என் மலர்
புதுச்சேரி
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவிலில் வேதபுரி ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் அரசு வழிகாட்டுதலின்பேரில் மகா மிருத்யுஞ்ஜெயர் சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், மக்கள் நலன் வேண்டியும் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவிலில் வேதபுரி ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் அரசு வழிகாட்டுதலின்பேரில் நேற்று மகா மிருத்யுஞ்ஜெயர் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அதிகாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. ஏராளமான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை முழங்கினர்.
யாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், கோவில் தனி அதிகாரி சீத்தாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியிலும் ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பதாகவும், நாளை மறுநாள் முதல் கடைகள் இரவு 8 மணி வரை செயல்படலாம் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தது.
பல்வேறு தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகம் எடுத்தது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கிருந்து வந்தவர்களால் தான் புதுச்சேரியில் தொற்று அதிகமாவதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து கடற்கரையை மூடியும், கடைகள், பூங்காக்கள் திறக்கும் நேரத்தை குறைத்தும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் புதுவையிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்து வந்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி புதுவை மாநிலத்திலும் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், கோச்சிங் சென்டர், தியேட்டர்கள், மதுபார்கள் ஆகியவை தொடர்ந்து முழுமையாக மூடப்பட்டு இருக்கும். நமது மாநிலத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பினையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளோம். சென்னையில் இருந்து வருபவர்களால் புதுவையில் தொற்று அதிகமாக பரவியது. கொரோனா பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமானதாகும்.
ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை தவிர்க்க வேண்டும். 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதித்தோம்.
இப்போது அமைச்சர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் மக்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே உள்ள தளர்வுகள் நாளை (வியாழக்கிழமை) வரை அமலில் இருக்கும். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. அதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் செயல்படலாம். ஓட்டலுக்கும் இது பொருந்தும். விதிகளை யாராவது மீறினால் அபராதம் விதிக்கப்படும். வெளிமாநிலத்தவர் பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூனிச்சம்பட்டில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு காலனியில் கொரோனா தொற்றால் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கூனிச்சம்பட்டு காலனிக்கு சென்று, ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தடுப்புக்கு வெளியே இருந்தபடி, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. திருக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

போராட்டம் நடத்திய வனத்துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வனத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வனத்துறை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் முக கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வனத்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும்போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்தநிலையில் ஊரடங்கை மீறி போராட்டம் நடத்தியதாக ஊழியர்கள் மீது வனத்துறை அதிகாரி புகார் செய்தார். அதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வனத்துறை ஊழியர்களான லாரன்ஸ், கார்த்திகேயன், வாழுமுனி, அகில்தாசன், செந்தில்குமார், எம்.கார்த்திகேயன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊழியர்கள் வனத்துறை அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று ஊழியர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி அங்கு வந்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஊழியர்களின் பிரச்சினையை தீர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் காரைக்காலுக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரைக்கால்:
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 16-ந் தேதி கல்லணை வழியாக, காவிரி டெல்டா மாவட்ட சாகுபடிக்கு திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் அருகே உள்ள நூலாறு தடுப்பணைக்கு நேற்று காலை காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது.
காரைக்கால் மாவட்ட குறுவை சாகுபடிக்காக தடுப்பணையில் இருந்து அமைச்சர் கமலக்கண்ணன் தண்ணீரை திறந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 4,500 ஹெக்டேர் பரப்பில் காவிரி தண்ணீரை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. காவிரி தண்ணீர் விவசாய நிலங்களுக்கு எளிதில் செல்ல ஏதுவாக ரூ.48 லட்சம் செலவில் பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு சில பாசன வாய்க்கால் களை விரைவில் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காவிரி தண்ணீர் காரைக்காலுக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுவையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது பிணத்தை ரோட்டில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை தோப்பு மாரியம்மன் கோவில் அருகே மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, தலையில் வெட்டு காயங்கள் இருந்தன. முகம் சிதைக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தது.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் பிணமாக கிடப்பவர் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.
சம்பவ இடத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான அன்பழகனும் விரைந்து வந்தார். கொலை நடந்தது குறித்து அவர் விசாரித்தார். இந்தநிலையில் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி அமல்தாஸ் (வயது35) என்பது தெரியவந்தது. பிரபல ரவுடியான இவர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். பிரபல ரவுடி கறுவா செந்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.
அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து ரவுடி அமல்தாஸ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள்அமல்தாசை வெட்டிக் கொலை செய்ததுடன் முகத்தை சிதைத்து பிணத்தை ரோட்டில் வீசி விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று கருதி உப்பளம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகளை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் ரவுடி அமல்தாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் பொதுமக்களுக்கு தொல்லை தரக்கூடாது என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் எனது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. 5 நாட்கள் என்னைத் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நான் வீட்டிலிருந்து எனது பணிகளை கவனிக்கிறேன்.
புதுவையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூனிச்சம்பட்டு பகுதியில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் மூலம் இந்த தொற்று பரவியுள்ளது. இதுதொடர்பாக கூனிச்சம்பட்டு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தேன். கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே நடமாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாரிடம் கூறி உள்ளேன். ஆனால் சிலர் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்வதாக புகார் வருகிறது. அது அவர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.
அரசின் முயற்சியால் தற்போது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது. கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த கூறி உள்ளேன். ஊரடங்கின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து முடிவு எடுப்போம். காவல்துறையினர் மக்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் வருகின்றன.
இந்த நேரத்தில் மக்கள் முக கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்பதை மட்டுமே காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். இது ஆவணங்களை கேட்க வேண்டிய நேரம் அல்ல. இதுகுறித்து எம்.எல்.ஏ.க்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுவைக்கு மத்திய அரசு நிதி தரவில்லை. மாநில அரசின் நிதியில் இருந்து தான் திட்டங்களை செயல்படுத்துகிறோம். நமது நிதியை நம்பி மட்டுமே நாம் உள்ளோம். இந்த நேரத்தில் காவல்துறையினரும், உள்ளாட்சித்துறையினரும் மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. புதுவைக்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியில் இருந்து அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். சில இடங்களில் இது வழங்கப்படாமல் உள்ளது. அங்கும் நிவாரணப் பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நிதி பற்றி கவலைப்பட வேண்டாம். இதேபோல் எதிர்ப்பு சக்தியை தரும் ஓமியோபதி மாத்திரையை அனைத்து குடும்பத்தினருக்கும் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி உயரும். இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 18 லட்சம் கோடி மத்திய அரசு சம்பாதித்துள்ளது. அதை மக்களிடம் கொடுக்காமல் மேலும் மேலும் சுமையை ஏற்றி வருகிறார்கள். இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன்.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கவர்னர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாம் வெளியில் செல்லும்போது யாரேனும் ஒருவர் முககவசத்தை சரியாக அணியாமலும், சமூக இடைவெளியை பற்றி புரிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் கடைக்காரராகவும் இருக்கலாம், வாடிக்கையாளராகவும் இருக்கலாம், அவர் கிராமப்புற தொழிலாளியாகவும் இருக்கலாம், காய்கறி சந்தைகளில் தேவையானதை வாங்குவதற்கு வந்தவராகவும் இருக்கலாம், அவருடைய செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவேற்றாமலும் இருக்கலாம். இதுபோன்று பாதுகாப்பற்று இருப்பது அச்சுறுத்தலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
நமக்கு அண்டை மாநிலமான தமிழகம் இன்னும் பொது முடக்கத்தில் இருந்து விடுபடவில்லை. நாம் ஏன் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தாமதித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பழகுபவர்களிடம் இருந்தே நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் நமக்கு தெரியாது.
முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல், ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்துதல் என்ற 4 பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பது உங்களுடைய சொந்த பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த 4 பாதுகாப்பு வழி முறைகளையும் பின்பற்றுவதை உங்களுடைய குறிக்கோளாக கொள்ள வேண்டும். அனைவரும் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என அரசு செயலர் உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா ரூ.5,500 வீதம் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டுக்கான நிவாரணத்தொகை தடை காலம் முடிந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. தடைக் கால நிவாரண தொகை வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் கடலில் படகில் சென்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண தொகை வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் மீன்வளத்துறை செயலர் பூர்வா கார்க் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி வாழ் மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் நல உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவாக திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவானது மீன்பிடி தடைக்காலம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மற்றும் வருமானம் இழந்து தவிக்கும் மீனவ குடும்பங்களை பயனடைய செய்யும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையானது ஒவ்வொரு மீனவ பயனாளி குடும்பத்திற்கும் ரூ.5,500 வீதம் விரைவில் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது மீன்வளத்துறை இயக்குனர் முத்துமீனா உடனிருந்தார்.

புதுச்சேரியில் ஒரேநாளில் 32 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 722ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 5.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3.34 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 86,224 பேருக்கும், டெல்லியில் 85,161 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 722ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மணவெளி தொகுதி கட்டபொம்மன் நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
அரியாங்குப்பம்:
புதுச்சேரி மணவெளி தொகுதி கட்டபொம்மன் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்கள் சிமெண்டு சாலையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், 5-வது குறுக்கு தெரு மட்டும் தார் சாலையாகவே உள்ளது. இந்த தெருவில் வாய்க்கால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவிலேயே குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தார்சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி, கழிவுநீர் வழிந்து செல்ல கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைத்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாகூர்:
புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மரில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி கிருமாம்பாக்கம், கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற சுமார் 20 நோயாளிகள், கடந்த சில நாட்களுக்கு முன் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கிருமாம்பாக்கம் சுற்றுப்பகுதி மற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் பல்வேறு நோய்களுக்காக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் புறநோயாளிகளாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறுவதால், மற்ற நோயாளிகள் சிகிச்சைக்கு வர தயங்குகின்றனர். தங்களுக்கு நோய் தொற்று பரவி விடுமோ என்று அச்சப்படுகின்றனர். கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிராம மக்களும் கொரோனா பீதியில் இருந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் இருந்து தங்களது பகுதிக்கும் நோய் தொற்று எளிதாக பரவ வாய்ப்பு உள்ளதால், கொரோனா வார்டை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் கந்தசாமியிடமும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.