என் மலர்
விளையாட்டு

தொடக்க போட்டியில் இந்தியா வெற்றி
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து - தொடக்க போட்டியில் இந்தியா வெற்றி
வங்காளதேசத்தில் நடந்து வரும் மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடக்க போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இதில் இந்திய அணிக்காக, நீத்து லிண்டா 2 கோல்களும், சந்தோஷ், கேரன் எஸ்டிரோசியா மற்றும் பிரியங்கா தேவி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்துள்ளனர். இறுதியாக தேவி அடித்த கோலானது அணியின் வெற்றியை உறுதி செய்தது.
Next Story






