என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் பிவி சிந்து ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் அவர் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார். இந்த தடையை சிந்து கடந்தால் 3-வது சுற்றில் சூப்பர் பார்மில் உள்ள அன் சி- யங்குடன் (தென்கொரியா) மோத வேண்டி வரலாம். அன் சி- யங்குக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் சிந்து தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த். நிகாத் நிகயேனையும் (அயர்லாந்து) லக்‌ஷயா சென், டென்மார்க்கின் விட்டிங்ஹசையும் , எச்.எஸ்.பிரனாய், ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், சாய் பிரனீத், சோவ் டைன் சென்னையும் (சீனதைபே) முதல் சுற்றில் சந்திக்கிறார்கள்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது.
    • 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    கிங்ஸ்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது.

    இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது.

    கேப்டன் வில்லியம்சன் 33 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கான்வே 29 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜிம்மி நீசம் 15 பந்தில் 33 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஓடியன் சுமித் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் அந்த அணி 13 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

    புரூக்ஸ் 42 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) , ரொமாரியோ ஷெப்பர்டு 16 பந்தில் 31 ரன்னும் (1பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சான்ட்னெர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி நடக்கிறது.

    • இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன்.
    • நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

    சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா 1-வது பெண்கள் அணியில் இடம் பிடித்தவர்களில் ஹரிகா துரோணவல்லியும் ஒருவர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் சொந்த மண்ணில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக உடல்நிலையை பொருட்படுத்தாமல் களம் இறங்கினார். 7 சுற்றுகளில் ஆடிய அவர் அனைத்து ஆட்டங்களிலும் 'டிரா' செய்திருந்தார்.

    வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் சூடிய பிறகு 31 வயதான ஹரிகா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய செஸ் அணிக்காக எனது பயணம் 18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது எனது 13-வது வயதில் தொடங்கியது. இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன். இந்திய பெண்கள் அணிக்காக பதக்கமேடையில் ஏற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு ஒரு வழியாக இப்போது நனவாகி இருக்கிறது. நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

    இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுவது குறித்து கேள்விப்பட்ட போது, எனது டாக்டர் எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்த போட்டியில் விளையாடுவது சாத்தியம் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு எனது சிந்தனை, செயல் எல்லாமே ஒலிம்பியாட்டில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஐக்கியமானது. அதற்காக ஒவ்வொரு அடியையும் முழு அர்ப்பணிப்புடன் எடுத்து வைத்தேன். வளைகாப்பு, விருந்து, கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். எல்லாமே ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற பிறகு தான் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தேன். களத்தில் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தேன். கடந்த சில மாதங்களாக இந்த தருணத்துக்காகத் தான் காத்திருந்தேன். இப்போது அதை அடைந்து விட்டேன். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய பெண்கள் அணி பதக்கத்தை உச்சிமுகர்ந்து விட்டது.

    இவ்வாறு ஹரிகா கூறியுள்ளார்.

    • உலக புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியதன் மூலம் செஸ் விளையாட்டு ஆர்வலர்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது.
    • மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளின் போது உணவு ஒவ்வாமை பிரச்சினை பெரிய அளவில் இருக்குமாம்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 12 நாட்கள் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெளிநாட்டு வீரர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் இரண்டு மெகா அரங்குகள் உருவாக்கப்பட்டு அதில் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. 'சென்சார்' உதவியுடன் இயங்கும் இந்த செஸ் போர்டுகள் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. இவை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் ஏறக்குறைய 360 போர்டுகள் வாடகை அடிப்படையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) வழங்கி இருந்தது. போட்டி முடிந்ததும் அவற்றை 46 நாடுகளுக்கு 2, 3, 4 வீதம் இலவசமாக 'பிடே' வழங்கி இருக்கிறது. மீதமுள்ள செஸ் போர்டுகள் இந்திய செஸ் சம்மேளனம் வசம் இருக்கிறது. அவற்றை இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    11-வது மற்றும் கடைசி சுற்று போட்டி முடிந்ததும் வீரர், வீராங்கனைகள் இருக்கையின் பக்கவாட்டு ஸ்டேண்டில் வைக்கப்பட்டிருந்த தங்களது பெயர் பொறிக்கப்பட்ட பலகை, கடைசியாக எழுதிய ஸ்கோர் சீட்டு, பேனா உள்ளிட்டவற்றை ஒலிம்பியாட்டில் விளையாடியதற்கான நினைவு பொருளாக எடுத்து சென்றதை பார்க்க முடிந்தது.

    மாமல்லபுரம் பகுதியில் உள்ள 21 நட்சத்திர ஓட்டல்களில் வீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் நாட்டு உணவுடன், விதவிதமான இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன. மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளின் போது உணவு ஒவ்வாமை பிரச்சினை பெரிய அளவில் இருக்குமாம். ஆனால் தமிழகத்தில் அது போன்ற புகார்கள் ஏதும் வீரர்கள் தரப்பில் இருந்து வரவில்லை. தமிழகத்தில் கிடைத்த வரவேற்பும், விருந்தோம்பலும் மறக்க முடியாத ஒன்றாக இருந்ததாக போலந்து, மால்டோவா, மான்டினெக்ரோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூறி நெகிழ்ந்தனர்.

    இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 95 நடுவர்கள் பணியாற்றினார்கள். இந்திய நடுவர்களின் தொழில்நுட்பமும், தரமும், செயல்பட்ட விதமும் மிக அருமையாக இருந்தது என்று போலந்து முன்னணி நடுவர் டோமெக் பாராட்டியுள்ளார்.

    சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு பைபரால் செய்யப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பம், ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட குடை, தொப்பி மற்றும் தமிழகத்தில் உள்ள சுற்றுலாதலங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவை பேக்கில் போட்டு வழங்கப்பட்டது.

    உலக புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியதன் மூலம் செஸ் விளையாட்டு ஆர்வலர்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது. அத்துடன் இந்த போட்டியை முன்பு எப்போதும் இல்லாததை விட அதிக பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தற்போது சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளை தங்கள் மண்ணில் நடத்த மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டுவதாக செஸ் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அர்ஜூனா ரணதுங்கா இலங்கை ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.
    • இலங்கை விளையாட்டுத் மந்திரி ரோஷன் ரணசிங்கே இந்த நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் எம்.பி.யுமான அர்ஜூனா ரணதுங்கா இலங்கை ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். இலங்கை விளையாட்டுத் மந்திரி ரோஷன் ரணசிங்கே இந்த நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினையை தொடர்ந்து விளையாட்டு மந்திரி பொறுப்பை நமல் ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து விளையாட்டு கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் உறுப்பினர்கள் அந்த பதவியில் இருந்து விலகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

    15 பேரை கொண்ட விளையாட்டு கவுன்சில் இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து அந்த நாட்டு விளையாட்டு மந்திரிக்கு ஆலோசனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் மற்றும் 3வது இடத்தை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்தனர்.
    • இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்தது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில், 818 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 805 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 3-வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.

    ஐசிசி டி20 சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெசல்வுட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் பத்ரைஸ் ஷம்சி 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3-வது இடத்திலும், உள்ளனர்.

    644 புள்ளிகளுடன் இந்திய வீரர் புவனேஸ்குமார் 9 வது இடத்தை பிடித்தார். யுவேந்திர சாகல் 22வது இடத்திலும், ஹர்சல் படேல் 28 வது இடத்திலும், பும்ரா 34வது இடத்திலும், ரவி பிஷ்னாஸ் 44 இடத்திலும் உள்ளனர்.

    டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் 267 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 3-வது இடத்திலும், உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 13வது இடம் கிடைத்துள்ளது.

    • டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார்.
    • எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

    எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கேள்விக்கு ​​பதிலத்த லத்தீஃப் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்டரான டிகாக்கை குறிப்பிட்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார். இது பெரிய எண்ணிக்கையாகும். டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங், ஒருநாள் போட்டிகளில் 321 கேட்சுகள் மற்றும் 123 ஸ்டம்பிங் மற்றும் டி20 போட்டிகளில் 57 கேட்சுகள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பர் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்தும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும்.

    டோனி ஒரு பெரிய பெயர். ஆனால் நான் புள்ளிவிவரங்களுடன் கூறினால், அவரது (கேட்ச்) தவறவிட்டது 21 சதவீதமாகும். எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள். ஆனால் கைவிடப்பட்ட கேட்சுகளின் எண்ணிக்கை, தவறவிட்ட ஸ்டெம்பிங்கின் எண்ணிக்கை, தவறவிட்ட ரன்-அவுட்களை யாரும் கவனிப்பதில்லை.

    கடந்த 15 ஆண்டுகளில் குயின்டன் டி காக் சிறந்தவர். அவர் மூன்று வடிவங்களிலும் கீப்பிங் மற்றும் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் ஒரு சிறந்த பினிஷராக இல்லை. ஆனால் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். அவருக்கு முன் மார்க் பவுச்சர் மற்றும் குமார் சங்கக்காரா சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தனர்.

    இவ்வாறு லத்தீஃப் கூறினார்.

    • மெக் லானிங் ஐசிசி டி20 தரவரிசையில் 2-வது இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
    • லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு 171 போட்டிகளில் கேப்டனாக இருந்து சாதனை படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிக கேப்டனாக இருக்கும் லானிங் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

    இது குறித்து ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகி கூறியதாவது:-

    அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நம்பமுடியாத பங்களிப்பாளராக இருந்தார். தனித்தனியாகவும் அணியின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை சாதித்து வந்தார். மேலும் இளம் வீராங்கனைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அவர் இருந்து வருகிறார்.

    எங்கள் வீரர்களின் நலன் எப்போதும் எங்கள் முதல் முன்னுரிமையாகும். மேலும் மெக் அவருக்கு தேவையான ஆதரவையும் இடத்தையும் பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா பெண்களின் ஆதிக்கத்தில் முன்னணியில் இருந்தவர் லானிங். கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் ஆஷஸ் தொடரை வென்றார்.

    தற்போதைய நிலையில், லானிங் எப்போது திரும்புவார் என்பது குறித்து உறுதியான தேதி எதுவும் இல்லை. ஏனெனில் அவர் தனது முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கி தனது தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கையை எழுதினார்.

    மெக் லானிங் கூறியதாவது:-

    இரண்டு வருடங்கள் பிசியாக இருந்த பிறகு என் மீது கவனம் செலுத்தி நேரத்தை செலவிடுவதற்கு ஒரு படி பின்வாங்க முடிவு செய்துள்ளேன். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் எனது அணியினரின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர்களில் ஒருவர். தற்போது அவர் ஐசிசி டி20 தரவரிசையில் 2-வது இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

    2010 இல் அறிமுகமான லானிங் 2014 இல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு 171 போட்டிகளில் கேப்டனாக இருந்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு முன்னால் ஆலன் பார்டர் மற்றும் ரிக்கி பாண்டிங் மட்டுமே உள்ளனர்.

    ஆஸ்திரேலியா ஐந்து டி20 ஐ தொடருக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.
    • செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28-ந்தேதி நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    29-ந்தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்றது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது. இந்தப் போட்டியின் முடிவில் இந்தியாவின் 2 அணிகள் வெண்கல பதக்கம் பெற்றன.

    ஓபன் பிரிவில் குகேஷ், நிஹல் சரின், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகி யோரை கொண்ட இந்திய 'பி' அணி வெண்கல பதக்கம் பெற்றது. பெண்கள் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைசாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி வெண்கல பதக்கம் பெற்றது. இது தவிர தனி நபர் பிரிவில் 7 இந்தியர்கள் பதக்கம் பெற்றனர்.

    நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் 2 அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்', பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி‌‌ ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மெனியா வெள்ளியும், பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளி பதக்கமும் பெற்றன.

    • இந்த முடிவால் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும்.
    • நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் புதன்கிழமை தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட்டுடனான (NZC)மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு அவருக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இறுதியாக அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது. இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.

    "போல்ட் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும் மற்றும் டி20 போட்டியில் 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். சமீப காலமாக நியூசிலாந்து அணியுடன் குறைவான பங்கை கொண்டிருந்தார். போல்ட் விளையாட தயாராக இருக்கும் பட்சத்தில் அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

    இது குறித்து டிரெண்ட் போல்ட் கூறியதாவது:-

    இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. இந்த நிலைக்கு வருவதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவது ஒரு குழந்தை பருவ கனவாக இருந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    கடந்த 12 ஆண்டுகளில் பல சாதனைகள் புரிந்தேன். இந்த முடிவு எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை பற்றியது. குடும்பம் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது. அதற்கு முதலிடம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்குப் பிறகு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலும் நான் வசதியாக உணர்கிறேன்.

    இந்த நடவடிக்கையானது நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு இன்னும் பெரிய ஆசை உள்ளது. மேலும் சர்வதேச அளவில் வழங்குவதற்கான திறமை என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், தேசிய ஒப்பந்தம் இல்லாதது எனது தேர்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்ற உண்மையை நான் மதிக்கிறேன். மேலும் இந்த அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன்.

    இவ்வாறு போல்ட் கூறினார்.

    • 28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார்.
    • பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    லண்டன்:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வாள் வீச்சு பந்தயம் 1950 முதல் 1970 வரை இடம் பெற்று இருந்தது. அதன் பிறகு அந்த போட்டி நீக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு முடிந்த பிறகு காமன் வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தனியாக நடத்தப்படும்.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    எப்பி, பாய்ல், சேபர் பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதே போல ஜூனியர் கேடட், வெடரன் மற்றும் பாரா பிரிவுகளுக்கு வருகிற 16-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    நேற்று நடந்த சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.

    28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார். இதில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    சென்னையை சேர்ந்த பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். சேபர் தனி நபர் பிரிவில் அவர் 2-வது முறையாக பதக்கம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தத்தில் காமன்வெல்த் சாம்பியன் ஷிப்பில் அவர் 4-வது முறையாக பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

    பவானி தேவி இதற்கு முன்பு 2009 ஆண்டு மலேசி யாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சேபர் அணிகள் பிரிவில் வெண்கலமும், 2012-ம் ஆண்டு அமெரிக்கா வில் நடந்த போட்டியில் சேபர் அணிகள் பிரிவில் வெள்ளியும், சேபர் தனி நபர் பிரிவில் வெண்கலமும் பெற்று இருந்தார்.

    இது தவிர ஆசிய சாம்பி யன் ஷிப், சேட்டிலைட் சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் டோக்கியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஆவார். அவர் 2-வது சுற்று வரை முன்னேறி இருந்தார். அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதிக்கு நுழைந்ததன் மூலம் அவர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று இருந்தார்.

    காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு பாராட்டுகள் குவிகிறது. 

    • ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.
    • நீங்கள் எதையாவது அதிகமாக நேசிக்கும்போது அதை விட்டு விலகும் நேரம் எப்போதும் கடினமாக இருக்கும்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 40 வயதான இவர் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார். இவர் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க ஓபன் தொடருக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டுக்கான யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்ற பிறகு தனது வாழ்க்கையில் முக்கியமான பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆண்டு அமெரிக்க ஓபனை வெல்ல முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார்.

    ஓய்வு முடிவு குறித்து அவர் பேசுகையில், "வாழ்க்கையில் வேறு ஒரு திசையில் செல்ல முடிவு செய்ய வேண்டிய நேரம் வரும். நீங்கள் எதையாவது அதிகமாக நேசிக்கும்போது அதை விட்டு விலகும் நேரம் எப்போதும் கடினமாக இருக்கும். நான் டென்னிஸை ரசிக்கிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது.

    நான் ஒரு அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை. நான் இதை ஒரு மாற்றமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை பரிணாமம். நான் டென்னிஸிலிருந்து விலகி, எனக்கு முக்கியமான மற்ற விஷயங்களை நோக்கிப் பரிணமித்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு நான் செரீனா வென்ச்சர்ஸ் என்ற மூலதன நிறுவனத்தை தொடங்கினேன். அதன் பிறகு நான் ஒரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் அந்த குடும்பத்தை வளர்க்க விரும்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.

    ×