search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி தண்ணீர்
    X
    காவிரி தண்ணீர்

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் காரைக்காலுக்கு வந்தது

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் காரைக்காலுக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    காரைக்கால்:

    மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 16-ந் தேதி கல்லணை வழியாக, காவிரி டெல்டா மாவட்ட சாகுபடிக்கு திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் அருகே உள்ள நூலாறு தடுப்பணைக்கு நேற்று காலை காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது.

    காரைக்கால் மாவட்ட குறுவை சாகுபடிக்காக தடுப்பணையில் இருந்து அமைச்சர் கமலக்கண்ணன் தண்ணீரை திறந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 4,500 ஹெக்டேர் பரப்பில் காவிரி தண்ணீரை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. காவிரி தண்ணீர் விவசாய நிலங்களுக்கு எளிதில் செல்ல ஏதுவாக ரூ.48 லட்சம் செலவில் பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு சில பாசன வாய்க்கால் களை விரைவில் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    காவிரி தண்ணீர் காரைக்காலுக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×