என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரியில் ஒரேநாளில் 32 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் ஒரேநாளில் 32 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 722ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்தியாவில் 5.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3.34 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 86,224 பேருக்கும், டெல்லியில் 85,161 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 722ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×