என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14,894 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 70,390 பேருக்கும், தமிழகத்தில் 67,468 பேருக்கும், குஜராத்தில் 28,943 பேருக்கும், ராஜஸ்தானில் 16,009 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12,448 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் மாஹே பகுதிகளில் 32 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது.

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை முதல் நிறுத்தப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுகாதாரத்துறை பரிந்துரையின்பேரில் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஓட்டல்களில் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். அதன்பிறகு இரவு 8 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நடைமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தயாரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அளிக்க உள்ளோம். நாள்தோறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மீண்டும் முற்றிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்ற உள்ளோம்.
அங்கு தற்போது செயல்பட்டு வரும் நோயாளிகள் சிகிச்சை பிரிவு (ஓ.பி.டி.) நாளை (வியாழக்கிழமை) முதல் நிறுத்தப்படும். கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். இங்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் சட்டசபை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுவர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படும். கிராமப் புறங்களில் வெளியூரில் இருந்து வந்தவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க அந்தந்த கிராமத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் உள்ள அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி கடைகளை மதியம் 2 மணிக்குள் மூடவேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 2-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களால் கொரோனா அதிகரித்து வருகிறது. கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்காக புதுவைக்கு ரூ.995 கோடி தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு 17 முறை கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் மோடி இதுவரை செவிசாய்க்கவில்லை.
மாறாக பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதில் ரூ.18 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்த பணத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
படிப்படியாக தளர்வுகள் கொண்டு வந்தாலும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுவையில் நேற்று முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் கடற்கரை மூடப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் கடைகள், பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டன.
புதுச்சேரி:
உலகையே மிரட்டிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கத்துக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி அறிவிக்கப்பட்ட தளர்வுகளை வாபஸ் பெற்று பல மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் புதுவை மாநிலத்திலும் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள், பெட்ரோல் பங்குகள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் பெட்ரோல் பங்குகள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், மதுக்கடைகள் போன்றவை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும். கடற்கரை மூடப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அரசால் அறிவிக்கப்பட்டன. 10 நாட்களுக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று காலை முதல் அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் மீண்டும் புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, புஸ்சி வீதி, மறைமலை அடிகள் சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள், மார்க்கெட்டுகள் ஆகியவை மதியம் 2 மணி வரை செயல்பட்டன. அதன்பிறகு 3 மணி வரை கடைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின் அவை முழுமையாக மூடப்பட்டன. நடைபயிற்சி மேற்கொள்வதற்காக கடற்கரை சாலைக்கு ஒரு சிலர் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். பொழுது போக்குவதற்காக பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த கடற்கரை, மார்க்கெட்டுகள், கடை வீதிகள், பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் பூத்துகள் மாலை 6 மணி வரை செயல்பட்டன. எந்த தடையும் இல்லாததால் மருந்துக்கடைகள் வழக்கம் போல் இயங்கின.
நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
மதியம் 2 மணிக்கு மேல் நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடைகளை திறந்து வைத்து இருந்த ஒரு சிலரை உடனே மூடுமாறு எச்சரித்தனர். மதியம் 3 மணிக்கு மேல் நகர் முழுவதும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், தவளக்குப்பம், திருக்கனூர், வில்லியனூர், திருபுவனை ஆகிய பகுதிகளிலும் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று முன்தினம் கவர்னர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அறிவார்ந்த செயல்பாடுகளுடன் கொரோனா பாதிப்புகளை குறைப்பதற்கு நிர்வாகத்துக்கு தற்போதைய தேவை ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் கூடிய பங்களிப்பு மற்றும் தொற்று குறைவதற்காக செய்யப்படும் செயல்பாடுகள் போன்றவை ஆகும். அனைவரும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுடன் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதும், பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பாற்றுவதையும் நம்முடைய குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதை பற்றியும், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது பற்றியும், பாதுகாப்பு முறைகள் பற்றி தெரிவித்து அதற்கு மக்கள் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது பற்றியும், நிர்வாக செயல்பாடுகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது பற்றியும் கவர்னர் மாளிகையில் ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறோம்.
கவர்னர் அலுவலகம் ஒரு சாதாரண பார்வையாளராக மட்டும் இருக்காது. யூனியன் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு கவர்னர் அலுவலகம் ஒரு நிலையான பங்களிப்பாளர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அந்த பங்களிப்பு மற்றும் சேவை நோக்கத்திற்காகத்தான் கவர்னர் அலுவலகம் உள்ளது.
எந்த ஒரு பங்களிப்பையும் கொடுக்காமல் இருப்பது எளிதான வேலை தான். இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஒரு கால சூழ்நிலை ஆகும். இந்த காலகட்டத்தில் பதில்களை வலுப்படுத்தாமல் சுருக்கமாக சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாகும். நாங்கள் உங்களுடைய (அமைச்சர்களுடைய) நிர்வாகம் சார்ந்து போட்டியிடவில்லை. மாறாக, உங்களுடைய ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பொதுவான நோக்கத்துக்காக உழைக்கிறோம்.
புதுச்சேரி மக்களின் நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு இன்றியமையாதது ஆகும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் கவர்னர் அலுவலகம் வரவேற்கிறது. எங்களுடைய நோக்கங்களை சந்தேகிக்க தேவை இல்லை. ஒவ்வொருவருடைய மதிப்புமிக்க பங்களிப்பை கவர்னர் மாளிகை மதிக்கிறது என்பதை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும். கொரோனா மனிதர்களுடைய எதிரி. இதைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த பொறுப்புடன் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்று காலை வரை கொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டிய நிலையில் 56.7 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,010 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 64,603 பேருக்கும், டெல்லியில் 66,602 பேருக்கும், குஜராத்தில் 28,371 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12,261 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கடற்கரை சாலை பழைய கோர்ட்டு வளாகம் அருகே நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியகடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த பெண் கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். போலீசார் கடலில் இறங்கி அந்த பெண்ணை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கதிர்காமம் மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார்பேட்டை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் மரப்பாலம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் திருடிய அரியாங்குப்பம் ராம்சிங் நகரை சேர்ந்த ரமணா (வயது 24) என்பவரை கைது செய்தனர். கொரோனா பரிசோதனை செய்வதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
அங்கு ரமணாவுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். நேற்று நள்ளிரவில் ரமணாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புதுவை மாநில எல்லையான சேதராப்பட்டு-மயிலம் சாலையில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் தாராளமாக சென்று வருகின்றனர்.
காலாப்பட்டு:
கொரோனா அச்சுறுத்தலையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை தடுக்க புதுவை மாநில எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழக பகுதியில் இருந்து புதுவைக்கு வரும் 80-க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. மருத்துவம், அத்தியாவசியப் பணிகளுக்காக வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் 5-வது கட்ட ஊரடங்கின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையொட்டி புதுவையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 400-ஐ நெருங்கியுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் அங்கிருந்து ரகசியமாக வந்தவர்களால் தான் தொற்று பரவுவதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இதையடுத்து புதுவை மாநில எல்லைகளான கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய நுழைவாயில்களில் கெடுபிடி காட்டப்பட்டது.
இதனால் கடலூர், விழுப்புரம் மற்றும்கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்கான உரிய ஆவணங்களுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கெடுபிடிகள் அடுத்த சில நாட்களில் ஓய்ந்து தளர்ந்து போனது. அதாவது கடலூர், விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் புதுவையில் வேலை செய்வதற்கான அடையாள அட்டை மற்றும் இங்குள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து எளிதாக வந்து செல்கின்றனர்.
புதுச்சேரி- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கனகசெட்டிகுளம், புதுச்சேரி - மயிலம் சாலையில் சேதராப்பட்டு ஆகிய எல்லைகளில் எந்த கெடுபிடியும் கண்காணிப்பும் இல்லை. தடுப்புகள் கூட அங்கு சரிவர அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த வழியாக எந்தவித தயக்கமுமின்றி வெளிமாநிலத்தவர்கள் சர்வ சாதாரணமாக வாகனங்களில் புதுவைக்கு வந்து செல்கின்றனர்.
இதேபோல் முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகிய எல்லைகளிலும் முன்பிருந்த கெடுபிடிகள் இல்லை. இதனால் புதுவையில் மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகும் நிலை இருந்து வருகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க எல்லைகளில் மீண்டும் கெடுபிடிகளை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள ஒருசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காலத்தில் புதுவையில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டன. சொந்த ஊர்களுக்கு அவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இனிவரும் காலங்களில் புதுச்சேரியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அவர்களையும் அனுப்ப அரசு ஏற்பாடு செய்து உள்ளது. எனவே ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் http;//welcomeback.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பதிவு செய்து உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தை மீண்டும் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருகிற 26-ந்தேதிக்குள் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கவர்னர் மாளிகையின் செலவு இருமடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு நலத்திட்டங்களுக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் பல்வேறு கேள்விகளை கேட்டு கவர்னர் கிரண்பேடி திருப்பி அனுப்பி வருகிறார். இதனால் அரசின் வளர்ச்சி திட்டங்களை தடுத்து வருவதாக அவர் மீது அமைச்சரவை குற்றஞ்சாட்டி வருகிறது.
ஏனாமின் வளர்ச்சி திட்டங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் கொடுக்கவில்லை என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் போராட்டம் நடத்தினார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்த நிலையில் அவர்களை ஏனாமிற்குள் அனுமதிக்க கவர்னர் கிரண்பேடி மறுத்துவிட்டார்.
இதனை கண்டித்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சட்டசபையில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதில் என்ன நியாயம்? என கேள்வி விடுத்ததுடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகையின் கடந்த 10 ஆண்டு செலவினங்களை பெற்று வெளியிடப்போவதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து கடந்த மே 8-ந்தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில், புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகை விவரம் குறித்த தகவலை கேட்டு இருந்தார். அதுபற்றிய விவரம் மல்லாடிகிருஷ்ணாராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2010-11ல் ரூ.3.09 கோடி, 2011-12ல் ரூ.2.91 கோடி, 2012-13ல் ரூ.3.82 கோடி, 2013-14ல் ரூ.3.50 கோடி, 2014- 15 ரூ.3.55 கோடி, 2015-16 ரூ.3.27 கோடி, 2016-17 ரூ. 4.07 கோடி, 2017-18 ரூ. 4.87 கோடி, 2018-19 ரூ. 6.04 கோடி, 2019-20 ரூ. 6.19 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2013 ஜூலை வரை புதுவை கவர்னராக இக்பால்சிங், 2013 ஜூலை முதல் 2014 ஜூலை வரை வீரேந்திர கட்டாரியா, 2014 ஜூலை முதல் 2016 மே மாதம் வரை அஜய்குமார் சிங் ஆகியோர் கவர்னராக இருந்தார்கள். கிரண்பேடி கடந்த 2016-ம் ஆண்டு மே 29-ந்தேதி கவர்னராக பொறுப்பேற்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் கவர்னர் மாளிகையின் செலவு இருமடங்காக உயர்ந்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

புதுவையில் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனாவால் நேற்று 64 வயது முதியவர் பலியானார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று 255 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 12 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 13 பேர் ஜிப்மரிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள்.
கிருமாம்பாக்கத்தை அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 64 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் புதுவையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனாவிற்கு மொத்தம் 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 159 பேர், ஜிப்மரில் 50 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் ஒருவர் என 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் கதிர்காமம் மருத்துவக்கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் ஒருவர் என 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 12,409 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11,866 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 190 பரிசோதனைகளுக்கு முடிவு வரவேண்டியுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் கூறுகையில், தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது 3 இலக்கத்துக்கு உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. புதிதாக ஊருக்குள் வருபவர்கள் பற்றி தெரியவந்தால் உடனே அரசுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும். வயது வித்தியாசமின்றி கொரோனா தாக்கி வருகிறது. வயதானவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்று யாரும் கருத வேண்டாம். எனவே பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.