என் மலர்
செய்திகள்

ஆய்வு செய்த நாராயணசாமி
கொரோனா பரிசோதனைக்குப்பின் ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்ததையொட்டி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து ரேசன் பொருட்களை வழங்கினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்கள் 33 சதவீதம் பேர் வேலை செய்ய அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. அப்படி வேலை பார்த்து வந்த நிலையில், முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் இரண்டு நாட்கள் முதல்வர் அலுவலகம் பூட்டப்பட்டது. இதற்கிடையே முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது.

இதனால் இன்று குனிசாம்பேட்டையில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன்பின் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
Next Story






