என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்றும் யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இன்று காலை நிலவரப்படி ஒரேநாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 618ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் பிற ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால் முதலமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்றும் யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த கவர்னர் கிரண்பேடி தடுக்கிறார் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:
புதுவை அமைச்சர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியவுடன் நிவாரணம் வழங்க திட்டமிட்டு அதற்கு கோப்பு தயார் செய்து ஏப்ரல் மாதம் தலைமை செயலருக்கு அனுப்பி வைத்தோம். முதல்கட்டமாக புதுவை, ஏனாமிற்கு சேர்ந்து வழங்கவும், காரைக்கால், மாகிக்கு தனித்தனியே வழங்கவும் கோப்பு தயாரித்து அனுப்பப்பட்டது. அந்த கோப்பில் மொத்தம் 19 ஆயிரத்து 100 மீனவர்கள் தடைக்கால நிவாரணம் பெறுகின்றனர். இவர்களுக்கு ரூ.12 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் தலைமை செயலருக்கு சென்ற கோப்பை கவர்னர் கிரண்பேடி வேண்டுமென்றே தலையிட்டு ஓய்வூதியம் பெறுபவர்கள், மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இது நடைமுறையில் உள்ள திட்டம் என்பதால் இந்த கோப்பு கவர்னரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் கவர்னர் கிரண்பேடி வேண்டுமென்றே தலையிட்டு 4 முறை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி திருப்பி, திருப்பி அனுப்பி வைத்துள்ளார். மேலும் வீடு, வீடாக சென்று மீனவர்களை பற்றி ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.
அப்போது நாங்கள் கொரோனா காலத்தில் ஆய்வு செய்வது சரியாக இருக்காது என்று தெரிவித்தோம். இந்த கருத்தை தலைமை செயலரும், கவர்னரிடம் தெரிவித்தார். இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்கள். அப்போது நடைமுறையில் உள்ள மீனவ சங்க உறுப்பினர்களுக்கான சேமிப்பு நிதியையும் வழங்க வேண்டும் என கூறியிருந்தோம். அந்த கோப்பையும் கவர்னர் கிரண்பேடி பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பி விட்டார். அவரை சந்திக்க அனுமதி கேட்டபோதும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தடைக்கால நிவாரணம் வழங்கும்படி கவர்னர் உத்தரவிட்டதற்கான கோப்பு இதுவரை எங்களுக்கு வரவில்லை.
இந்தநிலையில் புதுவை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் புதுவை கவர்னர் கிரண்பேடி நடைமுறையில் உள்ள திட்டங்களை தடுக்கிறார். பிரதமரை விட கவர்னர் உயர்ந்தவரா? புயல் காலத்திற்கான சேமிப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது. ஆனால் கவர்னர் கிரண்பேடி அதை வழங்க மறுக்கிறார். மீனவர்கள் புதுவை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலிலை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஒரு முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை எவ்வாறு விதிகளை மீறி செயல்பட்டது என்று பாருங்கள். அந்த தொழிற்சாலையில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான தொழிலாளர்களை பணிக்கு வரவழைத்து உள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்காமல் கொரோனா பரவுவதற்கு வழிவகை செய்துள்ளது.
இதன் விளைவு மொத்த புதுச்சேரிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தற்போது அந்த தொழிற்சாலை மூடப்பட்டு பேரழிவு மேலாண்மை சட்டம், தொழிலாளர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலை உரிமையாளர்கள், மேலாளர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு வாழ்க்கை எந்த அளவுக்கு இன்றியமையாததோ அதேபோல் வாழ்வாதாரமும் இன்றியமையாததாகும். தயவு செய்து கவனமாக செயல்படவும்.
உங்களை பாதுகாப்பதன் வழியாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சுகாதாரத்துடன் செயல்படுவது போன்றவற்றை நம்முடைய வாழ்க்கையின் அன்றாட பழக்க வழக்கமாக கொள்ள வேண்டும். இதை அச்சத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டாம். அதற்கு மாறாக இதை செயல்படுத்துவதால் சுய பாதுகாப்புடன் கொரோனா பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பின்பற்றவும்.
பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவேற்றம் செய்து கொள்ளவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உங்கள் அருகில் இருந்தால் இந்த செயலியின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பரிசோதனையும், சிகிச்சை முறையும் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். இது உங்களுடைய வாழ்வாதாரத்திற்கானது. உங்களுடைய அலட்சியத்தால் உங்களையும் இழந்து, மேலும் பலர் இறக்க வழிவகை செய்துவிடாதீர்கள். வேறு வழி இல்லை. எனவே இந்த கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் முறைகளில் கவனம் செலுத்தி உங்களையும், உங்களுடைய வாழ்வாதாரத்தையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

வில்லியனூர் அருகே தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் தடுப்பு வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்:
புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஜிப்மர் மருத்துவமனை, இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம் முன்வந்து, மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனையறிந்த சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து தடுப்பு வேலியை அமைத்தனர். கொரோனா வார்டு அமைத்தால் தங்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும். எனவே கொரோனா நோயாளிகளை இங்கு கொண்டு வரக்கூடாது என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்பு வேலியை அதிரடியாக அகற்றினர். பின்னர் பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தார்.

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
மீன்பிடி தடைக்காலத்தின்போது மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை வழங்க கவர்னர் கிரண்பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையொட்டி அவரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தடைக்காலம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி வந்தன.
இந்தநிலையில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த கோரிக்கைக்காக மீனவர்கள் அறிவித்து இருந்த போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சட்ட சபையில் அறிவித்தபடி மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.7,500, புயல் நிவாரணத்தொகை (சேமிப்பு தொகை) ரூ.4,500, மீன் விற்கும் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
புயல் நிவாரணத்தொகை ரூ.4,500 வழங்க மத்திய அரசு அனுமதித்தும் அதனை வழங்க கவர்னர் கிரண்பேடி தடையாக இருப்பதாக கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்து தங்களது படகுகளில் கடலுக்குச் சென்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக்கொடி, பலூன்களை பறக்க விட்டபடி காந்தி சிலை மற்றும் தலைமை செயலகம் அருகில் திரண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் வந்து இருந்தனர்.
நூறுக்கும் மேற்பட்ட படகுகளில் ஏராளமான மீனவர்கள் காந்தி சிலை- தலைமைச் செயலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் கடற்கரைக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஒரே நேரத்தில் நூறுக்கும் மேற்பட்ட படகுகளில் வந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

புதுச்சேரியில் ஒரேநாளில் 85 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 618ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,52,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 74,622 பேருக்கும், டெல்லியில் 77,240 பேருக்கும், குஜராத்தில் 30,095 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 618ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி அமமுகவிற்கு புதிய நிர்வாகிகளை கட்சியின் பொது செயலலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
அ.ம.மு.க. பொதுச் செயலலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியின் புதுவை மாநில புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்களை நியமித்துள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-
மாநில அவைத்தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் லாவண்யா, துணை செயலாளர்கள் செல்வம், விமலாஸ்ரீ, பொருளாளர் வீரப்பன், புதுச்சேரி நகர செயலாளர் பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் ஜெயபால் என்கிற செங்கேணி.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சதீஷ்குமார், அம்மா பேரவை செயலாளர் தவமுருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோமநாதன், மாநில மகளிர் அணி செயலாளர் காமாட்சி, மாணவர் அணி செயலாளர் சபரிவேலன், அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் மஞ்சினி, வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் லட்சுமணன், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் உபையதுர் ரகுமான், விவசாய பிரிவு செயலாளர் சிவப்பிரகாசம்.
மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சிலம்பரசன், மீனவர் அணி செயலாளர் சந்திரன், இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், அமைப்பு சாரா ஒட்டுனர்கள் அணி செயலாளர் பச்சையப்பன், இளைஞர் பாசறை செயலாளர் சங்கர் கணேஷ், இளம் பெண்கள் பாசறை செயலாளர் தரணிதேவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகனசுந்தரவேல் (ஆண்கள் பிரிவு), பிரேமா (பெண்கள் பிரிவு), வர்த்தக அணி செயலாளர் மோகன், பொறியாளர் அணி செயலாளர் ராஜா, நெசவாளர் அணி செயலாளர் ராஜசேகரன்.
தொகுதி செயலாளர்களாக தனவேலு (மண்ணாடிப்பட்டு), சரவணன் (திருபுவனை), காண்டீபன் (ஊசுடு), யோகநாதன் என்கிற அன்பு (மங்கலம்), குமரவேல் என்கிற செந்தில் (வில்லியனூர்), சுதாகர் (உழவர்கரை), மணிகண்டன் (கதிர்காமம்), ரத்தினகுமார் (இந்திராநகர்), தமிழ்செல்வம் (தட்டாஞ்சாவடி), சிவப்பிரகாசம் (காமராஜ் நகர்).
பாலமுருகன் (லாஸ்பேட்டை), சுப்ரமணி என்கிற சுரேஷ் (காலாப்பட்டு), முருகன் (முத்தியால்பேட்டை), ராஜா என்கிற தட்சிணாமூர்த்தி (ராஜ்பவன்), ரகுமான் (உப்பளம்), சிராஜ் என்கிற கனிமுகமது (உருளையன்பேட்டை), சதீஷ்கண்ணா (நெல்லித்தோப்பு), தமிழ்குமரன் (முதலியார்பேட்டை), ஜாபர்அலி (அரியாங்குப்பம்), வாழுமுனி (மணவெளி), இளவரசு (ஏம்பலம்), சுந்தரராஜன் (நெட்டப்பாக்கம்), ராஜாராம் (பாகூர்), பேடப்பட்டி ரமேஷ் பாபு (ஏனாம்) இவர்கள் தவிர பொதுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதுவை மாநில அ.ம.மு.க. செயலாளர் வக்கீல் வேல்முருகன் பரிந்துரையின் பேரில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை மீறியதாக புதுவையில் ஒரேநாளில் மொத்தம் 350 பேரிடம் ரூ.35 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று புதிதாக 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த பகுதிகள் விவரம் பின்வருமாறு:-
உச்சிமேடு மதிகிருஷ்ணாபுரம் அண்ணாமலை நகரின் ஒரு பகுதி, ரெட்டியார்பாளையம் பொன் நகர் 3-வது குறுக்கு தெரு மற்றும் கம்பன் நகர் 6-வது குறுக்கு தெரு, சாரம் வெங்கடேஸ்வரா நகர் 3-வது குறுக்கு தெரு மற்றும் ஞானப்பிரகாசம் நகர் 4-வது குறுக்கு தெரு, ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெரு, பிருந்தாவனம் 9-வது குறுக்கு தெரு, ராமன் நகர் எம்.ஒ.எச். வீதி, கருவடிக்குப்பம் மகாவீர் நகர் சிட்டிசன் அவென்யூ, தட்டாஞ்சாவடி வீமன் நகர் ஓடைவீதி.
இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட் கள் வினியோகம் மற்றும் அவசர மருத்துவ சேவைக்காக மட்டும் பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்படுகிறார்கள்.
புதுவையில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் கட்டுப்பாடு மீறியதாக அபராதம் விதிக்கப்பட்ட விவரம் வருமாறு:-
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் 36 பேர், பாகூரில் 56 பேர், மண்ணாடிப்பட்டில் 72 பேர், நெட்டப்பாக்கத்தில் 40 பேர், வில்லியனூரில் 70 பேர், திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்தில் 10 பேர், கோட்டுச்சேரியில் 11 பேர், நெடுங்காட்டில் 7 பேர், திருநள்ளாறில் 10 பேர், நிரவியில் 5 பேர், மாகி நகராட்சியில் 33 பேர் என ஒரேநாளில் மொத்தம் 350 பேரிடம் ரூ.35 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் புதுவையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,500 வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் மீன்பிடி தடைக் காலம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்ததாக மத்திய அரசு அறிவித்தது.
இதையொட்டி மீனவர்கள் தங்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கான கோப்பு தயார் செய்து கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்று கவர்னர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் கடந்த காலங்களை போலவே இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கும் கடந்த ஆண்டைப் போலவே தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளதாக மீன்வளத்துறை செயலாளர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
இந்த தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியூரில் இருந்து வருபவர்கள் பற்றி அரசுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு சோதனை நடத்த உள்ளோம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் உணவு சரியாக வழங்கவில்லை என்று புகார் வந்துள்ளது. அதனை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) பேரிடர் மீட்பு துறையின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். கூனிச்சம்பட்டு பகுதியில் 70 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முககவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி புரிந்தவர்கள் மூலம் அதிக அளவில் தொற்று பரவியுள்ளது. இதுதொடர்பாக அந்த தொழிற்சாலை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய பரிசோதனை வழிமுறைகளை ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ளது. அதாவது ஆண்டிஜன் முறையில் மருத்துவ சோதனை நடத்தினால் 30 நிமிடத்தில் தொற்று பாதிப்பினை கண்டறிய முடியும். இதற்கான செலவு ரூ.450 மட்டுமே. இந்த முறை மூலம் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொற்றை கண்டறிய நடமாடும் மருத்துவமனைகள் மூலம் சோதனை நடத்தப்பட உள்ளது.
புதுவையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கடைகளை விரைவாக மூடுவதால் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. கடைகள் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கு வணிகர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பற்றி தெரியவந்தால் அந்த விவரங்களை அக்கம்பக்கத்தினர் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 19 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால் லாரி வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுமைகள் பொதுமக்கள் மீது விழுந்துள்ளன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு ஏற்கனவே நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு தலா 5 கிலோ வீதம் 3 மாதங்களுக்கான இலவச அரிசியை வழங்கியுள்ளது. தற்போது மக்கள் பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். எனவே அடுத்து வரும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

புதுச்சேரியில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 531ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,47,741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70,977 பேருக்கும், டெல்லியில் 73,780 பேருக்கும், குஜராத்தில் 29,520 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது.

ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்காவிட்டால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 100 ஆக மாறும் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
சமூக வலைத்தளத்தில் கவர்னர் கிரண்பேடி பதிவிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் புதிதாக 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால் ஒரு நாளைக்கு புதிதாக 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.
தயவு செய்து அனைவரும் வெளியே செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். கடைக்கு செல்லும் போது சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த 3 முறைகளையும் பின்பற்றும் போது நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது அழுக்குப் படிந்த காலணிகளை உங்கள் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளவும். இந்த முறையை பின்பற்றுவதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களை சமூக இடைவெளியுடன் பணி புரியச் செய்வது, கிருமி நாசினிகளை போதுமான அளவு வைத்திருப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க கட்டாயம் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளுடன் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.