என் மலர்

  விளையாட்டு

  காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
  X

  காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார்.
  • பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

  லண்டன்:

  காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வாள் வீச்சு பந்தயம் 1950 முதல் 1970 வரை இடம் பெற்று இருந்தது. அதன் பிறகு அந்த போட்டி நீக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு முடிந்த பிறகு காமன் வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தனியாக நடத்தப்படும்.

  22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

  எப்பி, பாய்ல், சேபர் பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதே போல ஜூனியர் கேடட், வெடரன் மற்றும் பாரா பிரிவுகளுக்கு வருகிற 16-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

  நேற்று நடந்த சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.

  28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார். இதில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

  சென்னையை சேர்ந்த பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். சேபர் தனி நபர் பிரிவில் அவர் 2-வது முறையாக பதக்கம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தத்தில் காமன்வெல்த் சாம்பியன் ஷிப்பில் அவர் 4-வது முறையாக பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

  பவானி தேவி இதற்கு முன்பு 2009 ஆண்டு மலேசி யாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சேபர் அணிகள் பிரிவில் வெண்கலமும், 2012-ம் ஆண்டு அமெரிக்கா வில் நடந்த போட்டியில் சேபர் அணிகள் பிரிவில் வெள்ளியும், சேபர் தனி நபர் பிரிவில் வெண்கலமும் பெற்று இருந்தார்.

  இது தவிர ஆசிய சாம்பி யன் ஷிப், சேட்டிலைட் சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

  கடந்த ஜூலை மாதம் டோக்கியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஆவார். அவர் 2-வது சுற்று வரை முன்னேறி இருந்தார். அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதிக்கு நுழைந்ததன் மூலம் அவர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று இருந்தார்.

  காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு பாராட்டுகள் குவிகிறது.

  Next Story
  ×