என் மலர்
விளையாட்டு
- பேட்டிங்கில் திலக் வர்மா, படிதார் ஆகியோர் உள்ளனர்.
- ராகுல் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு லெக் ஸ்பின்னர்கள் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான மூன்று 4 நாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய ஏ அணியை அறிவித்தது.
இந்திய ஏ அணிக்கு பிரியங்க் பஞ்சால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கேஎஸ் பாரத் மற்றும் உபேந்திர யாதவ் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். சர்ஃபராஸ் கான் உள்நாட்டு சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.
ராகுல் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு லெக் ஸ்பின்னர்களும் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக், பிரிசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
முதல் போட்டி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரையிலும், இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 வரையிலும் நடைபெறும். மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறும்.
மூன்று ஒரு நாள் போட்டிகள் முறையே செப்டம்பர் 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் மற்றும் அனைத்து போட்டிகளும் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். ஒருநாள் போட்டிக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும்.
நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:
பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத் (Wk), உபேந்திர யாதவ் (WK), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.
- சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது.
- மற்றொரு பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.
டோக்கியோ:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது. எனினும், அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி 18-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.
- முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
- ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆலி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 149 ரன்னிலும் சுருண்டு சொந்த மண்ணில் 3-வது நாளுக்குள் தோல்வியை தழுவியது. அந்த அணி மொத்தம் 82.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. ஆலி போப் (73 ரன்) தவிர யாரும் அரைசதத்தை கூட எட்டவில்லை.
தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர கலக்கியது. 7 விக்கெட்டுகளை சாய்த்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த நிலையில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆலி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி முதல் ஆட்டத்தில் செலுத்திய ஆதிக்கத்தை தொடர முனைப்பு காட்டும். அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து எழுச்சி பெற இங்கிலாந்து அணி வரிந்து கட்டும்.
எனவே இந்த டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஐக்கிய அரபு அமீரகத்தை ஹாங்காங் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன.
மஸ்கட்:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும். இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்தது.
நேற்று இரவு நடந்த கடைசி 'லீக்' ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. குவைத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 19.5 ஓவரில் 104 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.பின்னர் குவைத் அணி 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதிய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ஆங்காங் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இலக்கை நோக்கி விளையாடிய ஆங்காங் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆங்காங் அணி தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் அந்த அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது.
ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன.
இந்த அணி முதல் போட்டியில் சிங்கப்பூரை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்து குவைத்தை எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
- நியூயார்க் எனது டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி திருப்பு முனையாக இருந்து இருக்கிறது.
- 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன்.
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனியை சேர்ந்த 34 வயது ஏஞ்சலிக் கெர்பர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அத்துடன் அவர் கர்ப்பம் காரணமாக வருகிற 29-ந் தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
இது குறித்து ஏஞ்சலிக் கெர்பர் தனது டுவிட்டர் பதிவில், 'அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். ஆனால் இறுதியாக கர்ப்பமாக இருப்பதை சுட்டிக்காட்டி இருவருக்கு எதிராக ஆடுவது நியாயமான போட்டியாக இருக்காது என்பதால் விலக முடிவு எடுத்தேன்.
அடுத்த மாதத்தில் இருந்து ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதில் இருந்து ஓய்வு எடுக்க இருக்கிறேன். ஆனால் இது மிகச்சிறந்த காரணத்துக்காக என்று நம்புகிறேன். நான் உங்கள் எல்லோரையும் தவற விடுகிறேன். நியூயார்க் எனது டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி திருப்பு முனையாக இருந்து இருக்கிறது.
இதனால் இந்த வருடமும் வித்தியாசமாக இருக்காது என்று உணர்கிறேன். இங்கு 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன். இதனால் நியூயார்க்குக்கு எனது மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறேன். அதே நேரத்தில் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
- மொமோட்டாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ள பிரனோய் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
- பெண்கள் இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வி
டோக்கியோ:
ஜப்பானில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவின் பிரனோய் மற்றும் லக்சயா சென் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பிரனோய், 21-17, 21-16 என்ற நேர்செட்களில் முன்னாள் உலக சாம்பியனான கென்டோ மொமோட்டாவை வீழ்த்தினார். இதுவரை மொமோட்டாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ள பிரனோய் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

லக்சயா சென்
மற்றொரு ஆட்டத்தில் லக்சயா சென், ஸ்பெயின் வீரர் லூயிஸ் பெனால்வரை 21-17 21-10 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். நாளை நடைபெறும் ஆட்டத்தில் பிரனோய் மற்றும் சென் ஆகியோர் மோத உள்ளனர்.
முன்னதாக, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்- துருவ் கபிலா மற்றும், சிராக் ஷெட்டி -சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகிய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின. ஆனால் பெண்கள் இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.
- ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை.
- இந்திய அணி வரும் 28ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது
புதுடெல்லி:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை. அந்த தொடரிலும் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றினார். ராகுல் டிராவிட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டால், ஆசிய கோப்பை தொடரில் அணியுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி வரும் 28ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
- முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்த தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2 இடங்கள் முன்னேறி உள்ளார். இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரபாடா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா-அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் அப்ரிடி-பும்ரா 828 புள்ளிகளுடன் 4,5-வது இடங்களிலும் உள்ளனர். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.
- ஆவேஷ் கானை விட தீபக் சாகர் பந்துவீச்சில் சிறந்தவர் என பாலாஜி கூறினார்.
- துபாயில் நடைபெறும் போட்டிகளில் அவரை போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் ஆசியக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் இதில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றி பெற்று முதலில் வெற்றி கணக்கை துவங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான எல்.பாலாஜி இந்திய அணியில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் கூடுதல் வீரராக மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை தவிர்த்து புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்துள்ளனர். என்னை பொறுத்தவரை ஆவேஷ் கானை விட தீபக் சாகர் பந்துவீச்சில் சிறந்தவர்.
ஏனெனில் தீபக் சாகர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக காயம் காரணமாக அவர் ஆறு மாதங்கள் விளையாட முடியாமல் போனது அவருக்கு பின்னடைவை தந்துள்ளது.
ஆனாலும் தீபக்சாகர் ஒரு கடினமான உழைப்பாளி அவருக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருந்து நிச்சயம் அந்த இடத்தை அவர் கெட்டியாக பிடித்துக் கொள்வார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அணிக்காக எப்போதுமே செய்வார். மேலும் தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து அவர் பெரிதாக கவலை கொள்ளமாட்டார். நிச்சயம் அவர் மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்.
துபாயில் நடைபெறும் போட்டிகளில் அவரை போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டம். ஏனெனில் புதுப்பந்தில் இருபுறமும் அவரால் ஸ்விங் செய்ய முடியும். தற்போது உள்ள இந்திய அணியில் அவரைப் போன்ற வீரர் நிச்சயம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா பங்கேற்று விளையாடி வருகிறார்.
- புஜாரா ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்தார்.
இந்திய டெஸ்ட் அணி வீரரான புஜாரா இந்திய அணிக்காக இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6792 ரன்களை குவித்துள்ளார். இயல்பாகவே மிகவும் பொறுமையாக விளையாடும் தன்மையுடைய புஜாராவிற்கு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாற்றம் தான் இருந்து வருகிறது. அவரது பேட்டிங் ஸ்டைலே மிகவும் பொறுமையாக விளையாடுவது தான் என்றாலும் அவரது ஆட்டம் இந்திய அணியில் பெரியதாக எடுபடவில்லை.
அதே வேளையில் ஐபிஎல் தொடரிலும் அவருக்கு எந்த அணியிலும் வாய்ப்பு கிடைக்காத வேளையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
A century from just 75 balls for @cheteshwar1. 🤩 💯
— Sussex Cricket (@SussexCCC) August 23, 2022
Just phemeomenal. 💫 pic.twitter.com/z6vrKyqDfp
இந்திய அணிக்காக விளையாடும்போது சற்று சுமாராகவே விளையாடி வரும் இவர் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பை தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புஜாரா ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்த வேளையில் தற்போது இந்த சீசனில் மூன்றாவது சதத்தை சசெக்ஸ் அணிக்காக அடித்து அசத்தியுள்ளார்.
துவக்க வீரராக களமிறங்கிய புஜாரா 90 பந்துகளை சந்தித்து 132 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது அதிரடியின் காரணமாக அந்த அணி வெற்றியும் பெற்றுள்ளது. புஜாரா இப்படி கவுன்டி கிரிக்கெட்டில் ஒரே சீசனில் 3 சதங்களை அடித்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உலகக்கோப்பைக்கு நேரடியாக நுழைவதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதி சுற்றில் ஆட வேண்டிய நிலை வெஸ்ட் இண்டீசுக்கு ஏற்படுகிறது.
பிரிட்ஜ்டவுன்:
ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
50 ஓவர் போட்டிக்கான அடுத்த உலகக்கோப்பையை இந்தியா 2023-ம் ஆண்டு நடத்துகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
4-வது முறையாக உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கிறது. இதற்கு முன்பு 1987, 1996, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்தது. 2011-ல் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக விளையாடும்.
2020-2023 வரை நடைபெறும் ஐ.சி.சி. உலகக்கோப்பை சூப்பர் லீக் முடிவில் 7 நாடுகள் நுழையும். அதன்படி இங்கிலாந்து தகுதி பெற்று விட்டது. இதில் இருந்து இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.
ஜிம்பாப்வேயில் ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை நடைபெறும் உலகக்கோப்பை தகுதி சுற்றில் இருந்து 2 நாடுகள் தகுதி பெறும்.
முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி சூப்பர் லீக் மூலம் உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக நுழைவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் அந்த அணி மெதுவாக பந்து வீசியது. இதனால் ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்தது. குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காததால் அந்த அணியின் 2 சூப்பர் 'லீக்' புள்ளிகள் குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பைக்கு நேரடியாக நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதி சுற்றில் ஆட வேண்டிய நிலை வெஸ்ட் இண்டீசுக்கு ஏற்படுகிறது.
- ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார்.
- ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்த்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபடும் போது பும்ரா போல பந்து வீசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் "எப்படி இருக்கிறது பூம்?" சிரிக்கும் ஈமோஜியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பும்ராவை போல் பந்து வீசுவது போலவும் அதை கொண்டாடுவதும் போலவும் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவரது செயல் மற்றும் கொண்டாட்டம் இரண்டையும் பும்ரா பாராட்டினார். மேலும் க்ருணால் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் இருவரும் வீடியோவிற்கு கமெண்ட் செய்தனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுகிறது.






