என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைத்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாகூர்:
புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மரில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி கிருமாம்பாக்கம், கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற சுமார் 20 நோயாளிகள், கடந்த சில நாட்களுக்கு முன் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கிருமாம்பாக்கம் சுற்றுப்பகுதி மற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் பல்வேறு நோய்களுக்காக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் புறநோயாளிகளாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறுவதால், மற்ற நோயாளிகள் சிகிச்சைக்கு வர தயங்குகின்றனர். தங்களுக்கு நோய் தொற்று பரவி விடுமோ என்று அச்சப்படுகின்றனர். கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிராம மக்களும் கொரோனா பீதியில் இருந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் இருந்து தங்களது பகுதிக்கும் நோய் தொற்று எளிதாக பரவ வாய்ப்பு உள்ளதால், கொரோனா வார்டை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் கந்தசாமியிடமும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story