என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும்.
    • நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது.

    ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும். நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது. இழைகள் என்பது மெல்லிய நூல் போன்ற அமைப்பாகும். இழைகளின் தோற்றம் மற்றும் தன்மையின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்க பயன்படும் துணி இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று இயற்கை துணி மற்றொன்று செயற்கை துணி.

    இயற்கை துணி வகைகள்:

    இயற்கையான மூலப்பொருட்களான பருத்தி, சணல், வாழை நார், கற்றாழை நார், பட்டுப்புழு போன்ற பொருட்களில் இருந்து இவ்வகை துணிகள் தயாரிக்கப்படுகிறது.

    பருத்தி:

    இயற்கையான முறையில் கிடைக்கும் இவ்விழைகளில் ஈரப்பதத் தன்மை உள்ளது. எனவே வெயிலில் உடலை குளுமையாக உணரச்செய்யும். மேலும் காட்டன் நூலிழைகளில் காற்று புகும் தன்மை உள்ளது. எனவே எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். வியர்வையை நன்றாக உறிஞ்சும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நம்மை பருத்தி ஆடை பாதுகாக்கும்.

    ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே தோல் நோய் உள்ளவர்கள் பருத்தி ஆடை அணிவது நன்று. சித்த மருத்துவ நூல்கள் பருத்திக்கு உள்ளழலாற்றி செய்கை இருப்பதாக கூறுகிறது. எனவே இதை அணியும்போது உடல் வெப்பம் தணியும்.

    சணல்:

    சணல் இழைகளினால் உருவாக்கப்படும் ஆடைகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடை காலங்களில் அணிவதற்கு இது ஏற்ற துணியாகும். ஏனெனில் செயற்கை துணியை போன்று வியர்வையை ஏற்படுத்தாது. வியர்வையை உறிஞ்சும் தன்மையும் இதற்கு அதிகம். மேலும் புற ஊதா கதிர்களை உறிஞ்சாது. இதிலுள்ள பைட்டோகெமிக்கல்ஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை பெற்றுள்ளது.

    வாழை நார்:

    மற்ற இயற்கை துணி வகைகளை போலவே இது ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. நுண்ணுயிர்களை எதிர்த்து போராடுவதோடு, சூரியனின் தீங்கான கதிர்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தோல் நோய்கள் உள்ளவர்களும், இதை பயன்படுத்தலாம்.

    வாழை நாரினால் ஆன ஆடைகளை தொடர்ந்து உடுத்தி வரும்போது மகப்பேற்றிற்கு பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் அறுவை சிகிச்சை தழும்புகள் விரைவில் மறையும்.

    கற்றாழை நார்:

    கற்றாழையில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எனவே இவற்றின் நாரை கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சரும செல்கள் புத்துயிர் பெற உதவுகிறது. ஆண்டிபேக்சரியல், ஆன்டிவைரஸ், ஆன்டிப்ருரிடிக் போன்ற பண்புகள் உள்ளதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. குழந்தைகளின் ஆடைகளை தயாரிக்க இந்த வகை நார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மூங்கில் நார்:

    மூங்கிலின் இலை மற்றும் தண்டு பகுதியில் இருந்து நார்கள் பிரிக்கப்பட்டு ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில் நுண்ணிய இடைவெளிகள் நிறைய உள்ளதால் வியர்வையை நன்கு உறிஞ்சி காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். பருத்தியை விட மென்மையான இதன் இழைகள் ஆடைகள், துண்டுகள், முக மூடிகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

    மூங்கில் இழைகளில் ஆன்டிபங்கள், ஆன்டிபேக்ட்ரியல், பேக்டீரியாஸ்டிக் போன்ற பண்புகள் உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் இவ்வகை ஆடை உடல் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

    தாமரை நார்:

    தாமரை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளை அணியும்பொழுது மன அமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை தொடர்ந்து அணியும்போது தலைவலி, இருதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை குணமாவதாக கூறப்படுகிறது.

    மேலும் மற்ற இயற்கை துணி வகைகளை போன்று இதுவும் ஈரத்தை நன்றாக உறிஞ்சும். காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். அணிவதற்கு மிருதுவாகவும், சவுகரி யமாகவும் இருக்கும். தாமரை இழைகளினால் ஆன ஆடைகளில் கறை படியும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    பட்டு:

    பட்டு ஆடைகள் உடலுக்கு பலவித நன்மைகளை கொடுக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை பட்டாடை தடுக்கும். தோலில் உள்ள ஈரபதத்தை தக்க வைக்கும். இதில் உள்ள ஆல்புமென் என்ற வேதிப்பொருள் சருமத்தின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

    இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய செல்கள் நிறைய உற்பத்தியாகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது. இதனையே சித்த மருத்துவ நூல்களில் உடலுக்கு ஒளியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    பட்டில் இயற்கையாக உள்ள ஒருவகை புரதம் (ஹைபோ அலர்ஜெனிக்) ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே இது கரப்பான் (எஜிமா), ஆஸ்துமா போன்ற நோயுள்ளவர்களுக்கு ஏற்ற உடையாகிறது.

    பட்டுத்துணியில் ஆன்டிபங்கள் பண்புள்ளதால் பூஞ்சைகளினால் ஏற்படும் நோய்தொற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் சுத்தமான பட்டாடை அணியும் போது வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமும் கிடைக்கும். பட்டாடைகளை தொடர்ந்து அணிந்து வரும் போது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி நல்ல உறக்கத்தை கொடுக்கிறது.

    சித்த மருத்துவ நூல்கள் பட்டாடை அணியும் போது மனம் தெளிவு பெறும் என்றும், கபம் நீங்கும் என்றும் கூறுகிறது. வெண் பட்டினால் ஆன ஆடையை அணியும் போது குளிர் மற்றும் காய்ச்சல் குணமாகும், வாத நோய்கள் நீங்கும்.

    கம்பளி:

    கம்பளி துணிகள் குளிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்சுலேட்டர் போன்று செயல்பட்டு உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும். கம்பளி ஆடையினை அணியும் போது நீரேற்றம், தலைவலி, வாத நோய்கள் நீங்கும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

     செயற்கை துணி வகைகள்:

    செயற்கை துணிகள் என்பது வேதியியல் செயல்முறைகள் மூலம் உருவாகும் துணியாகும். ரேயான், நைலான், வெல்வெட், பாலியெஸ்டர் போன்றவை செயற்கை துணி வகைகளாகும்.

    ரேயான்:

    ரேயான் துணிகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இதிலுள்ள வேதிப்பொருட்கள் தோலின் மூலம் கிரகிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்தும். ரேயான் துணி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சல்பியூரிக் மற்றும்நிட்ரிக் ஆசிட் தோலில் அரிப்பு ஏற்படுத்தும். குமட்டல், வாந்தி, நெஞ்சு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற குறிகுணங்களும் ஏற்படும்.

    பாலியஸ்டர்:

    பாலியஸ்டர் துணியில் இருந்து வெளிவரும் பைடோஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அணியும் போது ஏற்படும் அதிக உடல்சூடு மற்றும் வியர்வையால் தோலில் அரிப்பு மற்றும் படைகள் ஏற்படும். வெகு நாட்கள் இவ்வகை ஆடைகளை அணியும் போது சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நைலான்:

    நைலான் ஆடை அணியும்போது உடல் வெப்பம் வெளியேறாது. உடல் வெப்பத்தால் ஆடையில் இருந்து வெளியேறும் பார்மல்டெக்ஸ் தோலில் அரிப்பு, கண்ணில் நீர்வடிதல் போன்ற குறிகுணங்களை ஏற்படுத்தும்.

    நைலான் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாரியம் சல்பேட் மற்றும் டைட்டானியம் ஆக்சைடு தோலை கருமை நிறமடையச் செய்யும். மேலும் இது நரம்பு மண்டலத்தை தாக்கி தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

    ஜீன்ஸ்:

    ஜீன்ஸ் உடை ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையினரால் அணியப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாக அணிவதால் காற்று உள்புகாமல் உடம்பு சூடாகும். இதனால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. பெண்களுக்கும் கருப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். எனவே நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது சுரக்கின்ற வியர்வை வெளியேறாமல் அதிலிருந்து நுண்கிருமிகள் உற்பத்தியாகி படர்தாமரை போன்ற சரும பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமல்லாமல் ஜீன்ஸ் அணிவதால் சிறுநீர்பாதை தொற்று, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    மேலும் இது அடிவயிற்றில் இருந்து தொடைப்பகுதி வழியாக செல்லும் மெல்லிய நரம்புகளை அழுத்துவதால் கடுமையான கால் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

    இயற்கை மருத்துவர்

    நந்தினி

    9500676684

    • கும்பகோணத்துக்கு அருகில் பல ஊர்களில் மிக மிக பழமையான சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.
    • அம்மன் ஆலயத்தில் ஒரு ஓலையை கூட தீ அரக்கன் தீண்டவில்லை. சூலத்தின் மீது சுற்றப்பட்டு இருந்த மஞ்சள் துணி அப்படியே இருந்தது.

    கும்பகோணத்தில் சிவாலயங்களுக்கும், வைணவ தலங்களுக்கும் இணையாக சக்தி பீடங்களும் ஆங்காங்கே இருக்கின்றன. கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் அந்த தலங்களை தெரிந்துக்கொண்டு சென்றால் மிக எளிதாக அம்மனை வழிபட்டு வரமுடியும்.

    கும்பகோணத்தில் பெரும்பாலும் திரவுபதி அம்மன் ஆலயங்கள் பல இருக்கின்றன. கும்பகோணம் புறநகர் பகுதிகளிலும் நிறைய அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன. கும்பகோணத்துக்கு அருகில் பல ஊர்களில் மிக மிக பழமையான சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.

    அந்த அம்மன் ஆலயங்களில் பெரும்பாலானவை பிரார்த்தனை தலங்களாகவும், பரிகார தலங்களாகவும் திகழ்கின்றன. கும்பகோணத்துக்குள்ளும் சில சிறப்பான அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன. அதில் தனித்துவம் கொண்டது படிதாண்டா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும்.

    இந்த ஆலயம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் தெற்கு வீதி பகுதியில் அமைந்து இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் இருந்த பகுதி குடிசைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. அங்கிருந்து இந்த அம்மன் பக்தர்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.


    அதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு நடந்ததாக செவிவழி செய்திகள் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த அந்த சம்பவம் விவரம் வருமாறு:-

    கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு அருகே ஆதி காலத்தில் நிறைய குடியிருப்புகள் இருந்தன. அவை அனைத்தும் பனை ஓலையால் வேயப்பட்ட வீடுகளைக் கொண்டிருந்தது. அங்கு குடிசை வீடுகளுக்கு மத்தியில் ஒரு இடத்தில் ஓலையால் வேயப்பட்ட அம்மன் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்து வந்தாள்.

    அந்த அம்மன் முன்பு எப்போதும் பெரிய சூலத்தில் மஞ்சள் துணி சுற்றப்பட்டிருக்கும் அருகே ஒரு மரப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். ஒரு நாள் திடீரென்று அந்த பகுதியில் ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றிக் கொண்டது. அந்தத் தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது. அந்த காலத்தில் தீயை அணைக்க போதுமான வசதிகள் இல்லாத நிலை இருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து குடிசைகளும் தீயில் எரிந்து சாம்பலாயின.

    ஆனால் அந்தக் குடிசைகளுக்கு நடுவே ஓலைக் குடிசையில் வீற்றிருந்த அன்னை பரமேஸ்வரியின் ஆலயம் மட்டும் தப்பியது. அம்மன் ஆலயத்தில் ஒரு ஓலையை கூட தீ அரக்கன் தீண்டவில்லை. சூலத்தின் மீது சுற்றப்பட்டு இருந்த மஞ்சள் துணி அப்படியே இருந்தது. அதுபோல அருகே இருந்த மரப்பெட்டிக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

    தீயில் குடிசைகளை இழந்த மக்கள் பரமேஸ்வரி அம்மன் ஆலயம் மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பியதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உண்மையிலேயே அங்கு பராசக்தி குடியிருக்கிறாள் என்பதை முதன் முதலாக உணர்ந்து பக்தி கொண்டனர். இந்த தகவல் கும்பகோணம் முழுவதும் பரவியது. மக்கள் அலை அலையாக வந்து அதிசயத்தைக் கண்டு வியந்தனர். அன்னையின் அதீத சக்தியை உணரத் தொடங்கினர்.

    அதற்கு பிறகு அந்த குடிசையில் உள்ள அம்மனை தேடி மக்கள் அதிகளவு வரத்தொடங்கினார்கள். உண்மையான பக்தியுடன் வந்தவர்களுக்கு எல்லாம் அங்கு நினைத்தது நடந்தது. இதனால் அந்த குடிசை அம்மனின் புகழ் மேலும் பரவியது. பலன் அடைந்த பக்தர்கள் அம்மனுக்கு நிறைய பணிவிடை செய்யத் தொடங்கினார்கள்.

    இதன் காரணமாக ஓலைக் குடிசையில் இருந்த அம்மன் ஓட்டுக் கட்டிடத்திற்கு மாறினாள். அடுத்தடுத்த திருப்பணிகளால் இந்த ஆலயம் மேம்பட்டது. வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளும் அன்னையின் வழிபாடுகளில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின.

    அதுபோல அன்னையின் பெயரும் படிதாண்டா பரமேஸ்வரி எனும் பெயருக்கு மாறியது. அந்த பெயருடன் இன்றும் படிதாண்டா பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறாள். 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தின் முகப்பு, சாலையிலேயே அமைந்துள்ளது. உள்ளே நுழைந்து சில அடி தொலைவு கடந்தால் வலது புறம் அன்னையின் ஆலயம் இருப்பதை பார்க்கலாம். ஆலயத்தின் உள்ளே அழகிய மகா மண்டபத்தை அடுத்துள்ள கருவறை முகப்பை சுதையாலான நீலகண்டேஸ்வரியும் பவள கண்டேஸ்வரியும் அலங்கரிக்கின்றனர்.

    கருவறையில் அமர்ந்த நிலையில் அன்னை பரமேஸ்வரி எட்டுக் கரங்களுடன் இன்முகம் காட்டி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் எதிரே மகாமண்டபத்தில் பைரவரின் திருமேனி உள்ளது. பொதுவாக சிங்க வாகனம் இருக்க வேண்டிய இடத்தில் பைரவர் அமர்ந்து அருள்புரிவது இந்த தலத்தின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

    மகாமண்டபத்தின் இடதுபுறம் பெரிய சூலம் இருக்க, அதன் இருபுறங்களிலும் விநாயகரும் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

    பூஜை முடிந்து ஆலயம் பூட்டப்பட்ட பிறகு கருவறைக்குள் இருந்து சலங்கை ஒலி கேட்பதாக அருகே குடியிருக்கும் பக்தர்கள் கூறுகின்றனர். இப்போதும் கூட முக்கிய நாட்களில் சலங்கை ஒலி சத்தம் கேட்பதை மக்கள் கேட்டுள்ளனர். அம்மன் அந்த ஆலயத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவளாக அருள்பாலித்து வருகிறாள் என்பதற்கு இதை எடுத்துக் காட்டாக சொல்கிறார்கள்.

    அன்னையின் கருவறையில் உள்ள மரப் பெட்டி மார்கழி மாதம் முதல் நாள் திறக்கப் படும். பெட்டியில் இருக்கும் பவள காளி, பச்சைக் காளி என்ற இரண்டு சிலைகளும் வெளியே எடுக்கப்பட்டு அலங்காரம் செய்யப் படும். இந்த இரண்டு சிலைகளும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவை.

    பெட்டி திறக்கப்பட்ட நாள் முதல் 48 நாட்கள் வரை இரண்டு காளிகளும் மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். பின்னர், தை மாதம் குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டும் வைபவம் நடைபெறும். மறுவாரம் செவ்வாயன்று காலை 10 மணிக்கு அன்னையர் புறப்பட்டு காவிரி நதிக்கரை சென்றுவிட்டு, இரவு 10 மணிக்கு காவிரி நதியில் இருந்து அக்னி சக்தி கரம், அக்னி கொப்பரை, தீப்பந்தம் சூழ வீதி வலம் சென்று பின்னர் ஆலயம் வந்து சேருவார்கள்.

    இந்தத் திருவிழாவுக்கு கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அம்மனின் அருளை பெற்று விழாவை கண்குளிரக் கண்டு களிப்பார்கள்.

    திருவிழாவின்போது மணமாலை வேண்டும் கன்னியருக்கும் மகப்பேறு வேண்டும் பெண்களுக்கும் அன்னைக்கு சாத்தப்பட்ட வளையல்களை பிரசாதமாகத் தருகின்றனர். அதைப் பெற்றவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கிறதாம்.


    48 நாட்கள் விழா நிறைவு பெற்றதும் பச்சைக் காளி, பவளக் காளி சிலைகள் மறுபடியும் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு விடும். அந்த மரப்பெட்டியை அன்னையின் கருவறையில் வைத்து விடுவார்கள். பின்னர் அடுத்த ஆண்டுதான் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு காளி சிலைகள் வெளியில் எடுக்கப்படும். இது இந்த ஆலயத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய முறையாக உள்ளது.

    இந்த ஆலயத்தில் அன்னை பரமேஸ்வரி தனது கருவறையின் படியைத் தாண்டுவது இல்லை. அன்னையின் சார்பாக பச்சைக்காளி, பவளக் காளி என இருவரும்தான் திருவிழா நாயகிகளாக இருந்து வீதிஉலா சென்று வருவார்கள். இதன் காரணமாகவே மூலவர் அன்னைக்குப் 'படி தாண்டா பரமேஸ்வரி' என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

    தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. கந்தசஷ்டி தினத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அன்னதானமும் நடக்கின்றது. தேய் பிறை அஷ்டமியில் அன் னையின் முன் மகா மண்ட பத்தில் அருள்பாலிக்கும் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    அன்னை படிதாண்டா பரமேஸ்வரியிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து அவர்களை மகிழ்வோடு வாழ வைப்பதில் அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.

    கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம்- தஞ்சை பஸ் சாலையில் உள்ளது இந்த ஆலயம். கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் நேரம் ஒதுக்கி படிதாண்டா பரமேஸ்வரியை பார்த்து வாருங்கள்.

    கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் நடைபெறும் திருநடன உற்சவம் புகழ் பெற்றது. இந்த உற்சவம் நடைபெறும் சமயத்தில் சென்று வந்தால் ஆலய வழிபாட்டில் வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

    • மன்னருடன் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டார்.
    • சுவாமி விவேகானந்தர் ரெயிலை விட்டு இறங்கி ரெயில் நிலையத்திலேயே செங்கல்பட்டு மக்களிடையே பத்து நிமிடம் உரையாற்றினார்.

    சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டார். `அமெரிக்க நாட்டின் சகோதர சகோதரிகளே!` எனத் தொடங்கி அவர் பேசிய பேச்சு பற்றி எங்கும் பேசப்பட்டது.

    குருவருளால் ஒரே நாளில் உலகப் புகழ் அவரை வந்தடைந்தது. சிகாகோவிலேயே மேலும் தங்கி, பற்பல இடங்களில் சொற்பொழிவாற்றி இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தினார்.

    பின்னர் அவர் வெற்றிகரமாக இந்தியா திரும்பினார். அதற்குள் இந்தியாவிலும் அவரது புகழ் விவரிக்க இயலாத அளவு பன்மடங்கு கூடியிருந்தது. இந்திய மக்களிடம் அவரைத் தெய்வமாகக் கருதும் மனப்பான்மை தோன்றிவிட்டது.

    இந்தியா வரும் வழியில் பொங்கல் விழா நடைபெறும் தருணத்தில் அவர் கப்பலில் இலங்கை வந்து சேர்ந்தார். இலங்கையில் சுவாமிகளை வரவேற்க அவரின் சகோதர சீடரான சுவாமி நிரஞ்சனானந்தர் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்.

    இலங்கையில் சுவாமிஜிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சில நாட்கள் தங்கிய அவர் கண்டி, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார்.

    மீண்டும் கப்பல் பயணத்தை மேற்கொண்டார். ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தை வந்தடைந்தார். அங்கும் அவருக்குப் பெரும் வரவேற்பு காத்திருந்தது.

    விவேகானந்தர் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்த ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி சுவாமிகளை ஒரு ரதத்தில் அமரவைத்து குதிரைகளுக்கு பதிலாக தன் அதிகாரிகளுடன் சேர்ந்து ரதத்தை இழுத்துச் சென்றார். அரண்மனையில் சுவாமிஜிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மன்னருடன் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டார். சுவாமிஜியுடனான உரையாடலில் கிடைத்த ஆனந்த ஆன்மிக அனுபவத்தில் சில நாட்கள் மன்னர் பாஸ்கர சேதுபதி திளைத்து மகிழ்ந்தார்.

    பின்னர் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, மதுரை, கும்பகோணம் எனப் பல இடங்களுக்கும் சென்றார் சுவாமிஜி. அங்கெல்லாம் வேதாந்தக் கருத்துகளை எடுத்துக்கூறிச் சொற்பொழிவாற்றினார்.

    பின் அங்கிருந்து கன்னியாகுமரி வரை வந்து பிறகு சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்தார்.

    தமிழகத்தைச் சேர்ந்த கன்னியாகுமரி, விவேகானந்தர் வாழ்வில் மறக்க முடியாத ஓர் இடமல்லவா? அங்கு கடலில் இருந்த பாறைமீது அமர்ந்து தியானம் செய்து தெளிவு பெற்றுத்தானே அவர் சிகாகோ புறப்பட்டார்?

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரெயில் செங்கல்பட்டு வழியாகத்தான் சென்னை வரும். ஆனால் செங்கல்பட்டில் அதற்கு நிறுத்தம் கிடையாது.

    குறிப்பிட்ட ரெயிலில் சுவாமிஜி வரும் தகவல் செங்கல்பட்டு மக்களை எட்டி விட்டது. அவர்களுக்கு சுவாமிஜியை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் தோன்றியது.

    மக்கள் திரண்டு வந்து, செங்கல்பட்டு ஸ்டேஷனில் ரெயிலை நிறுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்படி எப்படி திடீர் எனச் செய்ய முடியும் என்பதால் மக்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    பொதுமக்கள் உணர்வெழுச்சியோடு ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தனர். அத்தனை பேரும் ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துக் கொண்டனர். இப்போது என்ன செய்வது? ரெயிலை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ரெயில் நிறுத்தப்பட்டது.

    சுவாமி விவேகானந்தர் ரெயிலை விட்டு இறங்கி ரெயில் நிலையத்திலேயே செங்கல்பட்டு மக்களிடையே பத்து நிமிடம் உரையாற்றினார். உலகப் புகழ்பெற்ற மாபெரும் சொற்பொழிவாளர் தங்களுக்கென்றே பேசிய பேச்சை செங்கல்பட்டு மக்கள் கேட்டு மகிழ்ந்தார்கள்.

    தங்கக் குடத்தைத் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற குரல் என்று சட்டம்பி சுவாமிகள் புகழ்ந்தாரே, அந்தக் குரலை அவர்கள் கேட்டு வியந்தார்கள்.

    சாதாரணக் குரலா அது? உலக அளவில் இந்து மதத்தின் பெருமையை நிறுவுவதற்காக ஓங்கிக் குரல் கொடுத்தவரின் குரல் அல்லவா?

    பிறகு செங்கல்பட்டில் இருந்து ரெயில் புறப்பட்டது. 1897 பிப்ரவரி 6-ந் தேதி காலை வீரத் துறவி விவேகானந்தரை அழைத்து வந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    எழும்பூரில் அவரை வரவேற்க, மாபெரும் கூட்டம் கூடியிருந்தது. சுவாமிஜி ரெயிலை விட்டு இறங்கி வலது காலைச் சென்னையில் வைத்த மறுகணம் எழுந்த வரவேற்புக் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

    சுவாமிஜியை வரவேற்கக்கூடிய கூட்டம் பல்வேறு தரப்பட்ட மக்களைக் கொண்டதாக இருந்தது. பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். வியாபாரிகள், நீதிபதிகள், பெண்கள், சென்னை நகரின் முக்கியப் பிரமுகர்கள் என எல்லா வயதினரும், எல்லாத் தரப்பு மக்களும் இருகரம் கூப்பி அவரை வரவேற்றனர்.

    வரவேற்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மங்கல இசை ஒலிக்கத் தொடங்கியது. எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து சுவாமிஜி தங்கவிருந்த ஐஸ் ஹவுஸ் வரை தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், மலர் அலங்காரங்கள் என அந்தப் பிரதேசமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பாண்டு வாத்தியம் முழங்க மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுவாமிஜி அழைத்துச் செல்லப்பட்டார்.

    தனக்காகக் காத்திருந்த வெண்ணிறக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் சுவாமிஜி கால்வைத்து ஏறினார். பின்னர் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

    பல பெண்மணிகள் இளம் வயதிலேயே பெரும் சாதனை புரிந்துள்ள சுவாமிஜியைத் திருஞான சம்பந்தரின் அவதாரம் என்றே கருதினர். அவர்கள் சுவாமிஜி தடுத்தும் கேளாமல் அவருக்கு கற்பூர ஆரத்தி காட்டினர்.

    நிவேதனப் பொருட்களைக் கடவுளிடம் சமர்ப்பிப்பதுபோல் சுவாமிஜியிடம் தேங்காய் பழங்கள் இருந்த தட்டை வழங்கினார்கள் பல அன்பர்கள். அடுத்தடுத்து சுவாமிஜிக்கு மலர்மாலை சூட்டி மகிழ்ந்தார்கள்.

    ஊர்வலம் மக்கள் வெள்ளத்தினிடையே மெல்ல மெல்ல நகர்ந்து கடற்கரைச் சாலையை அடைந்தபோது ஆர்வம் மிக்க இளைஞர்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தாங்களே ரதத்தை இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர். அந்த இளைஞர்களில் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த ராஜாஜியும் ஒருவர்.

    சிந்தாதிரிப்பேட்டை வழியாக நேப்பியர் பூங்கா தாண்டி ஐஸ் ஹவுஸ் வரையில் அந்த ஊர்வலம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது. வீடுகளின் வாயிலில் எல்லாம் கோலமிட்டு மக்கள் சுவாமிஜியை வரவேற்றார்கள். மக்களின் அன்பான உபசரிப்புகளை ஏற்பதற்காகப் பல இடங்களில் சாரட் வண்டியை நிறுத்த வேண்டியிருந்தது.

    இப்படியாக அந்த ஊர்வலம், இப்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படும் அப்போதைய கேசில் கெர்னன் மாளிகையை அடைந்தது. சுவாமிஜியின் அடியவரான பிலிகிரி ஐயங்காருக்குச் சொந்தமான கட்டிடம் அது.

    அந்த மாளிகை முகப்பில் சுவாமிகளை வரவேற்கப் பல முக்கியப் பிரமுகர்கள் ஆவலோடும் பூரண கும்பத்தோடும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

    அளசிங்கர், பாலாஜி ராவ், சிங்காரவேலு முதலியார், கிருஷ்ணசாமி ஐயர், பாஷ்யம் ஐயங்கார், பேராசிரியர் ரங்காச்சாரி, மகாகவி பாரதியாரைப் புதுச்சேரி தலைமறைவு வாழ்க்கைக்கு பத்திரமாக அனுப்பி வைத்த டாக்டர் நஞ்சுண்டராவ் உள்ளிட்ட பலர் சுவாமிகளை பக்திப் பரவசத்தோடு வரவேற்றார்கள்.

    சென்னையில் பல முக்கியமான சொற்பொழிவுகளை சுவாமிஜி நிகழ்த்தினார். விக்டோரியா ஹால், பச்சையப்பர் ஹால் உள்ளிட்ட பல இடங்களில் அவர் உரையாற்றியபோது மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியது.

    சென்னையில் மொத்தம் ஏழு சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தினார். `இந்தியாவின் ரிஷிகள், இந்திய வாழ்க்கையில் வேதாந்தத்தின் பயன்பாடு, பாரதத்தின் எதிர்காலம்` என்பனபோன்ற தலைப்புகளில் அவர் உரைகள் அமைந்தன.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஒன்பது நாட்கள் சென்னையில் தங்கினார் சுவாமிஜி. (1897 பிப்ரவரி ஆறு முதல் பதினைந்து வரை சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்த அந்த ஒன்பது நாட்கள் ஆண்டுதோறும் விவேகானந்த நவராத்திரி என்ற பெயரில் சுவாமிஜி தங்கியிருந்த விவேகானந்தர் இல்லத்தில் கொண்டாடப் படுகின்றன). ஒன்பது நாட்களுக்குப் பின்னர் சுவாமிஜி கொல்கத்தா புறப்பட்டார்.

    அவர் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் சென்னையிலும் ராமகிருஷ்ண மடம் தேவை என்று சில அன்பர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களின் ஆன்மிக ஆர்வத்தைக் கண்ட சுவாமிஜி, ஆசார சீலர்களான சென்னை பக்தர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு துறவியைச் சென்னைக்கு அனுப்பி வைப்பதாகவும் பின்னர் இங்கு ராமகிருஷ்ண மடம் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

    தன்படிச் சிறிது காலத்தில் சென்னைக்கு அனுப்பப்பட்டவர்தான் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என அழைக்கப்பட்ட சசிமகராஜ். அவரே சுவாமி விவேகானந்தரின் கட்டளைப்படி சென்னையில் ராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்தவர்.

    தொடக்கத்தில் தற்போதைய விவேகானந்தர் இல்லத்தில் எளிய அளவில் இயங்கிய ராமகிருஷ்ண மடம் காலப் போக்கில் மயிலாப்பூரில் நிறுவப்பட்டது. மயிலாப்பூரில் முதலில் இருந்த கட்டிடம் சிதைவு படவே மீண்டும் அது புதிதாக எழுப்பப்பட்டது.

    சிறிது காலம் முன்னால் சர்வ சமய சமரசக் கோவிலாக ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆலயமும் பிரம்மாண்டமான முறையில் கட்டி முடிக்கப்பட்டது. இப்போது ராமகிருஷ்ண மடத்தின் கிளைகள் மதுரை, தஞ்சாவூர் எனத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

    மிக உயர்ந்த சமூகப் பணியையும் ஆன்மிகப் பணியையும் ராமகிருஷ்ண மடங்கள் நிகழ்த்தி வருகின்றன. இவற்றிற்கெல்லாம் வித்திட்டது சுவாமிகளின் தமிழக விஜயமும் அதையொட்டிய சென்னை விஜயமும்தான்.

    சுவாமி விவேகானந்தரிடம் சென்னை மக்கள் நேரடியாக வைத்த பக்தி கலந்த வேண்டுகோளின் பயனே இன்றைய தமிழக ராமகிருஷ்ண மடங்கள் எனலாம்.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
    • ஜப்பானில் உள்ள தொலைக்காட்சித் தொடர்களால் இவர் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு ஹீரோ ஆகிவிட்டார்.

    கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு, தாமஸ் ஆல்வா எடிசனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார் -

    3500 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்!

    உலகின் ஆகப் பெரும் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா? சுமார் 3500 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து 'பேடண்ட் கிங்' என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிரோ நகாமட்சு என்பவர் தான்.

    அமெரிக்க சயின்ஸ் அகாடமிக் சொசைடியினால் ஆர்க்கிமிடிஸ், மைக்கேல் பாரடே, மேரி கியூரி, நிகோலா டெஸ்லா ஆகிய பெரும் கண்டுபிடிப்பாளர்களுடன் ஐந்தாவதாக இவரது பெயரையும் சேர்த்துள்ளது ஒன்றே இவர் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர் என்பதைச் சுட்டிக் காட்டும்!

    144 வயது வரை வாழ உறுதி பூண்டிருக்கும் இவருக்கு இப்போது வயது 95.

    பிறப்பும் இளமையும்: ஜப்பானில் வங்கியர் (பேங்கர்) ஆக இருந்த ஹஜிமே நகாமட்சு என்பவருக்கும் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த ஷினோ நகாமட்சு என்பவருக்கும் 26-6-1928-ல் பிறந்தார் யோஷிரோ நகாமட்சு.

    இவரது தாயார் இவரை படிப்பில் நன்கு ஊக்குவித்தார். இவரது முதல் கண்டுபிடிப்பே இவரது தாயார் மீது இவருக்குள் அன்பின் அடையாளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கெரோசின் பம்ப் தான்!

    டோக்கியோ பல்கலைக் கழகத்தில் எஞ்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் தானே தேர்ந்தெடுத்த ஒரு கம்பெனியில் சேர்ந்தார்.

    ஹிடாசி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு மிட்சுயி என்ற நிறுவனத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்தார்.

    அந்தக் கம்பெனியை இவர் தேர்ந்தெடுத்த காரணம் கண்டுபிடிப்புகளை யார் கண்டுபிடித்தாலும் ஜப்பானில் அந்தக் கம்பெனியே அதற்கு உரிமை கொண்டாடும். ஆனால் மிட்சுயி மட்டும் யார் கண்டுபிடித்தாரோ அவருக்கே உரிமையை வழங்கும்.

    கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

    இவர் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கும் விதத்தை விரிவாக விளக்கியுள்ளார்.

    தண்ணீருக்கடியில் ஒரு வித கவசமும் இன்றி மூழ்கி ஆக்சிஜனுக்காகத் திணறுவார். இன்னும் அரை நொடியில் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில் பாதுகாப்பாக மீள்வார். அந்தக் கடைசி நேரத்தில் அவர் மூளையில் பல புதிய எண்ணங்கள் தோன்றும்.

    அவற்றை நீருக்கு அடியிலேயே இருந்து அதற்காகவே உள்ள ஒரு குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    சில கண்டுபிடிப்புகள்: பிளாப்பி டிஸ்கை தானே முதலில் கண்டுபிடித்ததாக இவர் சொல்கிறார். அடுத்து அதற்கான பாதுகாப்பான உறை ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

    பறக்கும் செருப்புகள் என்ற காலணிகளை ஸ்பிரிங்குகள் அமைத்து இவர் கண்டு பிடித்துள்ளார்.

    செரிப்ரக்ஸ் சேர் என்னும் நாற்காலியில் உட்கார்ந்தால் போதும், ஒருவரின் படைப்பாற்றல் திறன் கூடும், காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனைக் கூட்டும், அந்த நாற்காலியையும் இவர் கண்டுபிடித்துள்ளார். பாலியல் உறவில் இன்பம் காண இவரது கண்டுபிடிப்புகள் பல உண்டு. செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி இவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்று.

    இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர். லவ்ஜெட் என்ற இவரது செக்ஸ் படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இது ஒரு ஸ்ப்ரே. இதை 50000 பேரிடம் தந்து அபிப்ராயத்தைக் கேட்ட அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அவர்கள் அனைவரும் இது பயனளிக்கும் ஒன்று என்று கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

    கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும்படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி இவரது பிரபலமான படைப்பில் ஒன்று.

    'ப்யான் ப்யான் பூட்' என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.

    இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இக்நோபல் பரிசு: இவருக்கு 2005-ம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். சுமார் நாற்பது ஆண்டுகளாக தான் உண்ணும் உணவை, உண்பதற்கு முன் போட்டோக்கள் எடுத்து வந்தார் இவர். ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காகவே அவர் இந்த போட்டோக்களை எடுத்து வந்தார்.

    இந்த சாதனைக்காகவே இவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்நோபல் பரிசு வாங்க நேரில் வந்து விழாவில் இவர் கலந்து கொண்டார். அங்கு தனது மருத்துவ நிலை பற்றி ஒரு கவிதையை வேறு இயற்றிப் பாடினார்.

    சுமார் 55 வகை உணவு வகைகளை சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தீர்மானித்து உண்ணுவது இவர் வழக்கம்.

    இது ஏன்? நீண்ட ஆயுளை உறுதி செய்யத் தான்!

    144 வயது. ஒவ்வொரு மனிதரும் நீண்ட ஆயுளைக் கொண்டு வாழ முடியும் என்பது இவரது கொள்கை. தான் 144 வயது வாழப் போவதாக இவர் தெரிவித்துள்ளார். ஆனால் தான் 'புரொஸ்டேட் கேன்சாரால்' பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதை 2013-ல் க் கண்டறிந்த தனது டாக்டர்கள் 2015-க்குள் தனக்கு மரணம் நிச்சயம் என்று சொல்வதாக 2014-ல் இவர் கூறினார்.

    ஆனால் அந்த புற்றுநோயில் இருந்து விடுபட ஒரு விசேஷ தயாரிப்பைக் கண்டுபிடித்து அருந்த ஆரம்பித்தார். இப்போது 95 வயதைக் கடந்து விட்ட இவர் தெம்பாகத் தான் இருக்கிறார்.

    கண்டுபிடிப்பு இல்லம்: இவர் ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்கு எழுந்திருப்பார். தனது இன்னோவேஷன் ஹவுஸ் எனப்படும் கண்டுபிடிப்பு இல்லத்தில் வேலையை ஆரம்பிப்பார். மூன்று அடுக்கு மாடிக் கட்டிடமான இது டோக்கியோவில் இருக்கிறது. விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் கார்பன் நச்சுப்புகை அறவே கிடையாது.

    அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை எனப்படும் காம் ரூம் (Calm Room) அவருக்குப் பெரிதும் உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

    வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, "அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான் எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது" என்கிறார்.

    கண்டுபிடிப்பு நேரம்: நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 4 மணி வரை மிக முக்கியமான கண்டுபிடிப்பு நேரம் என்கிறார் இவர். அப்போது தான் இவருக்குப் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய எண்ணங்கள் தோன்றுமாம்.

    6000 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் இவர்!

    காலை 4 மணி முதல் எட்டு மணி வரை உறங்குவது இவர் வழக்கம்.

    மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் சிந்திக்கிறேன் என்கிறார் இவர்.

    மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேருக்கு படைப்பாற்றல் திறன் பற்றி இவர் சொல்லித் தருகிறார்.

    சுஜி, பிகா, இகி

    தான் எப்படி இப்படி ஒரு மிகப் பெரும் கண்டுபிடிப்பாளராக ஆக முடிந்தது என்பதை சூத்திர பாணியில் இவர் கூறுகிறார்.

    அது தான் - சுஜி, - பிகா - இகி!

    சுஜி என்றால் தியரி அல்லது அடிப்படைக் கொள்கை

    பிகா என்றால் ''எ பிளாஷ் ஆப் இன்ஸ்பிரேஷன்' - ஒரு கணத்தில் உள்ளத்தில் உத்வேகத்தால் எழும் ஒரு மின்னல் தோற்றம்

    இகி என்றால் பிராக்டிகாலிடி - நடைமுறைக்கு இயல்பாக ஒத்து வர வேண்டும்.

    இந்த மூன்றும் இணைந்தால் படைப்பு வெற்றி தான் என்பது இவரது கொள்கை.

    அரசியல் ஆர்வம்: அரசியலில் இவருக்கு அடங்காத ஆர்வம் உண்டு. கண்டுபிடிப்பில் ஒரு அங்கம் தான் அரசியல் என்பது இவரது கண்டுபிடிப்பு. ஆகவே 1995 முதல் டோக்கியோ மேயர் பதவியைக் குறி வைத்து இவர் போட்டியிடலானார். ஆனால் தோல்வியே கிட்டியது.

    ஹாப்பினெஸ் ரியலைசேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

    பாராட்டுகள்: உலகெங்குமுள்ள அறிஞர்களும் பிரபலங்களும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

    இவரது இன்னோவேஷன் ஹவுசில் ஸ்வீடன் அரசருடன் இவர் எடுத்துக் கொண்ட படம், ஜப்பான் சக்கரவர்த்தியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒயிட் ஹவுசில் எடுத்துக் கொண்ட போட்டோ உட்பட ஏராளமான புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

    அங்கு பீத்தோவன் சிம்பனி - 5 ஐ கேட்பது இவரது வழக்கம். அந்த இசை இவருக்கு உத்வேகம் ஊட்டுகிறதாம்!

    தனது கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை வென்றிருக்கும் இவரது வெற்றிப் புராணம் மிகப் பெரியது.

    நியூயார்க் நகரில் 2016-ம் ஆண்டு 'வாழ்நாள் தீர்க்கதரிசன விருது' ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது.

    சம்பாதித்த சொத்து: தனது கண்டுபிடிப்புகளால் உலகப் புகழ் பெற்றுள்ள இவரது சொத்தின் இன்றைய மதிப்பு 5 கோடி அமெரிக்க டாலராகும். ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய இந்திய மதிப்பு ரூபாய் 83.30

    இவருக்கு மூன்று புதல்வர்கள் உண்டு.

    ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் இவர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தொடர்கள் உள்ளிட்ட பல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை போட்டி போட்டு அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன.

    ஜப்பானிய டாக் ஷோக்களில் மிக பிரபலமான இவர், தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

    'தி இன்வென்ஷன்ஸ் ஆப் டாக்டர் நகாமட்சு"

    என்ற ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம் இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.

    ஜப்பானில் உள்ள தொலைக்காட்சித் தொடர்களால் இவர் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு ஹீரோ ஆகிவிட்டார். ஆனால் ஏராளமான ஜப்பானியர்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு இவர் ஒரு படைப்புக் கடவுளே தான்!

    உலகின் அதிசயிக்க வைக்கும் கண்டுபிடிப்பாளராகத் திகழும் இவர் அனைவருக்கும் சொல்வது : "நீங்களும் கூட புதியனவற்றைக் கண்டுபிடிக்கலாம்" என்பதே!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • தர்மம் செய்யச்செய்ய தன்னைப்பற்றி அறியும் சிந்தையும் உலகைப்பற்றி அறியும் சிந்தையும் ஆன்மாவின் இயல்பறியும் தன்மையும் உண்டாகும்.
    • அன்பு என்பது இல்லறத்தானுக்கு உரிய உயர்ந்த பண்பு. அன்பு இல்லையெனில் உலக மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.

    உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லாத விசயங்களே இல்லை. திருக்குறளுக்கு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் விளக்கம் தந்திருந்தாலும், தன்னிலை கண்டு சிவ நிலைக்கு உயர்ந்த ஒப்பற்ற துறவிகள் விளக்கம் கொடுக்கவில்லையே என்ற குறையை போக்கும் விதமாக சிவநிலை கண்ட ஞானி ஓங்காரக்குடில் ஆசான் ஸ்ரீஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தெளிவான் விளக்கங்கள் அளித்துள்ளார். அதன் விவரம்,

    அதிகாரம்: அறன் வலியுறுத்தல்

    சிறப்புஈனும் செல்வமும் ஈனும் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.

    "அறம் செய்தால் இருபத்தொரு தலைமுறைக்கு நன்மை உண்டு" என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறியுள்ளார்.

    அதுபோலவே அறக்கடலாக விளங்கும் திருவள்ளுவரும் அறம் செய்வதில் வழுவாது இருக்க வேண்டும் என்பதை இவ்வதிகாரத்தில் தெரிவிக்கின்றார்."

    தர்மம் சிறப்பை உண்டாக்கும், புகழையும் தரும். உயிர்க்கு அறத்தைவிட உயர்ந்த உபாயம் வேறு எதுவும் இல்லை. உடம்பைப்பற்றிக் கூறாமல் இங்கு உயிருக்கு உபாயத்தைக் கூறியதற்குக் காரணம் என்னவென்றால், உடம்புக்கு நரை, திரை, மூப்பு உண்டு, உயிருக்கு அது கிடையாது. உயிர் குறுகாது, விரியாது, நலியாது, அழியாது. எனவே தர்மம் உயிருக்கு ஆக்கம் தர வல்லது.

    இந்த ஜென்மத்தில் செய்கின்ற புண்ணியம் தொடர்ந்து பல ஜென்மத்தில் உயிரைக் காக்க வல்லதாக இருக்கும். எனவே, அறத்தைவிட, உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவும் இல்லை என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது.

    அறத்தை விட மேன்மையானது வேறு எதுவும் இல்லை. தர்மம் செய்யச்செய்ய தன்னைப்பற்றி அறியும் சிந்தையும் உலகைப்பற்றி அறியும் சிந்தையும் ஆன்மாவின் இயல்பறியும் தன்மையும் உண்டாகும்.

    அறத்தை மறந்தால் கேடு வந்து மீண்டும் பிறந்து, துயரத்தில் சிக்கிக் கொள்வான். அவ்வாறு அறம் செய்தோரை மறக்காமல் அவர்களைப் போற்றுதலும் சிறப்பானதாகும்.

    முடிந்த அளவுக்கு அறப்பணி செய்ய வேண்டும். அதனை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். செய்ய வாய்ப்புக் கிடைத்த இடத்திலெல்லாம் செய்யலாம்.

    குறையில்லாத மனம் எங்கிருக்கிறதோ அங்கு அறம் நிலைத்து நிற்கும். குற்றமில்லாத மனம் இருந்தால் அதுவே அறம். காம தேகம் இருக்கும் வரை அறியாமை இருக்கும்; அழியக்கூடிய பொருள்கள் மீது பற்று இருக்கும். திருவருள் துணை கொண்டு இத்தகைய குணங்களை வென்றவனுக்கு, குற்றமற்ற மனம் இருக்கும். அதுவே அறமாகும். அறத்தை விளம்பரப்படுத்துபவன் தன்னை ஏமாற்றிப் பிறரையும் ஏமாற்றுவான்.

    பொறாமை, ஆசை, வெகுளி, கோபம், கடுஞ்சொல் இந்த ஐந்து குணக்கேடுகளும் ஒருவனிடம் இருக்கும் வரை அவனால் அறம் செய்ய முடியாது, செய்தாலும் பயனற்றதாகி விடும். இந்த கேடுகள் மனதில் சேரா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    இளமை உள்ளபோதே அறப்பணி செய்ய வேண்டும். உடல் நலிந்து முதுமை அடையும் நாளில் துணை நிற்பதும் உதவுவதும் முன் செய்த அறமே ஆகும்.

    பல்லக்கில் வரும் உயர்ந்த அரசன், மேல்நிலையில் இருப்பதாக கருதிக் கொள்பவர்கள் ஆகிய இவர்கள் பல்லக்கை தூக்கி செல்கின்றவனைப் பார்த்து, மேலே அமர்ந்திருப்பவன் புண்ணியவான் என்றோ, கீழே தூக்கிச் செல்பவன் பாவியென்றோ கூறுதல் கூடாது. அந்த பாவபுண்ணியச் செயல்களை நம் மனதில் மட்டுமே அறிதல் வேண்டும்.

    ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்றவர்கள் நாள் தவறாது அறப்பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். சிறந்த முயற்சியுடன் அறப்பணியைச் செய்து வரவேண்டும். அவ்வாறே பூஜையும், புண்ணியமும் தொடர்ந்து செய்தால், மீண்டும் கருப்பைக்குள் செல்லமாட்டான். தவறினால் மீண்டும் கருப்பைக்குள் செல்லுவான்.

    முயன்று தவம் செய்து, அதனால் பெறுவதே சுகம். வேறு வழியில் இன்பம் பெற முயற்சித்தால் அது இன்பமாகவோ, புகழாகவோ இருக்காது. முயன்று செய்துகொள்ளத்தக்கது அறமே.

    மரணமிலா பெருவாழ்வு வாழவேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் தடைபடாது தர்மம் செய்து, பக்தியும் செலுத்த வேண்டும்.

    அறம் செய்யாவிடில் அறியாமை சூழும். அறியாமை சூழ்ந்தால் தவறு செய்வான். அப்போது அவனுக்குப் பழிவரும். பழியில்லாத வாழ்வு வாழ வேண்டுமெனில் அறம் செய்ய வேண்டும். அப்போது சிறப்பறிவு உண்டாகும். அதனால் பெருந்தன்மை உண்டாகும். 

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    அதிகாரம்: இல்வாழ்க்கை

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.

    குடும்பத்தில் இருந்து வாழ்கின்ற முறையைப் பற்றி கூறுவது இல்வாழ்க்கை. இல்லறத்தானுக்கு உரிய பெருமை யாதெனில் சிறந்த அறிவாளியாக இருந்து வறுமையோடு இருந்தாலும், துன்பத்தைத் தாங்கிக்கொண்டு, நெறிபிறழாமல் வாழ்கின்ற சான்றோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ வேண்டும்.

    உண்மைப் பொருள் அறிந்து மரணத்தை வென்ற ஞானிகளின் பாதங்களை பக்தியுடன் பற்றி பூஜை செய்கின்றவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.

    தம்முடைய பார்வையினால் பிறரின் ஊழை (தீவினையை) போக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஞானிகளுக்குப் பணிந்து சேவை செய்யவேண்டும்.

    நன்னெறியில் நடக்கும் சான்றோர். இறைவனிடம் பக்தி செலுத்துகின்ற பக்தன், இறைநிலை அடைந்த ஞானிகள் இவர்களின் தேவைகளைச் சேவையாய் நினைத்து பூர்த்தி செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் வாழ்நாள் முழுவதும் துணையாய் இருந்து சேவை செய்தவரின் குடும்பத்தை அவர்கள் காப்பார்கள்.

    இல்லறத்தான் வீட்டில், உண்மைப் பொருள் அறிந்து வாசி வசப்பட்டு காமதேகத்தை நீத்த ஞானிகள், ஒரு முறை உணவு உட்கொண்டால் மூன்று புவனத்தில் உள்ளவர்கள் உண்டதற்கான புண்ணியம் அந்த இல்லறத்தானுக்குக் கிடைக்கும். உணவு கொடுத்த இல்லறத்தானும் ஞானியாவான். இரண்டாவது முறை சாப்பிட்டால் அந்த உணவை சமைத்த இல்லறத்தானின் மனைவி ஞானியாவாள். மூன்றாவது முறை சாப்பிட்டால் அவனுடைய சந்ததிகள் ஞானியாவார்கள். நான்காவது முறை சாப்பிட்டால் அவனுடைய தாயும் ஞானியாவாள். ஐந்தாவது முறை சாப்பிட்டால் அவனுடைய இருபத்தொரு தலைமுறையும் ஞானியாவார்கள். அத்தகைய பெருமை ஞானியர்களுக்கு உண்டு. அவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிப்பது பெறுதற்கரிய புண்ணியமாகும். இத்தகைய ஞானிகளின் தொடர்பு நமக்கு இருந்தால், நம் அறியாமையை நீக்கி நம்மை தெளிவுபடுத்துவார்கள்.

    உண்மைப் பொருள் அறிந்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வதற்காக மரணத்தை வெல்லும் மார்க்கத்தில் செல்லுகின்ற துறவிகளின் திருவடியைப் பற்றி பூஜை செய்தல் வேண்டும். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

    உறவினர்கள் இல்லாது இறந்தவர்களின் ஈமக்கடன்களை செய்ய வேண்டும். இப்படி செய்வது இல்லறத்தானுக்கு மிகவும் சிறப்பாகும்.

    தென்புலம் என்று சொல்லப்படுவது கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த மண்ணில் அதுவும் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்பம் மிகவும் வெப்பமாகவும் இருக்காது, குளிர்ச்சியாகவும் இருக்காது. இந்த தட்ப வெப்ப நிலை தவத்திற்கு ஏற்றது. எனவே இது ஞான பூமி.

    உலகத்தில் எங்கு புண்ணியம், பூஜை செய்திருந்தாலும் இந்த ஞானபூமியில் பிறந்துதான் ஜென்மத்தைக் கடைத் தேற்றிக்கொள்ள முடியும். இந்த ஞானபூமியில் பிறந்து அறத்தைக் காக்கும் சான்றோர்களும் ஞானிகளும் பலர் உண்டு. அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

    மேலான ஞானிகள் ஒளிநிலை அடைந்த இடங்களும், தெய்வசக்தி வாய்ந்த இடங்களும் பல உண்டு. அந்த இடங்களுக்குச் சென்று பூஜை செய்வதும் புண்ணியம் செய்வதும் மிக்க பலன் தரும்.

    நம்மை நாடி வந்த விருந்தினர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து உபசரிப்பதும், சுற்றத்தாரைப் பாதுகாப்பதும், முறையான வழியில் தன்னை பாதுகாத்துக் கொள்வதும் இல்லறத்தானுக்குரிய சிறப்பான கடமையாகும்.

    பொருள் சேர்க்கும் பொழுது பழிக்கு அஞ்சி பொருள் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த பொருளை தான் மட்டும் அனுபவிக்காமல் துயரப்படுபவரின் துயரங்களையும் போக்க வேண்டும். முறைதவறி பொருள் சேர்த்து தர்மகாரியங்கள் செய்தால், யாரை வஞ்சித்து பொருளை பெற்றோமோ அவருக்கே புண்ணியத்தின் பலன் போய் சேர்ந்துவிடும். முறையாக பொருள் சேர்த்து அவற்றில் புண்ணியம் செய்தால் அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் தடையில்லாமல் நடக்கும், வெற்றியுண்டு.

    சிலர் வெளியில் நல்லவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு சென்றால் மனைவி, குழந்தைகள் நடுங்கும்படியாக இருப்பார்கள். மனைவி, குழந்தைகள் செய்த குற்றங்களை மன்னித்து உறவினர்களும் சுற்றத்தார்களும் வாழ்த்தும்படியாக இருக்க வேண்டும்.

    அன்பு என்பது இல்லறத்தானுக்கு உரிய உயர்ந்த பண்பு. அன்பு இல்லையெனில் உலக மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. மனைவியின் துணையோடு அன்பினால் அறப்பணிகள் செய்து அறத்தை நிலைநாட்ட வேண்டும்.

    பொருளறிந்தவன் அருளறிவான். பொருள் என்பது ஞானிகள், அருள் என்பது திருவடி. உண்மையறிந்தவனே சிறப்பான இல்லறத்தை நடத்துகின்றான்.

    உண்மையறிந்தால் உடற்கூறு அறிவான், மனைவியை அறிவான், பெண்ணின் இயல்பறிவான், ஆணின் இயல்பறிவான், உலகத்தை புரிந்து கொள்வான், இயற்கையைப் புரிந்து கொள்வான், பசி, காமம் இவற்றின் இயல்பறிந்து, உடற்கூற்றை அறிவான்.

    இந்த உடம்பை அதிகமாக காமத்திற்கு பயன்படுத்தினால் நோய் வந்துவிடும் என்பதையும் அறிவான். தன் உடம்பையும் அறிந்து, மனைவியின் உடம்பையும் அறிந்து மென்மையாக அவளை பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த இல்லறத்தான். அந்த உண்மையை அறியாதவன் அவளையும் வருத்தி, தானும் வருந்துவான்.

    மற்றவர்களை நன்னெறிப்படுத்தி தானும் அறத்திலிருந்து தவறாமல் நடந்துகொண்ட உண்மைப் பொருளறிந்தவன், ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வான். அத்தகையவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்களாவர்.

    அறம் என்பது தர்மம், உண்மை, தயைசிந்தை, ஜீவதயவு, மனிதநேயம் போன்ற பண்புகளைப் பொருந்தியது. இத்தகைய அறத்தைச் சார்ந்துள்ள குடும்பத்தில் பிரச்சனைகள் வராது, ஆரவாரம் இருக்காது, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

    அறம் என்பது இல்லறத்திற்கு சிறப்பானது. அறம் செய்யும்பொழுது பிறர் மதிக்கக்கூடிய அளவில் செய்தல் வேண்டும். பிறர் மதிக்காத ஒன்றை அறம் என்று செய்தல் கூடாது. அவ்வாறு செய்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது ஆகும். உலக நடை அறிந்து அறம் செய்தல் வேண்டும். வாழுகின்ற முறையோடு மேற்கூறப்பட்ட முறைகளை கடைப்பிடித்து வாழவேண்டிய நெறிமுறையுடன் வாழ்பவர்கள் வானத்திலுள்ள தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்.

    • ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.
    • திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும்.

    சிவ பெருமானின் 64 ரூபங்களில் ஒன்று பைரவர். இவர் கால பைரவர், சொர்ண பைரவர் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். கையில் திரிசூலம், உடல் முழுவதும் திருநீறு பூசி, நிர்வாண கோலத்தில் காட்சி தரும் பைரவருக்கு நாய் வாகனமாக உள்ளது. ஒரு கோவிலின் காவல் தெய்வமாக விளங்குபவர் பைரவர் தான். சிவாலங்களில் மட்டுமல்ல காசி நகரின் எட்டு திசைகளில் இருந்தும் இவரே அந்நகரை காவல் காப்பதாக ஐதீகம். அதனால் தான் காசி புறப்படுவதற்கு முன் பைரவரை வணங்கி, அவரின் அனுமதியை பெற்ற பிறகு செல்ல வேண்டும் என்பார்கள்.

    பைரவர் பல ஊர்களில், பல பெயர்களில், பல ரூபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பைரவருக்கு என்று தனிக் கோவில்களும் உண்டு. பைரவரை வழிபடுபவர்களுக்கு எம பயம் இருக்காது என்பார்கள். எவர் ஒருவர் பைரவரை மனதார நினைத்து வழிபடுகிறாரோ அவருக்கு பைரவர் எப்போதும் காவலாக இருப்பார். குறிப்பாக சிவ பக்தர்களுக்கு அவர்களின் வழித்துணையாக பைரவர் வருவார் என்பது ஐதீகம். அந்த பைரவரை வழிபடுவதற்குரிய தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் கருதப்படுகிறது. இன்று தேய்பிறை அஷ்டமி தினமாகும்.

    எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணை, நல்லெண்ணை, பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

    ஓன்றில் இருந்து ஒன்றை ஏற்றாமல் தனித் தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரலியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

    தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். பஞ்சதீபம் என்பது இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

    ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, எம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

    வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர் பைரவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போட்டு வணங்குவது சிறப்பு.

    தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றமும். பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியும் பெறலாம்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் , பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

    தினமும் பைரவர் காயத்திரியையும், பைரவி காயத்திரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால் தேன் பழம், வில்வம் இலைகளால் மூலமந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

    ஸ்வர்ணாக ரஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் 9 பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையில் இருந்து விடுபடலாம். 9 வது பவுர்ணமியன்று அவலில் பாயாசம் நைவேத்தியம் செய்யலாம்.

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

    சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

    தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களைக் கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

    அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

    மறுநாள் நவமி அன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டுக்கு எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

    இதனால் இதை பைரவாஷ்டமி என்றும் சொல்வதுண்டு. கஷ்டங்கள், கடன்கள், தீராத பிரச்சனைகள், வழக்கு விவகாரங்கள் தீர வேண்டும் என்பவர்கள் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வந்தால் விரைவில் துன்பங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும். பயங்களை போக்கி, எப்படிப்பட்ட ஆபத்தாக இருந்தாலும் அதிலிருந்து பைரவர் நம்மை காப்பாற்றுவார். அஷ்டமி திதியில் சிவ வழிபாடு செய்வதும் மிகச் சிறப்பானதாகும்.

    தேய்பிறை அஷ்டமிகளில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் அனைத்து விதமான பாவங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்டு, நற்கதியை அடையலாம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தேய்பிறை அஷ்டமி விரதம் இருப்பவர்கள் குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் விரதத்தை கடைபிடிப்பது சிறப்பானது. அஷ்டமி திதி, தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.

    சிவாலயங்களில் முதல் பூஜை விநாயகருக்கு நடைபெறுவது போல், கடைசி பூஜை பைரவருக்கு நடைபெறும். அனைத்து நாட்களிலும் பைரவரை வழிபட்டால் அவருடைய அருள் நிச்சயம் கிடைக்கும். அஷ்டமியில் வழிபடும் போது எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அது நீங்கி விடும். வளர்பிறை அஷ்டமியில் வழிபடுபவர்களுக்கு தொழில் சிறக்கும், வெற்றிகள் குவியும். அஷ்டமி திதி அன்று சிவப்பு நிற மலர்கள் சாத்தி, தயிர் சாதம், மிளகு சேர்த்த உளுந்து வடை, சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.

    ஐந்து வகை எண்ணையை பயன்படுத்தி, ஐந்து தனித் தனி அகல்களில் விளக்குகள் ஏற்றி பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். நல்லெண்ணை, இலுப்ப எண்ணை, தேங்காய் எண்ணை, நெய், விளக்கு எண்ணை கொண்டு ஏற்றப்படும் தீபங்களால் தீராத பிரச்சினைகள் கூட தீர்ந்து விடும். பைரவர் பயத்தை போக்கி, காவலாக இருக்கும் தெய்வமாகும். எந்த வித பூஜையும் செய்யா விட்டாலும் கூட நெருக்கடியான சூழ்நிலை வரும் போது முழு மனதுடன் அவரை நினைத்து வழிபட்டால், உடனடியாக நம்மை ஆபத்துக்களில் இருந்து ஏதாவது ஒரு வடிவத்தில் பைரவர் காப்பாற்றுவார்.

    சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திரமும் பைரவருக்கு மிகவும் ஏற்ற நாட்களாகும். பன்னிரெண்டு ராசிகளையும் தனது உடலின் அங்கமாக கொண்டவர் பைரவர். அவரை வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். திருமணத்தடை, பித்ரு தோஷம் உள்ளிட்டவைகள் நீங்கும். தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். இந்த நாளில் பைரவரை வணங்கும் போது நமக்கும் அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • நவராத்திரி விழாவில் கலகம் செய்தவர்களுக்கும்.
    • கண்பார்வை தோஷம் விலக சில பரிகாரங்கள் உள்ளது.

    கண்டதோஷம் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் புதன் வருமேயானால் அவருக்கு தண்ணீரில் கண்டம் உண்டு என்று அர்த்தம். லக்னத்துக்கு 8-ல் உள்ள புதன் தசை அல்லது புதன் புக்தி வரும் நேரங்களில் ஜாதகருக்குத் தண்ணீரில் கண்டம் ஏற்பட்டு ஆயுளையும் எடுத்து விடும். ஒரு புதன்கிழமையில் 50 கிராம் வெந்தயம் எடுத்து ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அதனை ஒரு வெண்கலக் கிண்ணத்தில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு தினசரி காலையில் அந்த வெந்தயத்திற்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். அந்த வேளையில் புதன் பகவானால் ஏற்படவுள்ள தண்ணீர் கண்டம் விலக வேண்டும் என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். 10-வது நாள் காலையில் யாருக்காக பூஜை செய்யப்பட்டதோ அவருக்கு வெந்தயத்தை திருஷ்டி சுற்றி, பின்னர் அதை கண்மாயில் அல்லது குளத்தில் வெண்கலக் கிண்ணத்தோடு போட்டுவிட வேண்டும்.

    இந்த பரிகாரத்தை செய்து விட்டால் ஒருவருக்கு தண்ணீரில் வரவுள்ள கண்டம் விலகும். அதிகமாக மதுவுக்கு அடிமையான வருக்கு மேற்சொன்ன முதல் பரிகாரத்தைச் செய்வதோடு வெண் கலக்கிண்ணத்தில் உள்ளதில் பாதி வெந்தயத்தை எடுத்து அவரது உடம்பில் தடவிக் குளிக்கச் செய்ய வேண்டும் மீதியை தண்ணீரில் போட்டுவிட வேண்டும். இதனால் மது குடிக்கும் தோஷம் விலகும்.

    ஜாதகத்தில் சூரியன் லக்னத்துக்கு 8-ல் வந்தால் கண் பார்வை இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டு விடும். நவராத்திரி விழாவில் கலகம் செய்தவர்களுக்கும். அம்மன் கோவில்களில் நடைபெற்ற குடமுழுக்கு நீராட்டு விழாவில் கலகம் செய்தவர்களுக்கும் கண்பார்வை திடீரென மங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கண்பார்வை தோஷம் விலக சில பரிகாரங்கள் உள்ளது."

    தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் பைரவருக்கு வில்வ மாலை அல்லது செவ்வரளி மாலை போட்டு,நெய் விளக்கு ஏற்றி வந்தால் கண்பார்வைக் கோளாறு நீங்கி பார்வை வந்து விடும். தோஷம் நீங்க ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட முடியாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகளில், உங்கள் பகுதியில் உள்ள ஏழை மூதாட்டிகள் ஐந்து பேருக்கு அன்னதானம் கொடுத்தால் கண் பார்வைக் கோளாறு நீங்கி தோஷம் விலகும்.

    குடும்பத்தில் யாராவது மிருகசீரிஷம், சித்திரை, விசாகம். உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் இறந்தால் அது இறப்பு தோஷம் என்று கூறப்படுகிறது. இத்தகைய தோஷம் ஏற்பட்டால், மரணம் நிகழ்ந்த வீட்டை 2 மாதங்கள் வரை மூடி வைக்க வேண்டும். கிருத்திகை. உத்திரத்தில் இறந்தால் நான்கு மாதங்களும், அவிட்டம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் இறந்தால் ஆறு மாதங்களும் வீட்டை மூடிவைக்க வேண்டும்.


    இவை சாத்தியம் இல்லாத பட்சத்தில் பரிகாரம் ஒன்று உள்ளது. மேற்கண்ட காலகட்டங்கள் வரையோ அல்லது 48 நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் பொழுது விடியும் வரை இறப்பு நிகழ்ந்த வீட்டில் விளக்கு எரிய வேண்டும். உயிர் நீங்கிய இடத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். 48 நாட்களின் முடிவில் இரவு 11 மணிக்கு மேல் நவக்கிரக ஹோமம் செய்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு யாருக்காவது தானம் தரவேண்டும். இதனால் இறப்பு தோஷம் முழுமையாக கழிந்து விடும்.

    பெண்களுக்கு தொடு தோஷம், காழ்ப்பு தோஷம், தீட்டு தோஷம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தோஷங்கள் நீங்க பெண்கள் கண்ணாடி வளையல்கள் 21" வாங்கி அவற்றை சுடு நீரில் போட்டு எடுத்து பின்னர் மஞ்சள் கலந்த நீரில் நனைத்து ஆடிப் பூரத்தன்று அம்மன் சன்னதியில் கட்டி தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பெண்களுக்கு உண்டாகும் மூன்று விதமான தோஷங்கள் நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதும் கூட ஒரு வகை தோஷம்தான் இந்த தோஷம் நீங்க 3 பரிகாரம் உள்ளது.

    கணவனைப்பிரிந்து வாழும் மனைவி, தன் கணவன் பயன்படுத்திய ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் 27 கொண்டைக் கடலையை வைத்து முடிந்து அதனை தான் பயன்படுத்தும் தலையணைக்குள் கீழ் வைத்து உறங்க வேண்டும்.

    27 நாட்களுக்கு பிறகு காலை அதனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பிரிந்து சென்ற என் கணவரை கொண்டு வந்து சேர் குருபகவானே! என்று 108 முறை சொல்ல வேண்டும். பின்பு அதனைத் தண்ணீரில் போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் பிரிந்து சென்ற கணவர் திரும்பி வந்து விடுவார். மனைவியைப் பிரிந்து வாழும் கணவன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இரண்டு இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் உள்ள சிலையை வணங்கி வர, பிரிந்து சென்ற மனைவி உங்களுடன் மீண்டும் வந்து சேர்ந்து வாழ்வார்.

    செய்வினை காரணமாக தொழிலில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்ற மும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.


    ஒரு சனிக் கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9. நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

    முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறந்தோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

    உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ம் இடமான தன ஸ்தானமும் 4-ம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருந்தால், செல்வம் சேராத தோஷம் ஏற்பட்டுவிடும். செல்வம் சேர்வதற்காகசேமிப்பை உயர்த்த வேண்டுமானால் சில பரிகாரம் செய்ய வேண்டும்.

    வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான் ஆலயத்துக்கு செவ்வாய் கிழமையன்று காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்குச் சென்று பசும் நெய்யைக் கொண்ட நெய் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஒரு மணி நேரம் தொடர்ந்து எரிய வேண்டும். அந்த அளவிற்கு நெய் எடுத்துச் செல்ல வேண்டும். தீபம் ஏற்றப்பட்டவுடன் சந்நிதானத்தின் முன் அமர்ந்து ஓம் சரவணபவ என்று தொடர்ந்து ஒரு மணிநேரம் பாராயணம் செய்ய வேண்டும். கண்களை மூடிக்கொள்ளாமல் விளக்கின் ஒளியை உற்று நோக்க வேண்டும்.

    இதே போல ஒன்பது செவ்வாய்க்கிழமைக்கு செய்ய வேண்டும். இதனால் கஷ்டம் விலகும். இத்தகைய பரிகாரம் செய்ய முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகன் படத்தை வைத்து வணங்கலாம்.

    சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய். கிஸ்மிஸ் பழம், முந்திரிப்பருப்பு ஆகிய ஐந்தையும் கலந்து, ஒரு புதிய கிண்ணத்தில் வைத்து காய்ச்சி எடுக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபட வேண்டும். அப்போது ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு சிறிது பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று உங்கள் வியாபார தலத்தில் உள்ள முக்கிய வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தினசரி செய்து வந்தால் தொழிலில் நஷ்டம் வராது. அப்படி செய்ய இயலாவிட்டால் நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள். கல்லாவிலும் போட்டு வையுங்கள். உங்கள் வியாபாரம் பெருகும். பனம்பழத்துக் கடுக்காயில் மஞ்சள் தடவி கல்லாவில் வைத்தாலும் வியாபாரம் பெருகும்.

    மருதாணிக்காய், நூறு வருட வேப்பம் பட்டை, பளிங்கு சாம்பிராணி,நன்றாக வெயிலில் காய வைத்து இடித்து தூளாக்கி, நெருப்பில் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். இதனால் வீட்டுக்கு ஏற்பட்ட தோஷம் விலகி விடும்.

    தெற்கு முகமாய் பத்மாசனத்தில் அமர்ந்து கையில் ருத்திராட்சை மாலையை ஏந்தி சிவபெருமானை மனதில் கொண்டு, 'நமசிவாய' என 108 முறை ஜெபித்து கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.

    கண்களை மூடியபடி மனதிற்குள் சிவபெருமான் உருவத்தை எண்ணியபடி கீழ்க்கண்ட மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருபோட வேண்டும்.

    ஓம் சிங்-நசி நசி-மசி-சுவாஹ" மந்திர சித்தி ஏற்பட்ட பின்பு, இந்த மந்திரத்தை பிரம்பில் உருவேற்றி தோஷமுடைய குழந்தைகள் மீது தடவினாலும், நீரில் உருவேற்றி முகத்தில் தெளித்தாலும், விபூதியில் உருவேற்றி பூசினாலும் வேப்பிலையில் உருவேற்றி அடித்தாலும் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருடைய தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    • வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார்.
    • இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் ஏராளமான பாடல்களை ரசிகர்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

    இருவரும் ஒரு அதிசயமான ராக பந்தம் என்று கூட கூறலாம். தமிழின் உச்சத்தை தொட வைரமுத்து ஓயாது இயக்கி கொண்டிருந்தார். ஏற்கனவே கவிதை எழுதுவதில் திறுமை வாய்ந்த வைரமுத்து சினிமாவின் மூலம் அதை வலுப்படுத்த முடிவு செய்தார். அப்போது தான் எழுதிய 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற கவிதை புத்தகத்தை பாராதிராஜாவிடம் கொடுத்து முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


    வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார். மெட்டுக்கு எழுதுவீர்களா? என்று கவிஞரிடம் இளையராஜா கேட்க, மெட்டை சொல்லுங்க முயற்சி செய்கிறேன் என்றார் வைரமுத்து. உடனே மெட்டை வாசிக்கப்பட்டது... வைரமுத்துவோ பல்லவியை சொல்லவா... பாடவா என்று கேட்டார். பாடுங்கள் என்றார் இளையராஜா அப்போது உருவானது தான் 'பொன்மாலை பொழுது'... இதை கேட்ட இளையராஜா வைரமுத்துவை கட்டியணைத்த இவர் சினிமாவில் பல யானைகளை சாய்ப்பார் என்று நம்பிக்கையோடு கூறியதாக பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

    அப்போது தொடங்கிய இவர்கள் இருவரின் சினிமா பயணம் தொட்ட படங்கள் மற்றும் பாடல்கள் எல்லா வெற்றி. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டி எங்கும் இவர்கள் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

    1980களில் தொடங்கி தொடர்ந்து 7 ஆண்டுகள் இவர்கள் பயணம் எந்தவித மனக்கசப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்தது.


    இதையடுத்து பாடல் வரிகள் மூலம் அனைவரையும் கவர்ந்த வைரமுத்துவிற்கு சினிமாவில் பல்வேறு வாய்ப்புகள் வர தொடங்கியது. எப்போது ஒளிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வரும் வைரமுத்துவால் உரித்த நேரத்தில் சில பணிகளை செய்ய முடியாமல் போனது. இதுவே இளையராஜா, வைரமுத்துவின் மன கசப்பிற்கு முதல் காரணமாக அமைந்தது.

    சில பாடல் வரிகளில் இளைராஜா தலையிட்டு மாற்றம் செய்ய சொல்வது அந்த விரிசலிற்கு மேலும் வலு சேர்த்தது. பொது இடங்களில் நண்பர்களை சந்திக்கும் போதும் ஒர் மீது ஒரு குறைகூறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இப்படி சென்ற இடத்தில் எல்லாம் பிரச்சனை முற்றியுள்ளது. எப்போதும் வைரமுத்து ஒரு படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களையும் தானே எழுந்த வேண்டும் என்று ஆசைப்படுவார்.

    இந்த சூழ்நிலையில் தான் 'தாய்கொரு தாலாட்டு' என்ற படத்தில் வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருந்தார். அப்போது இளையராஜா கோர்ப்பின் போது மேலும் ஒரு பாடலை வாலியை வைத்து எழுதி வாங்கி இருந்தார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு இன்னும் அதிகரித்தது. கடைசியா இவை அனைத்து ஒன்று சேர்ந்து இசைப்பாடும் தென்றல் என்ற படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது மோதலாக உருவாகிறது. 'எந்த கைக்குட்டையை யார் எடுத்தது' என்ற பாடல் வரி எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, அந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை நானே எழுதிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இளையராஜா. இதன் காரணமாக வைரமுத்து அங்கிருந்து கோபத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது.

    பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்திற்கு பிறகு வைரமுத்துவும் இளையராஜாவும் நிரந்தரமாக பிரிந்தனர்.


    தொடர்ந்து இன்னும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு, சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் சில பேர் சமாதானம் செய்தும் எந்த பயனும் இல்லாமல் போனது. இளையராஜாவை பிரிந்த நேரத்தில் வைரமுத்துவிற்கு பாடல் வாய்ப்பு குறைய தொடங்கியது.

    தான் தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து பயணம் செய்ய இசையமைப்பாளர்கள் துணை தேவை என்பதை உணர்ந்த வைரமுத்து ஏராளமான இசையமைப்பாளர்களை தமிழில் திரைப்பட இயக்குனர்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

    அப்படியாக வைரமுத்து அறிமுகம் செய்தவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

    ஏ.ஆர். ரஹ்மானும், வைரமுத்து இணைந்து பல்வேறு பாடல்களை உருவாக்கினர். இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    1992ல் ஏஆர் ரஹ்மான் அறிமுகமானபோதும் இளையராஜா அவரது வளர்ச்சியை விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஒருமுறை ஏஆர் ரஹ்மான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒரு இசைக்கருவியை இளையராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி கஸ்டம்ஸில் சிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் இவர்களின் தொடர் வெற்றியால் இளையராஜாவிற்கு பாடல் வாய்ப்புகள் குறைய தொடங்கியதாக அப்போது கூறப்பட்டது. இதன் காரணமாக பிரபலங்கள் சிலர் இவர்களை இணைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.


    இந்நிலையில் இளையராஜாவுக்கும், வைரமுத்துவும் இருந்த இடைவெளி யுவன் சங்கர் ராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே இல்லை. யுவனுடன் இணைந்து பணியாற்றி அதற்கு தேசிய விருது பெற்று விட்டார் வைரமுத்து. பின்னர் யுவனுடன் இணைந்து மாமனிதன் படத்திற்கு பாடல் வரிகள் எழுத முடிவுசெய்த நிலையில் அதை இளையராஜா மறுத்திருக்கிறார். பின்னர் மாமனிதன் படத்திற்கு பா. விஜய் பாடல் எழுதினார்.

    இளையராஜாவை பிரிந்தது குறித்து வைரமுத்து ஒரு பாடல் வரியில் கூறியிருப்பதாவது:

    "மனைவியின் பிரிவுக்கு பிறகு அவள் புடவையை தலைக்கு வைத்து படுத்திருக்கும் காதல் உள்ள கணவனை போல, நினைவுகளோடு நான் மித்திரை கொள்கிறேன். திரையுலகில் நான் அதிகம் செலவிட்டது உன்னிடம் தான். மனதில் மிச்சமில்லாமல் பேசி சிரித்தது உன்னோடுதான். பெண்கள் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்." என்று அழகாக கூறியிருந்தார் வைரமுத்து.

    இந்நிலையில் சென்னையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.


    இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்:

    எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள்., அப்படியே இருந்த நட்பை கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

    வைரமுத்து - கங்கை அமரன் வார்த்தைப் போரால், இனி வரும் காலங்களில் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைய வாய்ப்பே இல்லை எனலாம்.

    • குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்தான். அதற்காக ஐஸ் போல் குளிர்ந்த நீர் வேண்டாம்.
    • அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, ஆபீசிலோ கையில் ஒரு பாட்டில் நீர் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக கட்டாயம் குடிக்க வேண்டும்.

    கோடை வெயில் கொளுத்துகின்றது என்று சுட்டெரிக்கும் கோடையில் வருடா வருடம் பேசிதான் நாமும் வாழ்ந்து வருகின்றோம்.

    இக்காலத்தின் விழிப்புணர்வுக்கு ஏற்ப சில தவிர்ப்பு முறைகள், தடுப்பு முறைகள் இவற்றினை பின்பற்றித்தான் வருகின்றோம்.

    ஆனால் 2024 ஏப்ரல், மே மாத கோடை வெப்ப தாக்குதலோ வரலாறு காணாத அளவில் உள்ளது.

    இந்த கடும் வெயிலில் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், பெண்கள் இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகின்றன.

    * சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மிக அவசியமாகிவிட்டது.

    * தலைக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்க தொப்பி, குடை இல்லாமல் செல்லக்கூடாது என நன்கு அறிவோம்.

    * கொளுத்தும் வெயிலில் குறிப்பாக உச்சி வெயிலில் சுற்றாமல் இருக்க வேண்டும்.

    * வெளிர் நிற உடை, பருத்தி ஆடை அணிவது அவசியம்.

    * இறுக பிடிக்காத ஆடைகளை அணிய வேண்டும்.

    * தினமும் இரு வேளை குளிப்பதும், உடைகளை மாற்றுவதும் அவசியம்.

    * குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்தான். அதற்காக ஐஸ் போல் குளிர்ந்த நீர் வேண்டாம்.

    * டப் அல்லது அகன்ற தொட்டி இவற்றில் கழுத்து வரை மூழ்கி 20 நிமிடங்கள் இருக்கலாம்.

    ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். குளியல் என்பது தலை முதல் நீர் ஊற்றி குளிப்பது


    தான் முறை. ஆனால் பலருக்கு இது ஒத்துக் கொள்ளாது. அத்தகையோர் முதலில் நீரை நன்கு தலையில் தெளித்துக் கொண்டு பிறகு உடலில் ஊற்றி குளிக்க வேண்டும். இங்கு நீர் என குறிப்பிடப்படுவது சாதாரண நீர்தான். சுடு நீர் அல்ல.

    * உடல் சூடு சருமத்தின் வழியாகத்தான் வெளியேற வேண்டும்.

    * உடலில் சிறிது நேரம் தண்ணீரில் நனைத்த துணியினை பிழிந்து உடலில் சுற்றி உட்காரலாம்.

    * சவர் முறை குளியல் சுமார் 10 நிமிடங்கள் எடுத்தாலும் உடல் குளிரும்.

    * அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, ஆபீசிலோ கையில் ஒரு பாட்டில் நீர் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக கட்டாயம் குடிக்க வேண்டும்.

    * நம்மை அறியாமலேயே உடலில் நீர் வற்றும்.

    * நா வறட்சி ஏற்படும். சோர்வும், மயக்கமும் ஏற்படும். கவனம் தேவை.

    * எண்ணை, காரம், புளி இல்லாத எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள் அவசியம்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், நீர் சத்து சிறந்த பழங்கள், கிர்னி, தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி, ஆப்பிள், கறுப்பு திராட்சை, நீர் மோர், லெசி, நாகப்பழம் என கிடைக்கும் பழங்களை சாப்பிடலாம்


    ரொம்பவும் சூடாக இருந்தால் பாதம், கைகள் இவற்றினை சாதா நீரில் சிறிது நேரம் மூழ்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். உடல் சூடு தணியும்.

    * மது என்பதினை அடியோடு தவிர்த்து விடலாம்.

    * தூங்க செல்வதற்கு முன் குளிக்கலாம்.

    * தூங்க செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் நீர் அருந்தலாம்.

    (சிறு குழந்தையினை வைத்திருப்பவர்கள், தாய் பால் கொடுப்பவர்கள் உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குழந்தைக்கு பால் அளிக்கும் நேர அளவினை மற்றும் சற்று கூடுதல் எண்ணிக்கையாக தாய் பால் அளிக்கலாம். ஆனால் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    மற்ற தாய்மார்கள் குழந்தைகளுக்கு எந்த அளவு நீர் கொடுக்க வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இது இந்த கால கட்டத்திற்கு அவசியம் என்பதனை தாய்மார்கள் உணர வேண்டும்.

    * நடை பயிற்சி என்பதனை காலை, மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி, யோகா இவற்றினை வீட்டினுள் காற்றோட்டமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

    * ஜன்னல்கள் மூலம் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க துணி ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

    * அதிக வெயில் நேரத்தில் ஜன்னல்களை மூடி வைக்கலாம்.

    * அவசியம் என்றால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

    * அதிக வெயில் தாக்குதலால் தலை சுற்றல், தலை வலி, சதை பிடிப்பு ஏற்படலாம்.

    * அதிக வியர்வை, உடல் தொடுவதற்கு குளிர்ந்து இருக்கும்.

    * வயிற்றுப் போக்கு, வேகமாக மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.


    ஹீட் ஸ்ட்ரோக்:

    அதிக வெப்பத்தில் உடலால் தன்னை குளுமைப்படுத்தும் திறன் இழக்கும்போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகின்றது. கோடையில் மிக அதிகமாக வெயிலில் இருப்பவர்களுக்கு இந்நிலை ஏற்படுகின்றது. இது ஆபத்தானது. அவசர சிகிச்சை தேவைப்படுவது. இதன் அறிகுறிகளாக

    * வியர்வையற்ற சூடான சருமம்

    * மயக்கம்

    * குமட்டல், வாந்தி, தலைவலி ஆகியவை வரும். உடனடி சிகிச்சை அவசியம்.

    உடனடியாக மருத்துவமனையினை அணுக வேண்டும். முதல் உதவி செய்தோம் சரியாகிவிட்டது என அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஆகவேதான் இங்கு முதல் உதவி பற்றி குறிப்பிடவில்லை. அவரவர் குடும்ப மருத்துவர் மூலம் இதன் தவிர்ப்பு முறைக்கும், யாருக்கேனும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் உடனடியாக கேட்டறியவும்.

    வெயிலில் இருந்து தப்பிக்க இதெல்லாம் கூட செய்யலாம்.

    சிறிதளவு அரிசி மாவுடன் உப்பில்லா மோர் கலந்து கொள்ள வேண்டும். குளிக்கும் போது உடலில் நீர் ஊற்றி இந்த கலவையினை மிருதுவாக முகம் முதல் பாதம் வரை தேய்க்கவும். மென்மையாய் செய்யவும். பிறகு நன்கு நீரில் குளித்துவிட்டால் சருமம் சுத்தமாய் எண்ணை, வியர்வை பிசுபிசுப்பின்றி இருக்கும். இதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம்.

    சிறிது வெள்ளரி துறுவி துணியில் பிழிந்து அத்துடன் சிறிது புதினா சாறு கலந்து சிறிய ஸ்பிரே பாட்டிலில் போட்டு அவ்வப்போது முகம், கைகளில் சிறிது ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

    கண்களை மூடி வெள்ளரி சாறில் நனைத்த பஞ்சினையோ அல்லது வெள்ளரி துண்டினையோ வைத்துக் கொள்ளலாம். இது மிக சிறந்த முறை.

    பாதாம் பிசின் கடைகளில் கிடைக்கும். இதனை சிறிதளவு எடுத்து நன்கு கழுவிய ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் ஊற்றி இரவில் ஊற வைத்து விடுங்கள். காலையில் இது ஊறி மிருதுவாய் நிறைய இருக்கும்.

    பொதுவில் இதில் தேவையான அளவு நீர் சேர்த்து காலையில் எடுத்துக் கொண்டாலே உடலுக்கு பல நன்மைகளை தர வல்லது. ஆனால் பலர் இதில் பால் கலந்து சர்க்கரை போட்டு எடுத்துக் கொள்வர். வெறும் நீரில் குடித்தாலே பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எடை கூடி விடும்.

    அதிகமான வெப்பம் உடல் நல பாதிப்புகளை கண்டிப்பாய் ஏற்படுத்தும். 'ஹீட் ஸ்ட்ரோக்' என்பதனைப் பற்றி நாம் பார்த்தோம். அதிக வியர்வை காரணமாக நீர்சத்து மற்றும் தாது உப்புகள் குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக சதைகளில் வலி, அடி வயிறு வலி, கால் வலி, தோள்பட்டை வலி, சோர்வு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம்.

    தாங்க முடியாத தலைவலி, வாந்தி, வயிற்று பிரட்டல், வேகமான இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

    உடலில் நீர் குறைந்தால் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஒட்டம் குறையும். சிலருக்கு மயக்கம், நினைவிழத்தல் கூட ஏற்படலாம். சிறுநீர் குறைவாக வெளியேறினாலோ அடர்ந்து சிறுநீர் சென்றாலோ நீர் சத்து குறைவு என்று கருதப்படும்.

    இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்தாமல் லேசாக இருந்து விடாதீர்கள். தவிர்ப்பு முறைகளே இதற்கு சிறந்த பாதுகாப்பு தரும்.


    * தண்ணீர், மோர், இளநீர், ஜூஸ் போன்றவை அருந்த வேண்டும்.

    * காய்கறி ஜூஸ் கூட அருந்தலாம்.

    * காபி, டீ போன்றவை உடலில் நீர் இழப்பினை அதிகரிக்கும். ஆகவே இவைகளை தவிர்த்து விடுவோம்.

    * புதினா சாறு கலந்த நீர் பருகலாம்.

    * கொத்தமல்லி தழை சாறு அல்லது தானியா விதையை கொதிக்க வைத்த நீர் அருந்தலாம்.

    உடலில் வேர்குரு, கட்டிகள் ஏற்படலாம். தகுந்த சுகாதாரம் பேணி காத்து மருத்துவ ஆலோசனை பெறுங்கள். சோப்பு கூட அவரவர் இஷ்டம்தான்.

    கூடுதல் கவனம்:

    கொளுத்தும் வெயிலில் காரை நிறுத்தாதீர்கள். காரில் குழந்தையை விட்டு கடைக்கு செல்லவேண்டாம். இது ஆபத்தாக முடியலாம்.

    கோடையும், வெப்பமும் நாம் வருடம் தோறும் அனுபவிக்கும் ஒன்றுதான். விழிப்புணர்வினை கூட்டி நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்போம்.


    இந்த கட்டுரையை எழுதிய நேரத்தில் தமிழ்நாட்டுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வரப்போகிறது என்றும் எச்சரித்துள்ளனர். 37 டிகிரி செல்சியஸ் இருந்தால் 50 டிகிரி செல்சியஸ் போல் வெப்பம் உணரப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம். காலையிலும் குடை எடுத்துச் செல்லுங்கள். நனைத்து பிழிந்த துணியினை உடலின் மீது போட்டுக் கொள்ளுங்கள்.

    • மனித மூளை என்பது தீராத அதிசயம் தான்.
    • நம் உடம்பே தீராத அறிவியல் அதிசயம் தான்.

    அதிசய வாழ்க்கையை அனுபவித்து வாழக் காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்!

    கல் தோன்றி, மண் தோன்றி, மலை தோன்றி, கடல் தோன்றி, மழை தோன்றி, அருவி தோன்றி, நதி தோன்றி, காற்றுத் தோன்றி, நெருப்புத் தோன்றி, மரம் செடிகொடி தோன்றி, வயல் தோன்றி, பயிர் தோன்றி மற்றும் உயிரினங்கள் எல்லாம் தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்னும் உலகமும் உயிரினங்களும் புதுமைமாறாத அதிசயமாகவே தென்படுகின்றன.

    அதிசயம் என்பது, யாராலும் எவராலும் செய்ய முடியாதது; அப்படிச் செய்தாலும் அதைப் போன்றதொரு பிரதியை மீட்டுருவாக்கவும் முடியாது. அப்படிப் பார்க்கும்போது இயற்கையின் படைப்புகள் (மனிதர்கள் உட்பட) அத்தனையும் அதிசயமே. ஆயினும் மனிதர் உருவாக்கிய சில பிரம்மாண்டங்களை நாம் அதிசயங்கள் என்று பட்டியலிட்டு அவற்றை அதிசயத்தோடு உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்து வருகிறோம்.

    ஓர் அழகிய கிராமம். அங்குள்ள பழம்பெருமை மிக்க ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு சிறுமி ஐந்தாம் வகுப்புப் படித்து வந்தாள். எதையும் அறிவுபூர்வமாக அணுகிப் பார்ப்பதும், நூலறிவை நம்பாமல் சொந்த அறிவுகொண்டு ஆழ்ந்து பார்ப்பதும் அவளது இயல்பான குணம்.

    ஐந்தாம் வகுப்பை முடித்ததும் அவள் மேல்படிப்பிற்காக கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்த பெரிய நகரத்துப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். அது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடம். நகரத்திலேயே பெரிய பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். அறிவிலும் கெட்டி சுட்டிகளான பிள்ளைகள் அவர்கள்.

    பள்ளி திறந்து ஆறாம் வகுப்பின் முதல் பாடவகுப்பிற்கு, வகுப்பாசிரியர் வந்து நின்றார். ஒவ்வொரு குழந்தையையும் எழுந்து நிற்கச் சொல்லி, பெயர், ஊர், இதற்குமுன் படித்த பள்ளிக் கூடத்தின் பெயர் அனைத்தையும் கனிவோடு விசாரித்தார். அந்தக் கிராமத்துச் சிறுமியைத் தவிர மற்ற எல்லோருமே நகரத்துப் பள்ளிக் கூடங்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள்.

    எல்லோரும் அவரவர் நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ஆசிரியை; எடுத்துக்கொண்டதும், "உங்களது பொது அறிவைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். உலக அதிசயங்கள் எத்தனை? அவை என்னென்ன? எங்கே பதில்களை எழுதி ஐந்து நிமிடங்களில் என்னிடத்தில் தாருங்கள்!" என்றார்.

    எல்லாக் குழந்தைகளும் வெகு ஆர்வத்துடன் தங்களது நோட்டுகளை எடுத்து மளமளவென்று பதில்களை எழுதத் தொடங்கினர். அந்தக் கிராமத்துச் சிறுமிமட்டும் நோட்டில் எதுவுமே எழுதாமல் எதையோ சிந்திப்பதுபோல் சும்மா உட்கார்ந்திருந்தாள். அவள் பதில் தெரியாமல்தான் விழிக்கிறாள் என்று நினைத்து அவளருகில் வந்த ஆசிரியை," பயப்படாதே! தெரிந்த பதிலை மட்டும் எழுது! ஏழு அதிசயங்களையும் எழுத வேண்டுமென்பதில்லை; நினைவில் உள்ளதை மட்டும் எழுது. மொத்தமாகப் பதில் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மனம் தளர்ந்துவிடாதே!; போகப் போகப் படித்துவிடலாம்! இவர்களுக்கு இணையாகவும் நீ வந்து விடலாம்!" என்று ஆறுதல் சொன்னார். " இல்லை மிஸ்! எழுதிவிடுகிறேன்" என்று நோட்டில் எழுதத் தொடங்கினாள் சிறுமி.

    எல்லார் நோட்டுகளையும் வாங்கிய வகுப்பாசிரியை அங்கேயே திருத்தவும் தொடங்கினார். அந்தக் கிராமத்துச் சிறுமி தவிர்த்து மற்ற எல்லா மாணவர்களும் உலகத்தின் ஏழு அதிசயங்களின் பெயர்களையும் மிகச் சரியாகவே எழுதியிருந்தனர். கடைசியாகச் சிறுமியின் நோட்டைத் திறந்து பார்த்த ஆசிரியை அதிசயித்துப் போனார். அந்தச் சிறுமி நோட்டில் எழுதியிருந்த ஏழு அதிசயங்கள் இவைதாம்: 1. பார்த்தல், 2.கேட்டல், 3. சுவைத்தல், 4. முகர்தல், 5. உணர்தல், 6.சிந்தித்தல், 7.அன்பு செய்தல்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    கிராமத்துச் சிறுமியை எல்லா மாணவர்களுக்கு முன்பாகவும் வரச்சொல்லி வாரியணைத்துக் கொண்ட ஆசிரியை, " நீ எழுதிய பதில்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை!" என்றார். சிறுமியின் சிந்தனை நுட்பத்தைக் கண்ட அனைத்து மாணவர்களும் கைதட்டிப் பாராட்டினர்.

    இந்த உலகத்தில் நமக்குள்ளேயே அதிசயங்கள் குவிந்து கிடக்கும்போது அவற்றுக்கு அதிசயப்படாமல், வெளியில் உள்ள செயற்கை அதிசயங்களுக்கு நாம் ஏன் அலைய வேண்டும்?. செயற்கை நுண்ணறிவுக் காலம் வரை இப்போது நமது அறிவியல் வளர்ந்திருந்தாலும், இன்னமும் மனிதனைப் போலவே ஒரு படைப்பை அச்சு அசலாக உருவாக்க முடியவில்லையே!.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற அந்த ஐந்து பொறிகளுமே அதிசயங்கள் தாம். கண், காது, மூக்கு, வாய், உடல் என்கிற அந்தப் பொறிகள் மூலம் மனிதன் பெறுகிற புலன் உணர்வுகளும், அவற்றின் துணைகொண்டு, மூளையின் செயல்பாட்டால் அவன் நிகழ்த்துகிற செயல்பாடுகளும் அதிசயமோ அதிசயம்தான். எத்தனை அறிவியல் உபகரணங்கள் கொண்டு நமது பொறிகளை ஆராயப் புகுந்தாலும் முடிவுகள் அவற்றையும் தாண்டிய அதிசயங்களாகவே இருக்கும்.

    மனிதன் தனது மூளையைக் கொண்டே மூளைக்கு நிகரான கணினியை உருவாக்கினான்; தொழில்நுட்பம் வளர வளர, அக்கணினியை நவீனப்படுத்திக்கொண்டே போகிறான். ஆயினும் மூளைக்கு நிகரான கணினி இன்னும் உருவாக்கப்படவில்லை; இனிமேலும் உருவாக்கப்படுமா? என்பது கேள்விக் குறியே. அதுவரை மனித மூளை என்பது தீராத அதிசயம் தான்.

    மனிதனின் கைப்பிடியளவே உள்ள மூளைதான் மனித உறுப்புகளிலேயே அதிசயமான அதிசயம். மூளை வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது 25-வது வயதுவரை நிகழும். எந்தவொரு மனிதனின் மூளையிலும் சிலர் திட்டுவதைப்போலக் களிமண் இருப்பதில்லை; மூளையில் 60 சதவீதப் பகுதி கொழுப்பால் ஆனது. மனிதன் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறான் என்பது கட்டுக்கதையாம். பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை பெரியதாக இருக்கும்; சிந்தனை வீச்சு என்பது மூளையின் அளவைப் பொறுத்து அமைவதில்லை: பயன்படுத்தும் தன்மையைப் பொறுத்தே அமையும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மனிதன் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்குமாம். அப்படியானால் மூளை சுறுசுறுப்படைய அவ்வப்போது உறங்குவதும் நல்லதோ?.

    நாம் உலகில் உள்ள அதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அவற்றைப் பார்ப்பதிலும் காட்டுகிற ஆர்வத்தை நம் உடம்பின்மீது காட்டியிருக்கிறோமா?.

    நம் உடம்பே தீராத அறிவியல் அதிசயம் தான். நம் ஒவ்வொருவர் வாயிலும் சராசரியாக ஒருநாளைக்கு ஒரு லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறதாம்; உமிழ்நீரே நமக்கு உயிர்நீர் என்று கூறுமளவுக்கு, மினரல்களும், தூய நீரும், ரசாயன மாற்ற ஊக்கிகளும், நோய் எதிர்ப்புச் சக்திமிக்க பாக்டீரியாக்களும் உமிழ்நீரில் இருக்கின்றன. சுவைப்பொருளைக் கண்டவுடன் அதிகமாகச் சுரந்து, உண்டு சுவைக்கும்போது பொருள் சீரணமாக உதவுகிற வேதிப்பொருளாகவும் உமிழ்நீர் உதவுகிறது.

    ஒவ்வொரு மனிதனின் உடம்புக்குள்ளும் இயங்குகிற ரத்தநாளங்களை நீட்டி அளந்தால், அது பூமத்திய ரேகையை நான்குமுறை சுற்றிக் கட்டக்கூடிய அளவுக்கு நீளமானதாக இருக்குமாம். மனித எடையில் 8 சதவீத எடையை அவனது உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் குருதி கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு மனித உடம்பிலிருந்தும் கண்களால் காணமுடியாத அளவுக்கு மெலிதான ஒளிவெளிச்சம் வெளிவந்து கொண்டிருக்கிறதாம். இதைத்தான் மேலும் நன்மைப்படுத்தி ஒளிதேகம் ஆக்கவேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறினாரோ?.

    மனிதனின் தொப்பையில் உள்ள தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் தங்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனும் தனது உடம்புத் தோலிலிருந்து ஓராண்டிற்கு 4கிலோகிராம் அளவிலான தோல் செல்களை உதிர்க்கிறான். பிறந்து ஒருமாதம் வரை குழந்தை அழுதாலும் கண்ணீர் வருவதில்லையாம். காரணம் தெரியாமல் அழும்போது எதற்குக் கண்ணீரை வீணடிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணமோ என்னவோ!.

    வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் 3 பில்லியன் முறைகளுக்கும் மேல் இதயம் துடிக்கிறது. டிரில்லியன் வகைகளுக்கும் மேற்பட்ட வாசனைகளை வேறுபடுத்தி நுகரும் வல்லமை நமது மூக்குக்கு இருக்கிறதாம். சுறா மீன்களின் பற்களின் வலிமைக்கு நிகரான வலிமையானவை மனிதனின் பற்கள். நம்மால் ஒரு பல்லை நமக்கிருப்பதற்கு நிகராகச், செயற்கையாக உருவாக்க முடியுமா?.

    நமது உடம்பின் உறுப்புகள் தவிர, கைகள், தோள்கள், கால்கள், விரல்கள் ஆகிய அங்கங்களின் உதவியோடு காட்டைத் திருத்திக் கழனிகள் ஆக்குவதும், நாட்டைத்திருத்தி நகரங்கள் ஆக்குவதும், மண்ணைப் பொன்னாக்குவதும், இயந்திரங்கள் ஆயுதங்கள் எனக் குண்டூசி முதல் ராக்கெட் வரை தொழில்நுட்பத்தில் வானளாவி நிற்பதும் தீராத அதிசயங்கள் தாம்.

    இயற்கையைப் பாருங்கள்!. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!" என்று மகாகவி பாரதி பாடியது, அவர் இயற்கையின் அதிசயங்களைக் கண்டு மகிழ்ந்ததன் அடையாளம்தான்.

    காற்றைப் பாருங்கள். அதைப் பார்க்க முடியாது; உணர மட்டுமே முடியும். உணர்வதினும், நம் மூக்கின் வழியே காற்று உட்புகுவது, வெளியேறுவதுமாக நிகழும் சுவாச ஜாலங்களை கவனித்துப் பாருங்கள். தியான முறையில் இதுவும் ஒன்று என்கிறார்கள். தூய உயிர் வளியாக உடம்பின் உள்ளே புகுந்து, உயிர்வாழ்வதற்குத் தேவையான உதவிகளையெல்லாம் உடம்பினுள் புரிந்து, கரியமில வாயுவாக வெளியேறும் காற்று பயன்தரும் அதிசயம்தான்.

    மண்ணைப் பாருங்கள். மண்ணில்தான் எத்தனை வகைகள்?. எத்தனை பயன்கள்?. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழிட மண்புலம் பகுத்து வாழ்வியல் ஒழுங்குகளை வகுத்தது தமிழர்களின் அதிசயம். மண்ணில் விளைந்து வரும் புல் தொடங்கி, பெரிய ஆலமரம்வரை ஒவ்வொரு செடிகொடியும் அதிசயம். அவற்றில் பூக்கும் மலர்களின் வண்ணப் புதுமைகளை இன்னமும் பார்க்கப் பார்க்க அதிசயம்தான்.

    வானம் என்று ஒன்றுமில்லை என்றாலும் அதில் நொடிதோறும் நிகழ்கிற அதிசயங்கள் எண்ணிலடங்காதவை. எந்தக் கடிகாரத்தில் அலாரம் வைத்துக்கொண்டு நேரந்தவறாமல், நாள்தோறும் சூரியனும் சந்திரனும் வந்து ஒளி செய்கின்றன?. வானில் மிதக்கும் மேகங்கள் கறுத்து மழையாகும் அதிசயத்தை என்னவென்று சொல்வது? மழையின் கருணையை ஏதென்று புகழ்வது?. விண்ணில் சிறகு விரித்துப் பறக்கின்ற பறவையினங்கள் வழங்கும் சுதந்திரச் செய்திகள் தாம் எத்தனை? எத்தனை?

    நாம் அதிசயம்!

    நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் அதிசயம்!

    நாம் வாழுகிற வாழ்க்கையும் அதிசயம்!

    வாருங்கள் அதிசயித்து வாழ்வோம்!

    அதிசயங்கள் புரிந்து மகிழ்வோம்!

    தொடர்புக்கு 9443190098

    • வண்ண வண்ண சேலை கட்டி தலைநிறைய பூ வைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் இளம் பெண்களுக்கே உரித்தான துள்ளல் காட்சிகள்.
    • ளவுத்துறை உற்சாகதுறையாக எங்களுக்கு அமைந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியாக இருந்த நேரம்.

    எதிர்பாராத இடத்தில்...

    எதிர்பாராத நேரத்தில்...

    எதிர்பாராத நண்பர்களை சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்...?

    அந்த சந்திப்பையும், அனுபவத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு அனுபவத்தை நானும் சந்தித்தேன் கோவாவில்.

    விஜயகாந்த் சாருக்கு ஜோடியாக உளவுத்துறை படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த படத்தில் பெரும்பகுதி ஷூட்டிங் சென்னையில் தான் நடந்தது.

    அந்த படத்தில் ஒரு வெகுளிப் பெண் பாத்திரத்தில் நடித்தேன். படிக்காத பெண்ணான நான் விஜயகாந்த் சாரை திருமணம் செய்திருப்பேன். கடற்படை உளவுத்துறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் கடல், படகு சார்ந்த காட்சிகள் நிறையவே உண்டு.

    கோவாவில் படப்பிடிப்பு. படக்குழுவினர் எல்லோரும் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தோம்.


    ஒரு நாள் அந்த ஓட்டல் அறையில் இருந்து வெளியே வந்தேன். சற்று தூரத்தில் எனது நெருங்கிய தோழியான நடிகை மகேஸ்வரியை பார்த்ததும் ஆச்ச ரியத்தில் அப்படியே நின்று விட்டேன். ஒரு வரை ஒருவர் பார்த்தும் இருவருக்குமே இன்ப அதிர்ச்சி. சினிமா காட்சிகளில் வருவது போல் தான் அப்போது நாங்களும் நடந்து கொண்டோம்.

    அவள் என்னை பார்த்து ஓடிவர... நான் அவளை பார்த்து ஓட இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கொண்டோம்.

    'ஏய்... நீ எப்படி இங்கே?' என்று நான் கேள்வி எழுப்பவும், அவளும் அதே கேள்வியை என்னை பார்த்து கேட்கவும் நான் உளவுத்துறை படத்தில் நடிக்க வந்திருப்பது பற்றியும் ஹீரோ விஜயகாந்த் என்றும் சொன்னேன்.

    அவள் 'உல்லாசம்' என்ற படத்தில் நடிக்க வந்ததாகவும், அதே ஓட்டலில் தான் தங்கி இருப்பதாகவும் கூறினாள்.

    மகஸ்வரியும், நானும் நெருங்கிய தோழிகள். சென்னையில் இருந்தால் நேரில் சந்திப்பதை தவற விடமாட்டோம்.

    ஆனால் அந்த காலகட்டத்தில் பட வாய்ப்புகள் அதிகம் இருந்ததால், ஓய்வெடுக்க கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருந்தேன். அப்படியிருக்கும் போது நாங்கள் சந்திக்க ஏது நேரம்?


    ஆனால் எதிர்பாராத இடத்தில் அன்று சந்தித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி. இருவரும் படப்பிடிப்பில் எவ்வளவு உல்லாசமாக இருந்தோமோ தெரியாது. ஆனால் நாங்கள் இருவரும் அவ்வளவு உல்லாசமாக கிடைத்த நேரத்தில் பொழுது போக்கினோம்.

    தினமும் படப்பி டிப்பு முடிந்து ஓட்டலில் தங்கியிருக்கும் போது ஒன்றாக நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வது, ஒன்றாக சாப்பிட செல்வது... அப்பப்பா.... அப்படி ஒரு சந்தோசம்!

    பொதுவாக படப்பிடிப்புகளில் இருக்கும் போது நண்பர்கள், உறவி னர்கள் என்று பேசி மகிழ்வது, பொழுது போக்குவது இயலாது. படக்காட்சிகளை பற்றிய சந்தினை, அதற்கான ஏற்பாடுகளில் தான் கவனமாக இருப்போம்.

    இந்த மாதிரி வாய்ப்புகள் எப்போதாவது கிடைக்கும். எங்களை பார்த்த படக்குழுவினர் 'மேடம், யார் எந்த குழுவில் இருக்கிறீர்கள் என்று கிண்டல் செய்வார்கள்.

    விஜயகாந்த் சாரோடு நடிப்பதே திரில் லிங்கா இருக்கும். இந்த படத்திலும் கோவா கடலில் அதிவிரைவு படகில் அழைத்து சென்றார். படகின் வேகமும், அது தண்ணீரை கிழித்தபடி பாய்ந்து சென்றதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் திக்.. திக்.. என்று இருக்கும். திரில்லிங்கான அந்த அனுபவம் என்றும் மறக்க முடியாதது.

    படத்தில் கதாபாத்திரத்துக்கும் 'மீனா' என்று என் நிஜப்பெயரையே பெயரையே சூட்டியிருந்தார்கள். படம் முழுவதும் 'மீனா... மீனா..' என்று ஒவ்வொருவரும் டயலாக் பேசுவதை கேட்டதும் அது ஒரு சந்தோசம்.

    அதை விட என் பெயரில் ஒரு பாடலே வைத்திருந்தார்கள்.

    'மீனா உன் கண்ணுக்குள்ள

    மின்னலென்ன...' என்ற பாடலுக்கு நானும் விஜயகாந்த் சாரும் ஆடுவோம். என் பெயருக்கேற்ற துடுக்குத்தனமான பாட்டு. அந்த பாடலுக்கு ஏற்ப ரசித்து ரசித்து நடித்தேன்.


    அந்த பாடல் காட்சி முழுவதும் வண்ண வண்ண சேலை கட்டி தலைநிறைய பூ வைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் இளம் பெண்களுக்கே உரித்தான துள்ளல் காட்சிகள். எனவே அந்த ஷூட்டிங் நட்பு ரீதியான சந்தோ சமான அனுபவத்தை கொடுத்தது. அதே போல் எனக்கு கலா மாஸ்டர், மகேஸ்வ ரிக்கு பிருந்தா மாஸ்டர். அவர்களும் இருவரும் ஒரே இடத்தில் தங்கி இருக்க நேர்ந்ததால் அக்களும்-தங்கையும் தனியாக கூட்டணி போட்டிருந்தார்கள்.

    ஆக, உளவுத்துறை உற்சாகதுறையாக எங்களுக்கு அமைந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியாக இருந்த நேரம். ஆனா லும் தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா சாரோடு நடித்த தில்லை. இந்த நிலையில் அவரோடு ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.

    கால்ஷீட் நெருக்கடி யாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்று முடிவு செய்தேன். படத்தின் கதையும் எனக்கு பிடித்து இருந்தது.


    அந்த படத்தின் டைரக்டரை பற்றி செல்ல வேண்டுமென்றால் அவர் 'பாடல் ஸ்பெச லிஸ்ட்' என்று சொல்லலாம். தெலுங்கு பட உலகில் அவரது படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாக இருந்தது.

    எனவே அந்த படத்தில் எப்படி யாவது நடிக்க வேண்டும்!

    அது என்ன படம்? நடந்தது என்ன என்பதை பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்..

    (தொடரும்...)

    • நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஆழ்ந்த இரவு உறக்கம் கொள்ள வேண்டும்.
    • நான் நலமாக இருக்கிறேன், இன்றைய நாளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன் என்று நமக்கு நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    நம் வாழ்க்கையின் வெற்றி என்பது மூளையின் நலனில்தான் உள்ளது. இந்த மூளையை நலமாக வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் மூளையின் நலத்திற்கான 10 திறவுகோல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    1. ஆழ்ந்த இரவு உறக்கம்

    2. தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது

    3. சூரிய உதயத்தைப் பார்த்தல்

    4. உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சி

    5. சரிவிகித உணவு

    6. நாளும்புதியவற்றைக் கற்றுக்கொள்ளுதல்

    7. மனத்தை ஒருங்கிணைத்து வாழ்தல்

    8. சமூக வலைத்தளங்களை அளவாகப் பயன்படுத்துதல்

    9. உறங்கச் செல்லும் முன் தன்னாய்வு செய்தல்

    10. நேர்மறை எண்ணங்கள்

    ஆழ்ந்த இரவு உறக்கம்:

    மூளையின் நலனுக்கான முதல் திறவுகோல் இதுதான். ஆம்! நாம் உறங்கும்போதுதான் நம் மூளையில் நினைவுத்திறன் வலுப்படுத்தப்படுகிறது.

    நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஆழ்ந்த இரவு உறக்கம் கொள்ள வேண்டும்.

    இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை நம் மூளைக்கு ஓய்வு கொடுத்தால்தான் நம் மூளையில் உள்ள கடிகாரம் (Circadian Clock) நன்முறையில் இயங்கும்.

    நம் நாளமில்லாச் சுரப்பிகள் நன்றாக இயங்குவதற்கும் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதற்கும் மறுநாள் நாம் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும், இந்த இரவு உறக்கம் அவசியமானது.


    தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது:

    காலையில் எழுந்தவுடன் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு கண்ணாடி முன் நின்று நான் என்னை விரும்புகிறேன் என்று புன்னகையுடன் கூற வேண்டும்.

    நான் நலமாக இருக்கிறேன், இன்றைய நாளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன் என்று நமக்கு நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத் தான் Self suggestion என்று கூறுகிறோம். இதை நாளும் செய்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சூரிய உதயத்தைப் பார்த்தல்:

    காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை முதல் மூன்று நிமிடங்கள் பார்க்கும்போது, அக்கதிர்களானது ரெட்டினாவில் விழும்போது ரெட்டினாவிலிருந்து ரெட்டினோ ஹைப்போதலாமிக் வழியாக அது நம் மூளையில் உள்ள மூன்றாவது கண் என்றழைக்கப்படும், பீனியல் சுரப்பியைச் சென்றடைகிறது.

    இப்பகுதிதான் நன்கு உறக்கம் வருவதற்கும், உள்ளுணர்வுகளைத் தூண்டுவதற்கும் அவசியமானது. நிறையச் செயல்களில் நாம் வெற்றி பெறுவதற்கு நமக்குள் தோன்றும் உள்ளுணர்வு மிகவும் முதன்மையானது.

    அதற்கு நாம் கதிரோன் தோன்றுவதை அல்லது மறைவதை ஒன்று முதல் மூன்று நிமிடங்களாவது இடைவெளி விட்டு விட்டுக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.



    உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சி:

    நாளும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் செய்யும் அந்த ஒரு மணி நேரப் பயிற்சியை, உடலுக்கான பயிற்சி, மனத்திற்கான பயிற்சி என்று பிரித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள் மூளையின் இணைப்புகளை வலுப்படுத்துகின்றன.

    சரிவிகித உணவு:

    நாம் என்ன உடலுக்குக் கொடுக்கிறோமோ, அதுதான் நாம் யார் என்பதை உறுதிசெய்கிறது. வயிறு தான் நம் இரண்டாவது மூளை என்பதைப் பற்றியும், நம் மூளைக்கு Neurotransmitters எனப்படும் நரம்பியக் கடத்திகளின் உருவாக்கத்திற்கும், நாம் உண்ணும் உணவுதான் மூலக்கூறு.

    அறிவுத் திறனுக்கு அசிடைல்கோலின் என்னும் நரம்பியக் கடத்திகள் வேண்டும். அசிடைல்கோலின் நன்றாக இருந்தால்தான் நினைவுத்திறன் நன்றாக இருக்கும். அசிடைல்கோலின் குறைவாக இருந்தால் டெமன்டியா என்னும் நினைவு மறதி நோய் வந்துவிடும். நாளும் இரண்டு பழங்களாவது உண்ண வேண்டும். அதில் தான் மூளையின் நலனுக்கான வைட்டமின்கள் உள்ளன.

    எதைச் சாப்பிட்டாலும் அரைவயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடமாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வைத்திருந்தால் நம் மூளையின் நலம் காக்கப்படும்.

    நாளும் புதியவற்றைக்கற்றுக்கொள்ளுதல்:

    "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" என்பது பழமொழி. எதையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிடாமல் நாம் நாளும் புத்தம்புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ள முயல வேண்டும்.

    புதிய செய்திகள் மூளையை நன்கு தூண்டும். நான் என்னை உயர்த்திக் கொள்வதற்காக நாளும் முயல்கிறேன் என்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் மனத்திற்குள் சொல்ல வேண்டும்.


    மனத்தை ஒருங்கிணைத்து வாழ்தல்:

    இப்போதெல்லாம் எல்லாரிடமும் மனஅழுத்தம் மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக உள்ளன. கடவுளிடம் வேண்டும் போது கூட, இது நடக்குமா நடக்காதா என்று நம்பிக்கை இன்றி வேண்டத் தொடங்கி விட்டோம்.

    மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே இந்த Mindful Living. அதாவது இந்த நிமிடம் நாம் என்ன வேலை செய்கிறோமோ அதில் மட்டுமே கவனம் வைத்து வேலை செய்வது. எடுத்துக்காட்டுக்கு, சாப்பிட்டால் அதை மட்டும் செய்வது. படித்தால் முழுக்கவனத்துடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது. இப்படி எந்த வேலை செய்தாலும் அதில் மட்டுமே கவனம் செலுத்தினால் நம்முடைய மூளையின் நலன் மேம்படுத்தப்படும்.

    ஒரு நாளைக்கு நமக்கு 60,000 எண்ணங்கள் வந்து சென்றாலும், நாம் செய்யும் வேலையை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்களைச் செய்ய வேண்டும். இதைத்தான் Mindful Living என்றோம்.

    சமூக வலைத்தளங்களை அளவாகப் பயன்படுத்துதல்:

    நாம் தூங்குவதற்கு முன்னால் அலைபேசி மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது இயல்பாகி விட்டது (வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக் யூடியூப்). இவையனைத்துமே நமக்கு நன்மைகள் செய்கின்றன என்று நினைக்கிறீர்களா? ஒரு விழுக்காடு இதில் நன்மை இருக்கலாம். ஆனால் மீதமுள்ள 99 விழுக்காடு நம்மை இயல்பு வாழ்க்கையில் இருந்து திசைத் திருப்புபவையே.

    இவற்றை ஒதுக்கிட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், அளவோடும் எச்சரிக்கையோடும் பயன்படுத்த வேண்டும். Mindful Living எந்த அளவிற்கு அவசியமோ, அதேபோல் இவைகளை எச்சரிக்கையோடு பயன்படுத்துவதும் தேவைதான்.

    எடுத்துக்காட்டுக்கு நாம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அலைபேசியை எடுப்போம். அப்போது ஒரு தகவல் வந்திருந்தால் அதைப் பார்த்துவிட்டு, பார்க்க வந்த வேலையை மறந்து விடுவோம்.

    சில நேரங்களில் எதற்காக அலைபேசியை எடுத்தோம்? என்பதே நினைவுக்கு வருவதில்லை. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், சமூக வலைத்தளங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.


    உறங்கச் செல்லும் முன் தன்னாய்வு செய்தல்:

    இரவு உறங்குவதற்கு முன்பு காலையிலிருந்து இரவு வரை நடந்தவற்றைத் தன் ஆய்வு செய்ய வேண்டும்.

    நம்மை அதிகமாக ஆட்கொண்ட உணர்வு நிலை எது? அது நம் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதா? இல்லை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியதா? என்பதைப் பற்றித் தன் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் மூளை நம்மைச் சரி செய்துவிடும்.

    நேர்மறை எண்ணங்கள்:

    நேர் மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய 10 திறவுகோல்களும் நம் மூளையின் நலனுக்கு மிகவும் இன்றியமையானவை. உடல் மற்றும் மனம் இரண்டும் நலமாக இருக்க மூளையைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது மிகவும் நன்று என்பதை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.

    ×