என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வில்வித்தையில் இந்திய கலப்பு அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
    • காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டின் வில்வித்தை போட்டியில் இன்று ரிகர்வ் கலப்பு அணி எலிமினேசன் பிரிவில் அதானு தாஸ், அங்கிதா பகத் ஆகியோரை கொண்ட இந்திய அணி 6-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

    காம்பவுண்ட் கலப்பு அணி எலிமினேசன் பிரிவில் பிரவீன் ஓஜஸ்- ஜோதி சுரேகா வெண்ணாம் ஆகியோரை கொண்ட இந்திய அணி 159-151 என்ற புள்ளி கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது.

    காம்பவுண்ட் ஆண்கள் அணி எலிமினேசன் பிரிவில் பிரவின் ஓஜஸ், அபிஷேக் வர்மா, ஜவ்கர் பிரதமேஷ் ஆகியோரை கொண்ட இந்திய அணி 235-219 என்ற புள்ளி கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

    ரிகர்வ் பெண்கள் அணி எலிமினேசன் பிரிவில் அங்கிதா பகத், பஜன் கவூர், சிம்ரன்ஜீத் கவூர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

    ரிகர்வ் ஆண்கள் அணி எலிமினேசன் பிரிவில் அதானு தாஸ், தீராஜ், துஷார் பிரபாகர் ஆகியோர் கொண்ட இந்திய அணி 6-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்தது.

    • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
    • லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

    நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா, ஹாங்காங், ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 9 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. அவைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், நாளை முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. நாளை காலை 6.30 மணிக்கு நடக்கும் முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. 11.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் பாகிஸ்தான், ஹாங்காங் மோதுகின்றன.

    4-ம் தேதி நடக்கும் 3-வது காலிறுதியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் (காலை 6.30 மணி), 4-வது காலிறுதியில் வங்காளதேசம், மலேசியா (காலை 11.30) பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ்கான், முகேஷ் குமார் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    • டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
    • இந்திய ஜோடி வட கொரியாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள், வடகொரிய வீராங்கனைகளுடன் மோதினர். இதில் 3-4 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

    இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
    • இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் மக்காவ் ஜோடியை வீழ்த்தியது.

    ஆசிய விளையாட்டின் பேட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத்-தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் மக்காவ் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியது. இதில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறும்.

    ஆசிய விளையாட்டின் குதிரையேற்றத்தில் இன்று ஜம்பிங் அணி இறுதிப்போட்டி மற்றும் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். விகாஸ் குமார் 4-வது இடமும், கிஷோர் அபூர்வா 12-வது இடமும் பிடித்தனர்.

    • உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • மாட்டிறைச்சி இடம்பெறாதது சர்ச்சையாகி இருக்கிறது.

    இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்கி, ஒரு மாத காலத்திற்கு நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியாக இந்தியா வந்தடைந்துள்ளன. இந்த நிலையில், இந்தியா வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டிறைச்சி தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்றாக ஆட்டிறைச்சி, கோழிக்கறி, மீன் போன்ற அசைவ உணவு வகைகள் வீரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்தனர்.

    இவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் மட்டன் சாப்ஸ், ஆட்டிறைச்சி குழம்பு, பட்டர் சிக்கன் மற்றும் வறுத்த மீன் மற்றும் பாசுமதி அரிசி, ஸ்பகெட்டி மற்றும் போலொனிஸ் சாஸ், காய்கறி புலாவ் மற்றும் ஐதராபாத் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் மாட்டிறைச்சி இடம்பெறாதது சர்ச்சையாகி இருக்கிறது.

    உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், இந்தியா வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாட்டிறைச்சி சேர்க்கப்படவில்லை என்ற கருத்துக்களை நெட்டிசன்கள் முன்வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் சமூக வலைதளங்களில் துவங்கி உள்ளன.

    • உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
    • ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.

    சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆறு ரன்களை மட்டுமே கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
    • 551 சிக்சர்களை அடித்து ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் போட்டிகளின் போது அதிக ரன்களை பெறுவதற்கு புதிய வழிமுறையை பரிந்துரைத்துள்ளார். அதன்படி ஒரு வீரர் 90 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்தால் அதற்கு எட்டு ரன்களையும், 100 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்தால் அதற்கு பத்து ரன்களையும் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக மேலும் பேசிய அவர், பேட்டர்கள் எத்தனை தூரத்திற்கு செல்லும் வகையில் பந்தை அடித்தாலும் அதற்கு ஆறு ரன்களை மட்டுமே கொடுப்பதில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது கிரிஸ் கெயில் போன்ற அதிரடி வீரர்களுக்கு நியாயமற்ற செயல் ஆகும்.

    பந்தை எளிதில் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விடுவதால் ரசிகர்கள் ரோகித் சர்மாவை ஹிட்மேன் என்று அழைக்கின்றனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை பறக்க விட்ட வீரர்கள் பட்டியலில் 551 சிக்சர்களை அடித்து ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் கிரிஸ் கெயில் 553 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

    தனியார் யூடியூப் சேனலில், சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மாற்ற நினைக்கும் விதிமுறை என்ன என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, அவர் இந்த பதிலை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகல்.
    • ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் களமிறங்கி இருக்கிறார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பலர் ஏமாற்றம் தெரிவித்து இருந்தனர்.

    தற்போது இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருப்பது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    2011, 2015 என இரு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் விளையாடி இருக்கும் நிலையில், தற்போது 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவதன் மூலம், மூன்றாவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் விளையாட இருக்கிறார்.

    • முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
    • நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

    ராஜ்கோட்:

    ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி யில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இப்போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நான் பார்முக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் நன்றாக விளையாடினோம். வெவ்வேறு சமயங்களில் சவாலுக்கு ஆளானோம். அந்த சவாலை ஏற்றுக் கொண்டு விளையாடினோம். துரதிஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தை அதிகம் பார்க்க போவதில்லை.

    உலக கோப்பைக்காக 15 பேர் கொண்ட அணியை பற்றி பேசும்போது, எங்களுக்கு என்ன தேவை, யார் சரியாக இருப்பார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் குழப்பமடையவில்லை. நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்" என்றார்.

    • தொடக்க ஆட்ட வீரராக களமிறங்க ரோகித் சர்மா 81 ரன்களை குவித்தார்.
    • இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில், முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினர்.

    இதில் ரோகித் சர்மா 81 ரன்களை குவித்தார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, விராட் கோலி சதம் அடித்த 56 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இதேபோல், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும், குல்தீப் யாதவ் 2 ரன்களிலும், முகமது சிராஜ் ஒரு ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    பிரசித் கிருஷ்ணா ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது.

    இதனால், ஆஸ்திரேலிய அணி விதித்த வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இருப்பினும், இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதில், முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

    • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
    • மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.

    25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் இந்திய மகளிர் அணியினர் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். சிஃப்ட் சாம்ரா - ஆஷி சௌக்ஷி ஆகியோர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர்.

    ×