என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலக கோப்பை 2023 - காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல்
- உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.
- காயம் குணமடையாததால் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். பரிசோதனையில் தசைநாரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் உலக கோப்பையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story






