என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்று போட்டி நடைபெற்றது.
    • இதில் பிரக்ஞானந்தா 76-வது காய் நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2 அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
    • இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

    இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

    ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    • ஆசிய கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காயம் காரணமாக பும்ரா தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019-ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறவிருந்த இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக ஆசியக் கோப்பை தொடர் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    காயம் காரணமாக பும்ரா தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.
    • இதனால் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இன்று விளையாடியது.

    இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதயன் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் தமிழக வீரர் சதயன் ஞானசேகரன், இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் கானம்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங் விளையாடினர்.

    முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்‌ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • ஷரத் கமல் கலப்பு டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.
    • நிகாத் ஜரீன் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந் முதல் இன்று (ஆகஸ்டு 8-ந் தேதி) வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 போட்டிகள் நடைபெற்றன.

    இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி சென்றார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரர்களாக டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஷரத் கமல் கலப்பு டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். நிகாத் ஜரீன் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர்.
    • முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

    பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர். முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது.
    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடக்கிறது.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் நேற்று வரை 9 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.

    10-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஒபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் தலா மூன்று அணிகள் விளையாடி வருகின்றன.

    ஒபன் பிரிவில் இந்திய 'பி' அணி 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் 10-வது சுற்றில் இந்திய 'பி' அணி முதலிடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய 'பி' அணியில் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, சரின் நிஹல், சத்வானி ரானக், அதிபன் ஆகியோர் உள்ளனர். இந்திய 'ஏ' அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தை அமெரிக்கா, அஜர்பைஜான் உள்பட 7 அணிகளுடன் பகிர்ந்துள்ளது.

    இந்திய 'சி' அணி 12 புள்ளிகளுடன் 22-வது இடத்தில் உள்ளது. 10-வது சுற்றில் இந்திய 'சி' அணி ஸ்லோவாக்கியாவுடன் மோதுகிறது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை போலந்து, கஜகஸ்தான், ஜார்ஜியா ஆகிய அணிகளுடன் பகிர்ந்துள்ளது. நேற்று நடந்த 9-வது சுற்றில் போலந்திடம் இந்திய 'ஏ' அணி தோல்வி அடைந்தது. அந்த அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இந்திய 'ஏ' அணி இன்று 10-வது சுற்றில் கஜகஸ்தானுடன் மோதுகிறது.

    சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய 'ஏ' அணி மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் இன்று களம் காணுகிறது. அந்த அணியில் கோனேருஹம், ஹரிகா, தானியா சச்தேவ், வைஷாலி, குல்கர்னி பாக்தி ஆகியோர் உள்ளனர்.

    இந்திய 'பி' மற்றும் 'சி' அணிகள் தலா 13 புள்ளிகள் பெற்று 7 அணிகளுடன் 10-வது இடத்தை பகிர்ந்து உள்ளன. 10-வது சுற்றில் இந்திய 'சி' அணி சுவீடனுடன் மோதுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது. காலை 10 மணிக்கு கடைசி சுற்று தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

    இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாத அந்த அணி 15.4 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹெட்மயர் 56 ரன்கள் அடித்தார். ஹோல்டர், கீமோ பால், ஒடியன் ஸ்மித், ஓபேட் மெக்காய் ஆகியோர் டக் அவுட்டானார்கள். இதையடுத்து இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார். அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது.


    சர்வதேச டி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இதுவே முதல்முறை. அக்சர் படேல் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தைத் தொடங்கினார். பின்னர் குல்தீப் மற்றும் பிஷ்னோய் ஆகியோர் எஞ்சிய ஏழு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    ×