என் மலர்
செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி
ஊழியருக்கு கொரோனா: புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமிக்கு பரிசோதனை
புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் வேலை நடைபெற்றது. இரண்டு நாட்கள் அலுவலகம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் நாராயண சாமி உள்பட அவரது வீடு, அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story






