என் மலர்
விளையாட்டு
- அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம், நினைவு பரிசை வழங்கினார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது. அந்த அணியின் நோடிர்பெக் யாகுபோவ், ஜாவோகிர் சிந்தாரோவ், ஷம்சிடின் வோகிடோவ் மற்றும் ஜஹோங்கிர் வாகிடோவ் ஆகியோர் தங்கம் வென்றனர்.
2வது இடம் பிடித்த அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் சர்கிசியன் கேப்ரியல், மெல்குமியன் ஹ்ரான்ட், பெட்ரோசியன் மானுவல் மற்றும் ஹோவன்னிசியன் ராபர்ட் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
இந்திய பி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியின் குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா மற்றும் சத்வானி ரவுனக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

மகளிர் பிரிவு உக்ரைன் அணியின் முசிச்சுக் மரியா, முசிச்சுக் அன்னா, உஷெனினா அன்னா மற்றும் புக்ஸா நடாலியா ஆகியோர் தங்கம் வென்றனர். ஜார்ஜியாவின் டிசக்னிட்ஸ் நானா, பாட்சியாஷ்விலி நினோ, ஜவகிஷ்விலி லேலா, அரபிட்ஸே மேரி ஆகியோர் வெள்ளி வென்றனர்.
இந்திய மகளிர் 'ஏ' அணியின் கோனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் குல்கர்னி பக்தி ஆகியோர் வெண்கலம் வென்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.
ஓபன் பிரிவி தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப்பதக்கம் வழங்கினார். குதிரை வடிவம் கொண்ட தம்பி நினைவு பரிசையும் அவர் வழங்கி கௌரவித்தார். உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அகார்டி டிவோர்கோவிச், அந்த அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
- செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கம் வென்றனர்.
- தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கம் வென்றார்.
சென்னை:
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.
இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
இந்நிலையில், ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர்.
இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி வென்றார். பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.
தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆக்யோரும் வெண்கலம் வென்று அசத்தினர்.
- மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
- மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது.
சென்னை:
86 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.
இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது. இன்று இந்திய ஏ அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
- 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.
- கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது.
சென்னை:
சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் 'பி' அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.
இந்த போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது.
ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அர்மீனியா அணி 19 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
- திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
- இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா வெற்றி பெற்றார்.
சென்னை:
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய மகளிர் பி அணியில் விளையாடிய திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
அதைபோல இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தான் வீராங்கனையை 41-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
- மேற்கிந்தியத் தீவுகளுக்கு கேப்டனாக இருந்த பொல்லார்ட் மூன்று மாதங்களுக்குப் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
- பொல்லார்ட் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார்.
டி20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் பொல்லார்ட். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்து போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஜூன் 2008 இல் பொல்லார்ட் தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 101 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு கேப்டனாக இருந்த பொல்லார்ட் மூன்று மாதங்களுக்குப் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் கிளப் தொடர் மற்றும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார்.
டி20-யில் பொல்லார்டு 1,569 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார். இவர் 99 சிக்சர்களை அடித்துள்ளார். இது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் மூன்றாவது அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். 2012-ல் இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்திய அணியிலும் இவர் இடம் பிடித்தார்.
- மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
- ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 17 பேருக்கு பீடே (சர்வதேச செஸ் கூட்டமைப்பு) மாஸ்டர் பட்டம் வழங்கப்படுகின்றன. உடனடியாக இந்த பட்டங்களை பெற ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்குள் ரேட்டிங் புள்ளிகள் 2,100-யை பெற்று இருக்க வேண்டும். போட்டி முடிவில் மேலும் சில வீரர்கள் பீடே மாஸ்டர் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்த பட்டங்களை பெற்று விட்டனர். ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.
மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பட்டங்களை பெற குறைந்தது 1900 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இருக்க வேண்டும்.
- நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.
- இனி வருபவையாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும்.
சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பர்மிங்காம் காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக்காரனாகி விட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்ஷயா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர், மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட, நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.
இனி வருபவையாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி உள்ளனர்.
ஹராரே:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஒருநாள் போட்டி (3 ஆட்டம்) தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி (5 ஆட்டம்) தொடரை 4-1 என்ற கணக் கிலும் இந்தியா கைப்பற்றியது.
அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடுகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
வருகிற 18-ந்தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. 2-வது போட்டி 20-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் ஹராரேவில் நடக்கிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி உள்ளனர்.
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அேலஷ்கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாகர்.
- இந்திய ‘பி’, இந்திய ‘ஏ’, அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன.
- இந்திய ‘பி’ அணி சுலோவாக்கியாவையும், இந்திய ‘சி’ அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.
சென்னை:
சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் ரவுண்டு கடந்த 29-ந் தேதி தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதன் ஓபன் பிரிவில் 186 அணிகளும், மகளிர் பிரிவில் 166 அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதன் 10-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா பி-உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. இந்திய சி அணி-சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.
ஓபன் பிரிவில் உஸ் பெகிஸ்தான், அர்மெனியா தலா 17 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. டைபிரேக்கர் அடிப்படையில் உஸ்பெகிஸ் தான் முதல் இடத்திலும், அர்மெனியா 2-வது இடத்திலும் இருக்கிறது.
இந்திய 'பி', இந்திய 'ஏ', அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் இந்திய 'பி' அணி 3-வது இடத்திலும், இந்திய 'ஏ' அணி 4-வது இடத்திலும், அமெரிக்கா 5-வது இடத்திலும் உள்ளன. இந்திய 'சி' அணி 28-வது இடத்தில் இருக்கிறது.
இன்று நடைபெறும் 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' ஜெர்மனியை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி அமெரிக்காவுடனும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானுடனும் மோதுகின்றன.
பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3.5-0.5 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் சுவீடனையும் தோற்கடித்தது.
மகளிர் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா, பக்தி குல்கானி ஆகியோரை கொண்ட இந்திய 'ஏ' அணி 17 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தங்கப் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தங்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
போலந்து, அசர்பெய்டான், உக்ரைன் ஜார்ஜியா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் போலந்து 2-வது இடத்திலும், அசர் பெய் ஜான் 3-வது இடத்திலும், உக்ரைன் 4-வது இடத்திலும், ஜார்ஜியா 5-வது இடத்திலும் உள்ளன.
இந்திய 'ஏ' அணி கடைசி சுற்றில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்திய 'பி' அணி சுலோவாக்கியாவையும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.
முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதனால் இன்றைய கடைசி சுற்று மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
- இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது.
- பிவி சிந்து, சரத் கமல், அமித் பங்கால், நிகத் சரீன் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவில் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.
இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரவி குமார் தயா, வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதேபோல் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் பிவி சிந்து, சரத் கமல், அமித் பங்கால், நிகத் சரீன் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
ஹர்மன்பிரீத்சிங் கவூர் தலைமையிலான மகளிர் கிரிக்கெட் அணி, ஆடவர் ஹாக்கி அணி உள்ளிட்டோர் வெள்ளி பதக்கத்தை வென்றது.
பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடம் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
- நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஷரத் கமல் மற்றும் நிகாத் ஜரீன் ஏந்திச் சென்றனர்
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்தில் போட்டியை நடத்திய இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுக் கொடி விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தன. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.






