என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூரில் வேளாண்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சிவகணபதிநகரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது52). இவர் வேளாண்துறையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாராயணசாமி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மகன்கள் திவாகர் மற்றும் சுதாகர் ஆகியோர் நாராயணசாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


    புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

    புதுவை கடற்கரை சாலை

    ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


    புதுச்சேரி கடற்கரை சாலை, பூங்கா ஆகியவை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சிக்காக திறந்திருக்கும். கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும். உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.

    முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன் எச்சரித்து வருகின்றனர்.
    காரைக்கால்:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன் எச்சரித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் காரைக்கால் பஸ்நிலையம் அருகே அனைத்து மகளிர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக கீதா போலீசாருடன் முகாமிட்டு முககவசம் அணியாமல் செல்வோர் மீது அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, ஸ்கூட்டரில் வந்த, காரைக்கால் நலவழித்துறை ஊழியர் கோமதி (வயது31) என்பவர், முகக்கவசம் அணியாமல், தனது துப்பட்டாவால் முகத்தை மூடி வந்துள்ளார். காற்றில் துப்பட்டா பறந்ததும், அதை கவனிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது.

    போலீசாரை பார்த்தவுடன், கோமதி தனது துப்பட்டாவை மீண்டும் முககவசமாக மாற்றியுள்ளார். இதைப்பார்த்த கீதா, அந்த பெண்ணின் ஸ்கூட்டரை நிறுத்தி, முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக, அபராதம் விதிக்க முயன்றார். அப்போது, கோமதி, ஆவேசமாக சத்தம் போட்டு, நான் ஏற்கனவே அபராதம் கட்டியுள்ளேன். என் வண்டியில் முககவசம் உள்ளது. அதனால், இப்போது அபராதம் கட்ட முடியாது என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர்.

    இந்த சம்பவத்தை வீடியோ படம் எடுத்தவரையும் கோமதி ஆவேசமாக பேசி திட்டினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதுபற்றி விவரம் அறிந்து, காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியரான கோமதி மீது, போலீஸ் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    உள்ளாட்சித்துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 20 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.15 கோடியே 91 லட்சம் என மொத்தம் ரூ.49 கோடியே 63 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்-2-ன் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 25 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.33 கோடியே 72 லட்சம், உள்ளாட்சித்துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 20 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.15 கோடியே 91 லட்சம் என மொத்தம் ரூ.49 கோடியே 63 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    அதேபோல் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் புதுச்சேரி முதியோர் பாதுகாப்பு சங்கத்திற்கு (பாண்கேர்) நிதி உதவியாக ரூ.93 லட்சத்து 15 ஆயிரத்து 64 வழங்கியதற்கான செலவினத்திற்கு பிந்தைய ஒப்புதல் அளித்துள்ளார்.


    காரைக்கால் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நகர் பகுதியான ரோஜா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த காரைக்கால் மீராப்பள்ளி தோட்டத்தை சேர்ந்த முகமது கைப் (வயது 21) என்பவரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி மந்திரி சபையில் இடம் பிடித்துள்ள சந்திர பிரியங்கா கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலையை ஊக்குவிப்பதும்தான் இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த 23-ந்தேதி இறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இந்த பட்டியலில் என்.ஆர். காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய்.சரவண குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இந்த அமைச்சர்கள் பட்டியலுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடைபெற்றது. புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கான மத்திய அரசின் உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் வாசித்தார். 

    அதைத்தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஐந்து பேரில் சந்திய பிரியங்கா பெண் அமைச்சராவார். இதன்மூலம் 41 வருடத்திற்குப் பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

    அமைச்சராக பதவி ஏற்றது குறித்து சந்திர பிரியங்கா கூறுகையில் ‘‘கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலையை ஊக்குவிப்பதுதான் எனது இலக்கு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. நான் எனது வேலை மூலம் இதை நிரூபிப்பேன்’’ என்றார்.
    புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த 23-ந் தேதி இறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய். சரவண குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இந்த அமைச்சர்கள் பட்டியலுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    அமைச்சராக பதவியேற்ற நமச்சிவாயம்

    இதையடுத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடைபெற்றது. புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கான மத்திய அரசின் உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் வாசித்தார். 

    அதைத்தொடர்ந்து, முதல்வர்  ரங்கசாமி முன்னிலையில், நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 
     
    புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். புதுவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் அமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3, பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் என புதுச்சேரியில் அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. இதற்கான விழா கவர்னர் மாளிகை முன் எளிய முறையில் நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை.

    இந்தநிலையில் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், 23-ந் தேதி புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய்.சரவணன் குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

    இந்தநிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு தொடர்பான அறிவிப்பும் அதிகாரபூர்மாக வெளியிடப்பட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.

    இதற்கான விழா கவர்னர் மாளிகை முன் எளிமையாக நடக்கிறது.

    பதவி ஏற்பு விழா மேடைக்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிறார். புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கான மத்திய அரசின் உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் வாசி்க்கிறார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

    புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற தகராறில் கூலி தொழிலாளிக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே செம்பியப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது50). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சாராயக்கடைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் அதிக குடிபோதையில் சிவாவை பார்த்து எங்கள் தெருவிலேயே மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி செல்கிறாயா? என தகராறு செய்தார். அதற்கு சிவா நீ யார் கேட்பது என கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து சிவாவின் தலையில் வெட்டினார். இதனை சிவாவின் மகன்கள் பிரகாஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தடுக்க முயன்றார்.

    அப்போது பவித்ரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் பார்த்தீபன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் தடி மற்றும் இரும்பு கம்பியை எடுத்து வந்து சிவா மற்றும் அவரது மகன்கள் பிரகாஷ், மணிகண்டன் ஆகியோரை தாக்கினர். மேலும் பாட்டிலாலும் குத்தினர். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவா கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து சிவாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகவும், குணமடைவது 95.95 சதவீதமாகவும் உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 363 பேர் குணமடைந்துள்ளார். தற்போது 493 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 477 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர். அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் காந்தி வீதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவ்வை நகரைச் சேர்ந்த 68 வயது முதியவர், ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த 75 வயது முதியவர், முகமதியா நகரைச் சேர்ந்த 72 வயது முதியவர், காரைக்காலில் அக்கரை வட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஆகியோர் பலியாகி உள்ளனர்.

    புதுவையில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகவும், குணமடைவது 95.95 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 28 பேரும், முன்களப் பணியாளர்கள் 13 பேரும், பொதுமக்கள் 6 ஆயிரத்து 886 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 402 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக ஜனார்த்தனன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 44). திருவக்கரையில் உள்ள கல்குவாரி கிரஷரில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி உமாதேவி.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக ஜனார்த்தனன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் குடும்பம் நடத்த வழியில்லாமல் தவித்து வந்தார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜனார்த்தனன் வீட்டின் மாடியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி கண் டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் சுரேந்தர் வயது (21) இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தாயார் லட்சுமி (45) கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்தர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதிய கட்டிடம் கட்டுவதற்கான தோராயமான மதிப்பீட்டு தொகையை கணக்கிட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்குழு அமைந்துள்ள இடத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால் அது செயல் வடிவம் பெறாமல் போய்விட்டது.

    இந்தநிலையில் மீண்டும் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்ற சபாநாயகர் பிற மாநில சபாநாயகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதுவையில் புதிய சட்டமன்ற வளாகம் கட்ட ரூ.220 கோடி வழங்கவேண்டும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார்.

    இந்தநிலையில் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் இணைந்த புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், அசோக் பாபு, பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் கந்தசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, வேளாண் துறை இயக்குனர் பாலாகாந்தி, சட்டசபை செயலாளர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது புதிய கட்டிடம் கட்டுவதற்கான தோராயமான மதிப்பீட்டு தொகையை கணக்கிட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் எந்த வடிவமைப்பில் கட்டிடம் கட்டுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
    ×