என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்ததையொட்டி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து ரேசன் பொருட்களை வழங்கினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
    புதுச்சேரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்கள் 33 சதவீதம் பேர் வேலை செய்ய அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. அப்படி வேலை பார்த்து வந்த நிலையில், முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் இரண்டு நாட்கள் முதல்வர் அலுவலகம் பூட்டப்பட்டது. இதற்கிடையே முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது.

    நிவாரண பொருட்கள் வழங்கிய புதுவை முதல்வர் நாராயணசாமி

    இதனால் இன்று குனிசாம்பேட்டையில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன்பின் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
    புதுச்சேரியில் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல் மற்றும் உள்ளாட்சித்துறை வழிமுறைகளை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதன்படி நேற்று முககவசம் அணியாத 3,254 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1,373 பேருக்கும், எச்சில் துப்பியதாக 48 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவரத்தை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சில இடங்களில் நடவடிக்கை மிக மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    இந்த பதிவில் கவர்னர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-

    காவல் மற்றும் உள்ளாட்சி துறையில் கொடுத்த விவரங்கள் வந்துள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் விதிமுறைகளை அமல்படுத்துவதோடு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதை அமல்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. சமூக இடை வெளியை பின்பற்றுவது, முககவசம் அணிவது ஆகியவற்றில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியியில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் வேலை நடைபெற்றது. இரண்டு நாட்கள் அலுவலகம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

    அதேசமயம் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட அவரது வீடு, அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நாராயணசாமிக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

    நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்யப்பட்டது. 
    புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் வேலை நடைபெற்றது. இரண்டு நாட்கள் அலுவலகம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முதலமைச்சர் நாராயண சாமி உள்பட அவரது வீடு, அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    லிங்காரெட்டிப்பாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கனூர்:

    லிங்காரெட்டிப்பாளையம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 63). கூலி தொழிலாளி. இவருடைய மகள் ராஜேஸ்வரி. சம்பவத்தன்று தந்தை, மகளுக்கிடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட ராஜமாணிக்கம் வீட்டில் இருந்து வெளியேறி, அப்பகுதியில் ஒரு விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி விஜயா (50) காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    புதுவையில் கொரோனா பரவ முக்கிய காரணமாக இருந்த முககவசம் தயாரிக்கும் தொழிற் சாலையின் உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை எல்லைகளில் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகிறார்கள். இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் இதுவரை 619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 388 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 221 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 10 பேர் கொரோனவுக்கு பலியாகி உள்ளனர்.

    மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையில் கொரோனா விதிமீறல்கள் நடந்ததாகவும், இதன்மூலம் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் உழவர்கரை தாசில்தார் குமரன் புகார் செய்தார்.

    அதில், தொழிற்சாலையில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தது, தமிழக பகுதிகளில் இருந்து முறையாக அனுமதி பெறாமல் ஊழியர்களை பணி செய்ய அனுமதித்தது உள்ளிட்ட விதிமீறல்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில் கடந்த சில தினங்கள் முன்பு தொழிற்சாலையில் ஏ.சி. பழுது நீக்குவதற்காக கல்பாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேர் வந்து சென்றுள்ளனர். அவர்கள் மூலமாக கொரோனா தொற்று பரவியது அம்பலமானது.

    அதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் முகக் கவச தொழிற்சாலை உரிமையாளர் லாஸ்பேட்டையை சேர்ந்த சமிர் காம்ரா மற்றும் கல்பாக்கம் விசுவசமுத்திரம் வயலூர் தான்தோனி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்குகள் பிரகாஷ், கண்ணபிரான், ராஜேஷ் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் சமிர் காம்ரா தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என கவர்னர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லும் போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். காய்கறி, மீன் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடைக்காரர்களுக்கும் பங்கு உண்டு.

    எனவே வாடிக்கையாளர்களிடம் முககவசம் அணியும் படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் சொல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    உங்களுக்கு அருகில் யாரேனும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை ஆரோக்கிய சேது செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும். எனவே இந்த செயலியை அனைவரும் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களை பாதுகாக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    கொடாத்தூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று பாதித்து இருப்பது அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருக்கனூர்:

    புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் முககவசம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்தவர்களால் திருக்கனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் முககவசம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்த கொடாத்தூர் காலனியை சேர்ந்த ஒரு பெண் கடந்த சில நாட்களுக்கு முன் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் மூலம் அவரது தந்தைக்கும் தொற்று பரவியது. இவர்கள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது தாய், அக்கா, தம்பி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று பாதித்து இருப்பது கொடாத்தூர் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருக்கனூர் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரியில் மேலும் 29 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 647ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்னிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 647ஆக உயர்ந்துள்ளது. 
    ஊரடங்கு முடியும் வரை அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று காரைக்கால் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டம் முழுவதும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து எல்லைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. சிவப்பு மண்டல பகுதியில் இருந்து இ-பாஸ் வைத்துக்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை அறிக்கையுடன் காரைக்காலுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். வெளியூரில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள் குறித்து அந்த பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும்.

    சமூக வலைதளங்களில் கொரோனா தொடர்பான தவறான தகவலை பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் போக்குவரத்தால் கொரோனா தொற்று பரவுகிறது என சொல்லப்பட்டாலும், இதுகுறித்து இறுதி முடிவை புதுச்சேரி அரசு தான் எடுக்கும். வேளாண் தொழில் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை.

    காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, நெடுங்காடு மற்றும் திருநள்ளாறு சமுதாய நல மையம், விநாயகா மிஷன் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பிற தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை தரக்கூடிய வகையில் சிறப்பு படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. வெண்டிலேட்டர் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் தேவையான அளவு உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க காரைக்கால் அரசு பொது மருத்துவமனைகள் உள்ளன. இது குறித்து பொதுமக்கள் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

    நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வகையிலான சித்தா, ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைகளின் மருந்துகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா ஊரடங்கு முடியும் வரை முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொற்றால் 37 பேர் பாதிக்கப்பட்ட கூனிச்சம்பட்டு கிராமத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
    திருக்கனூர்:

    புதுவை மாநிலம் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான கே.ஆர்.பாளையம், மணலிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கைகிலப்பட்டு, கொடாத்தூர், கூனிச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் கூனிச்சம்பட்டில் மட்டும் 37 பேருக்கு தொற்று உள்ளது.

    இந்த கிராமத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் திருக்கனூர் பகுதியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கூனிச்சம்பட்டு காலனி சமுதாய நலக்கூடத்தில் கொரோனா தொற்று கண்டறியும் ஒருநாள் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலசுப்ரமணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் முழு கவச உடை அணிந்து கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரகுநாதன், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு, மருத்துவக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினர்.

    முகாமில் கூனிச்சம்பட்டு, திருக்கனூர், கைகிலப்பட்டு, கொடாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள் என சுமார் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களின் உமிழ்நீர், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    புதுச்சேரியில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஜூன் 30ம் தேதி முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவலை தடுக்க சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதுச்சேரியிலும், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. பெட்ரோல் பங்குகள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், மதுக்கடைகள் போன்றவை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன. கடற்கரை மூடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 2-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் இதே நிலையில் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ‘புதுவையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து 30ம் தேதி முடிவு செய்யப்படும். மத்திய அரசின் உத்தரவு மற்றும் அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவைப் பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

    சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணத்திற்கு போலீசாரின் மெத்தனப் போக்கே காரணம். போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டுமே தவிர உயிரை எடுக்கக் கூடாது. மீனவர்கள் போராட்டம் நடத்தியதற்கு ஆளுநர் கிரண் பேடியே முக்கிய காரணம் என்றும் முதல்வர் குற்றம்சாட்டினார்.
    ×