என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலகக் கோப்பை 2023 தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
    • உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருப்பதை அடுத்து, ஒவ்வொரு அணியும் அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியும் களம் காண்கிறது. இதற்காக நெதர்லாந்து அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு வலை பயிற்சியில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர் பால் வான் மீக்கெரென், பயிற்சிக்கு பிறகு நெட்சில் பந்து வீசிய இளம் வீரருக்கு தனது காலணிகளை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோவில் புதிய விளக்கம்.
    • உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேற்று (செப்டம்பர் 25) வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரல் ஆனதோடு, பரபரப்பையும் கிளப்பியது. வீடியோவில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், கடத்தப்படுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    குழப்பத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோ அமைந்து உள்ளது. அதன்படி கவுதம் கம்பீர் நேற்று வெளியிட்ட வீடியோ ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விளம்பரம் என்று தெரியவந்துள்ளது.

    எவ்வித தகவலும் வழங்காமல், கவுதம் கம்பீர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது விளம்பரம் என்று தெரியவந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரமாகவும் மாறி இருக்கிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக நாடு முழுக்க போட்டிகளை நடத்த பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது.
    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டி வங்காளதேசம் அணியுடன் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

    2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது. இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணியினருக்கு பட்டாடை அணிவித்து பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளன.

    ஆப்கானிஸ்கான் அணி உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தர்மசாலாவில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இது உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி ஆகும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா சாஹிதி கேப்டனாக இருக்கிறார். இவர் தவிர ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சாட்ரான், ரியாஸ் ஹாசன், ரகமது ஷா, நஜிபுல்லா சட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகிள், அசமதுல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரகுமான் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

    • ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூரை வீழ்த்தியது.
    • ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ஆசிய விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் இன்று ஆண்கள் அணிகள் பிரிவில் சவுரவ் கோஷ், அபய்சிங், மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சந்து ஆகியோரை கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

    இதேபோல், பெண்கள் அணிகள் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

    • படகு போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    • இதன் மூலம் இந்தியா மொத்தம் 4 வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

    படகு போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது.

    தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்க பதக்கமும், சிங்கப்பூர் வெண்கல பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • முதல் பாதியில் இந்தியா 6-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்திய அணி கோல் மழை பொழிந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், இன்று ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி, சிங்கப்பூர் அணியும் மோதின.

    முதல் பாதி முடிவில் இந்திய அணி 6-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது.

    இறுதியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.
    • இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து வந்தது.

    ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி சார்பில் களமிறங்கிய சமாரி மற்றும் அனுஷ்கா முறையே 12 மற்றும் 1 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த விஷ்மியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பிறகு வந்த ஹாசினி மற்றும் நிலாக்ஷி முறையே 25 மற்றும் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து வந்தவர்கள் அதிக ரன்களை எடுக்காத நிலையில், இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து வெறும் 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிடாஸ் சத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

    ராஜேஷ்வரி கெய்க்வாட் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரக்கர் மற்றும் தேவிகா வைத்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருப்பதை அடுத்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 116 ரன்களை எடுத்தது.

    ஹாங்சோ:

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தோமர் வெண்கலம் வென்றார்.
    • சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

    சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி இரண்டாவது வெண்கலம் வென்றது.
    • சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் நாற்கர ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டாவது வெண்கலம் வென்றனர். இந்தியாவின் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் ஆகியோர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றது.
    • உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் காக்லெஸ் 4 பிரிவில் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர்.

    ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.

    உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது.
    • கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆண்கள் அணி சார்பில் திவ்யான்ஷிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாட்டீல், பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.

    கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×