என் மலர்
விளையாட்டு
- காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார் பி.வி.சிந்து
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரணாயிடம், சீன தைபே வீரர் தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யீ மன்னை எதிர்கொண்டார்.
28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரணாய் 21-19 21-16 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொள்கிறார்.
- கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
- இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார்.
சவுத்தம்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் டி20 போட்டி இன்று சவுத்தம்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார்.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ரீஸ் டாப்லி, மாட் பார்கின்சன்.
இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
- 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.
- அருண் கார்த்திக்-பால்சந்தர் அனிருத் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 சேர்த்தது. அதிகபட்சமாக மோகித் ஹரிஹரன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் விக்னேஷ் அய்யர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், அருண் கார்த்திக்-பால்சந்தர் அனிருத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணி வெற்றியை நோக்கி பயணித்தது.
அருண் கார்த்திக் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பால்சந்தர் அனிருத் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் சேர்க்க, மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
- திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக மோகித் ஹரிஹரன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார்
- மதுரை பாந்தர்ஸ் தரப்பில் சன்னி சந்து 4 ஓவர்கள் வீசி, 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. துவக்க வீரர் விஷால் வைத்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. மறுமுனையில் மோகித் ஹரிஹரன் மட்டும் சற்று தாக்குப்பிடித்து ஆடியதால், அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது.
மோகித் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 சேர்த்தது.
மதுரை பாந்தர்ஸ் தரப்பில் சன்னி சந்து 4 ஓவர்கள் வீசி, 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது.
- இலங்கை அணியில் அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார்.
பல்லேகலே:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று கடைசி போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 75 ரன்கள் விளாசினார். ஷபாலி சர்மா 49 ரன்கள், பூஜா வஸ்திராகர் 56 ரன்கள் (நாட் அவுட்), யாஸ்திகா பாட்டியா 30 ரன்கள் எடுத்தனர்.

பூஜா வஸ்திராகர்
இதையடுத்து ஆடிய இலங்கை அணி 47.3 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில், அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சமாரி அட்டபட்டு 44 ரன்களும், ஹாசினி பெரேரா 39 ரன்களும் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் சிறந்த வீராங்கனை மற்றும் இந்த தொடரின் சிறந்த வீராங்கனை என இரண்டு பரிசுகளையும் ஹர்மன்பிரீத் கவுர் தட்டிச்சென்றார்.
- தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து உணர்ச்சிவசப்பட்டு விடைபெற்றார்.
- நான் உன்னை இழக்கிறேன் ? மீண்டும் சந்திக்கும் வரை என சானியா பதிவிட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து விடைபெறுவதை உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சானியா மிர்சா குறிப்பிட்டுள்ளதாவது:-
விளையாட்டு உங்களிடமிருந்து நிறைய எடுத்துக் கொள்கிறது.
மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக..
வெற்றி தோல்விகள்.. மணிக்கணக்கான கடின உழைப்பு மற்றும் கடுமையான தோல்விகளுக்கு பிறகு தூக்கமில்லாத இரவுகள் ? ஆனால் பிற வேலைகள் கொடுக்க முடியாத பலனைத் இது உங்களுக்குத் தருகிறது. அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ? கண்ணீர் மற்றும் மகிழ்ச்சி , சண்டை மற்றும் போராட்டம் .. நாம் செய்த உழைப்பு அனைத்தும் இறுதியில் மதிப்புக்குரியது .. இந்த முறை விம்பிள்டன் எனக்கானது இல்லை என்று நினைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக இங்கு விளையாடி வெற்றி பெறுவது பெருமையாக உள்ளது ..
நான் உன்னை இழக்கிறேன் ?
மீண்டும் சந்திக்கும் வரை....
இவ்வாறு அவர்பதிவிட்டுள்ளார்.
- கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ரிபாகினா அரையிறுதியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இதில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- விம்பிள்டன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- அரையிறுதியில் முதல் செட்டை கைப்பற்றிய சானியா ஜோடி அடுத்த இரு செட்டை இழந்து தோல்வி அடைந்தது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.
- இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம் வருமாறு:
ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
- முன்னணி வீரரான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் காலிறுதியில் சிலி வீரர் காரினை தோற்கடித்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே இருவரும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் முதல் மற்றும் 3வது செட்டை டெய்லரும், 2வது மற்றும் 4வது செட்டை நடாலும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை நடால் போராடி வென்றார்.
இறுதியில் 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், சிலியின் காரினுடன் மோதினார். இதில் 6-4, 6-3, 7-6 என்ற நேர் செட்களில் கிர்கியோஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் கிர்கியோஸ் முன்னணி வீரரான ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.
- திருச்சி அணிக்கு எதிராக ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார்.
- 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியால் 159 ரன்களே எடுக்க முடிந்தது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 81 ரன்களும், உதிரசாமி சசிதேவ் 65 ரன்களும் குவித்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியால் 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியவில்லை. சாத்விக் 33 ரன்களும், சந்தோஷ் ஷிவ் 59 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் அளித்தனர். ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. நிரஞ்சன் 11 ரன், நிதிஷ் ராஜகோபால் 9 ரன்கள் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டிய ஆதித்ய கணேஷ் 28 ரன்கள் சேர்த்தார்.
முகமது அத்னன் கான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் திருச்சி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஹரிஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார்.
- திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 19 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் ஜெகதீசன் 15 ரன்களும் சேர்த்தனர்.
அதன்பின்னர், திருச்சி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார். உதிரசாமி சசிதேவ் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.






