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்க தொடரில் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும்போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டது.  இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய அழைத்து சென்றனர். பின்னர் ரோகித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ரோகித் சர்மா

    இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக குஜராத் வீரர் பிரியங்க் பஞ்சால் இடம்பிடித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்க தொடரில் இல்லாதது  அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கு பதிராக 30 வயதான பிரியாங் பஞ்சால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரியங் பஞ்சால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியை வழிநடத்தி அதிபட்சமாக 96 ரன்களை சேர்த்தார், உள்ளூர் போட்டியில் அனுபவ வீரராக பார்க்கப்பட்ட பிரியங் பஞ்சாலுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    காயத்தின் தன்மை மோசமாக இருப்பதாக கூறப்படுவதால் ரோகித் சர்மா, ஒருநாள் தொடரில் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. 

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ம்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 26 முதல் 30 வரை செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் ஜனவரி 3 முதல் 7 வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், கடைசி போட்டி ஜனவரி 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×