என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
    X
    தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

    மணவெளி தொகுதி கட்டபொம்மன் நகரில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

    புதுச்சேரி மணவெளி தொகுதி கட்டபொம்மன் நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    அரியாங்குப்பம்:

    புதுச்சேரி மணவெளி தொகுதி கட்டபொம்மன் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்கள் சிமெண்டு சாலையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், 5-வது குறுக்கு தெரு மட்டும் தார் சாலையாகவே உள்ளது. இந்த தெருவில் வாய்க்கால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவிலேயே குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே தார்சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி, கழிவுநீர் வழிந்து செல்ல கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×