என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.
    • சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த போட்டியில் முகமது சிராஜும் சிறப்பாக செயல்பட்டார். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர்.

    ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அரை இறுதியை நெருங்கிவிட்ட தென் ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதை உறுதி செய்துவிடும். அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், மார்க் ராம், வான்டெர்துசன், கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் குயின் டான் டி காக் 545 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். பந்து வீச்சில் மார்கோ ஜேன்சன், ரபடா, மகராஜ், கோட்சி ஆகியோர் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நெதர்லாந்திடம் மட்டும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

    சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    • பாண்ட்யாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், உலக கோப்பையில் இருந்து விலகியது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அதில், உலக கோப்பையின் எஞ்சிய பகுதியை நான் இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அவர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன், அணியுடன் இருப்பேன். நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது.
    • வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.

    கோவா:

    37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் நடந்தது. இதில் தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது. இதில் தமிழக தடகள அணி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களை பெற்றது. வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.

    தமிழக அணி 114.5 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. சர்வீசஸ் 117 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. தமிழக அணி 2.5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.

    • நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும்.
    • மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.

    10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் உலக கோப்பை போட்டி தொடரில் அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டது. மற்ற 3 அணிகள் எவை என்பதில் போட்டி நிலவுகிறது.

    தென்ஆப்பிரிக்கா 7 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அந்த அணி இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் (+2.290) நல்ல நிலையில் உள்ளது. ஒரு வேளை இரண்டு ஆட்டங்களிலும் தோற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து எந்த இடம் என்பது அமையும்.

    ஆஸ்திரேலியா 6 ஆட் டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி யுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும். 2 வெற்றி அல்லது ஒரு வெற்றி பெற்றால் மற்ற ஆட்டங்களின் முடிவை பார்க்க வேண்டும.

    நியூசிலாந்து அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஒன்றில் தோற்றால் மற்ற அணிகள் முடிவை பார்த்து வாய்ப்பு அமையும்.

    ஆப்கானிஸ்தான் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று உள்ளது. மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ரன் ரேட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவது முக்கியம்.

    பாகிஸ்தான் 6 புள்ளி களுடன் உள்ளது. எஞ்சி உள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். ரன் ரேட்டிலும் நல்ல நிலைக்கு வர வேண்டும். நியூசி லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும். அப்போது மற்ற ஆட்டங்களின் முடிவு சாதகமாக இருக்க வேண்டும்.

    தலா 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு ஏற குறைய வாய்ப்பு முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கடினம். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.

    வங்காளதேசம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    • நியூசிலாந்து 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான் 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது.

    பெங்களூரு:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து குணமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார்.

    • உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.
    • காயம் குணமடையாததால் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். பரிசோதனையில் தசைநாரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் உலக கோப்பையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

    இந்நிலையில், காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி பரேசி- மேக்ஸ் ஓ டாவ்ட் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வெஸ்லி பரேசி அவுட் ஆனார். இதனையடுத்து கேம்ஸ் ஓ டாவ்ட் - அகேர்மான் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் அகேர்மான் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 92 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர்.

    சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே நிலைத்து ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நபி 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான குர்பாஸ் மற்றும் சத்ரான் முறையே 10 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகமத் ஷா தன் பங்கிற்கு 52 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ஷஹிடி 56 ரன்களுடனும், உமர்சாய் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா.
    • பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள்.

    மும்பை:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அசத்தினாலும் ரபாடா, ஜான்சன் போன்ற தரமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவை சமாளிக்க என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று ஆட்டத்தின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில் பின்வருமாறு;-

    ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா? நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா. குறிப்பாக அதில் எத்தனை பந்துகள் பவுண்டரிக்கு சென்றன என்பதை பார்த்தீர்களா? பொதுவாக ஷார்ட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் பந்துகளாக இருந்தாலும் நீங்கள் சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்டாவீர்கள்.

    ஆனால் அதில் நான் 2, 3 முறை அவுட்டானால் உடனடியாக இவருக்கு இன்ஸ்விங் பந்துகளை அடிக்க தெரியாது, பந்து வேகமாக வந்தால் கட் ஷாட் அடிக்கத் திணறுவார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள். ஆனால் நீங்கள்தான் அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள்

    என்று கூறியுள்ளார்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்கா உடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்த 92 ரன்கள் எடுத்தது.
    • இறுதியில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி பரேசி- மேக்ஸ் ஓ டாவ்ட் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வெஸ்லி பரேசி அவுட் ஆனார். இதனையடுத்து கேம்ஸ் ஓ டாவ்ட் - அகேர்மான் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் அகேர்மான் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 92 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர். குறிப்பாக 4 வீரர்கள் ரன் அவுட் ஆனார்கள். சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே நிலைத்து ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனால் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நபி 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும்.
    • 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கை - இந்தியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

    உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர்கான் (23 ஆட்டத்தில் 44 விக்கெட்), ஸ்ரீநாத் (34 ஆட்டத்தில் 44 விக்கெட்) ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். இந்த வரிசையில் 4-வது இடத்தில் பும்ரா (33 விக்கெட்) உள்ளார்.

    உலகக் கோப்பையில் முகமது ஷமி ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் அதற்கு மேல் சாய்ப்பது இது 3-வது முறையாகும். உலகக் கோப்பையில் அதிக தடவை 5 விக்கெட் வீழத்திய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை (இவரும் 3 முறை) சமன் செய்தார்.

    ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும். இந்தியர்களில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் இவர் தான். ஸ்ரீநாத், ஹர்பஜன்சிங் (தலா 3 முறை) அடுத்த இடத்தில் உள்ளனர்.

    பல்வேறு சாதனைகளை படைத்த முகமது சமிக்கு ஆப்கானிஸ்தான் ரசிகை சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மைதானம் அவருக்கு சொந்தமானது. என்ன ஒரு அற்புதமான வீரர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்துகிறது.
    • நியூசிலாந்து அணி 7 ஆட் டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    பெங்களுரூ:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றி கட்டாயத்தில் களம் இறங்குகின்றன.

    நியூசிலாந்து அணி 7 ஆட் டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. அரை இறுதி வாய்ப்பை வலுப்படுத்தி கொள்ள நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது நியூசிலாந்துக்கு கட்டாயமாகும். இதனால் வெற்றி பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும்.

    அந்த அணியில் கான்வே, ரவீந்திரா, பிலிப்ஸ், டாம்ல தாம், மிட்செல், சான்ட்னர், போல்ட், ஹென்றி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    பாகிஸ்தான் 7 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற ஆட்டங்களின் முடிவுகளும் சாதகமாக இருக்க வேண்டும்.

    இதனால் பாகிஸ்தான் வெற்றிக்காக போராடும். அந்த அணியில் அப்துல்லா ஷபீக், கேப்டன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், பாகர் ஜமான், அப்ரிடி, ஹா ரிஸ்ரவூப் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    நாளை மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலியா 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அரை இறுதி வாய்ப்பை அதிகரித்து கொள்ள இப்போடடியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது.

    அந்த அணி கடைசி நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் நாளைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டத்தில் தோற்றது. இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.

    எஞ்சிஉள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைப்பது மிகவும் சிரமம். அந்த அணி ரன் ரேட்டிலும் (-1.652) மிகவும் மோசமாக உள்ளது. இருந்த போதிலும் உலக கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் அந்த இலக்கை அடைய இங்கிலாந்து முயற்சிக்கும்.

    இன்று மதியம் 2 மணிக்கு லக்னோவில் நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    • ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

    ×