என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 50-க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் அர்ச்சகர் லட்சகணக்கில் பணம்- நகை பெற்றுள்ளார். ரூ.10 ஆயிரம் முதல் 10 பவுன் நகை வரை அவர் பெண் பக்தர்களிடம் பெற்றுள்ளார்.
    • அர்ச்சகரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த பெண் பக்தர்கள், தனியாக போலீசாரிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சின்னையாபுரம் அக்கா சுவாமிகள் மட வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.

    இவர் உருளையன்பேட்டையில் உள்ள அம்மன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். 2020-ம் ஆண்டு கிருஷ்ணனுக்கு, சென்னையை சேர்ந்த ரமா என்ற மகாலட்சுமி(55), அவரின் மகன் சபரி ஆகியோர் அறிமுகமாகினர். அவர்கள் தமிழக குடிசை மாற்றுவாரியத்தில் பணியாற்றுவதாகவும், கிருஷ்ணனுக்கு வீடுகட்ட ரூ.1.50 கோடி கடன் பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த கடனை 6 மாதத்தில் தள்ளுபடி செய்து தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய கிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.2.50 கோடி கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கித்தரவில்லை.

    இதனால் பணத்தை திருப்பிக்கேட்டபோது இழுத்தடித்து வந்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணன், புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, தாய், மகன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

    கோவிலில் அர்ச்சகராக சொற்ப சம்பளத்தில் பணியாற்றுபவர் ரூ.2.50 கோடி அளித்தது எப்படி? என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அர்ச்சகர், பணம் திரட்டியுள்ளது தெரியவந்துள்ளது. தனித்தனியாக ஒவ்வொரு பெண் பக்தர்களிடம் வீடு கட்டி வருவதாகவும், கடனாக அளித்தால், அதை திருப்பித்தருவதாகவும் கூறி பணம் பெற்றுள்ளார்.

    50-க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் அவர் லட்சகணக்கில் பணம்- நகை பெற்றுள்ளார். ரூ.10 ஆயிரம் முதல் 10 பவுன் நகை வரை அவர் பெண் பக்தர்களிடம் பெற்றுள்ளார்.

    தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் பெண் பக்தர்கள் பணம், நகையை அர்ச்சகரிடம் வழங்கியுள்ளனர். இந்த பணத்தை பெற்று தாய், மகனிடம் அளித்துள்ளார்.

    பெண்கள் தங்கள் பணம், நகையை கேட்டு வற்புறுத்தியதால்தான் அர்ச்சகர் போலீசில் புகார்செய்துள்ளார். அர்ச்சகரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த பெண் பக்தர்கள், தனியாக போலீசாரிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • வில்லியனூர் அருகே ஓட்டல் ஊழியரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலையாளிகளை அடையாளம் காண கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து கீழ்குமாரமங்கலம் வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    வில்லினூர் அருகே கரிக்கலாம்பாக்கம் அருகே தமிழக பகுதியான கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அசோக்(வயது25). இவர் புதுவையில் உள்ள பிரபல ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அகிலா என்ற மனைவி 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்தநிலையில் நேற்று அசோக் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அசோக் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கம்-குமாரமங்கலம் ரோட்டில் சாராயக்கடை பின்புறம் இன்று காலை அசோக் தலையில் ரத்த காயங்களுடன் அருகில் உள்ள வாய்க்கால் ஓடையில் பிணமாக கிடந்தார். அவ்வழியாக வயல் வேலைக்கு சென்றவர்கள் இதனை பார்த்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அசோக்கை யாரோ மர்மநபர்கள் வேறு இடத்தில் அடித்து கொலை செய்து நள்ளிரவில் உடலை எடுத்து வந்து வாய்க்காலில் வீசி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசோக்கை கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை அடையாளம் காண கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து கீழ்குமாரமங்கலம் வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அசோக் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.
    • 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையும் வழங்கவில்லை. கோரிக்கை களை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.

    7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையும் வழங்கவில்லை. கோரிக்கை களை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதை கண்டித்து அரசு கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பட்டை அடைந்து முதல் கல்லூரிரிகளின் வாசல் முன்பு போராட்டத்தை தொடங்கினர்.

    4 பிராந்தியத்தில் உள்ள 7 கல்லூரிரிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்ட த்தில் பங்கேற்றனர். இரவு முழுவதும் கல்லூரி வளாகத்திலேயே தங்கிய பேராசிரியர்கள் கஞ்சி காய்ச்சி சாப்பிட்டனர். புதுவை பாரதிதாசன் கல்லூரியில் கொசுவலை அமைத்து அதற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பணிகளுக்கு நடுவே போராட்டத்தை தொடர்வோம் என பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி 2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    • அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் உழவர்கரை நகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு துணைத்தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் உழவர்கரை நகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு துணைத்தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். கம்யூனிஸ்டு (எம்.எல்.) மாநில செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில செயலாளர் புருஷோத்தமன், மாநில தலைவர் மோதிலால், அகில இந்திய விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்க தேசிய கவுன்சில் உறுப்பினர் கோ.பழனி, மத்திய பணிக்குழு உறுப்பினர், முருகன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில செயலாளர் விஜயா, மாநில தலைவர் மல்லிகா, புரட்சிகர இளைஞர் கழக அமைப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கியாஸ், பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    • மங்கலம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஆரியப்பாளையம் விஜயலட்சுமி நகருக்கு சாலை, மங்கலம் கிராமத்தில் ஜி.எம்.ஆர். ஸ்ரீராம் நகர் சாலை, திருக்காஞ்சி, ஆண்டியார்பாளையம், பங்களாமேடு, தன லட்சுமிநகர், குமாரசாமி நகர் பகுதிகளுக்கு சாலை, மங்கலம் தொகுதி ஆச்சார்யபுரம், நடேசன் நகர் பகுதிக்கு சாலை அமைக்க ரூ.1.50 கோடிக்கு அனுமதி பெறப்பட்டது.

    இந்த பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை விழா இன்று நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், ஊர்பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை பா.ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் மூலக்குளம் ரீனா மஹாலில்ந டைபெற்றது.
    • செயற்குழு கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் மூலக்குளம் ரீனா மஹாலில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    பிரிவுகளின் பொறுப்பாளர்கள் அருள் முருகன், சரவணன், ஊடகப் பிரிவு அமைப்பாளர் குருசங்கரன், சமூக ஊடகப் பிரிவு அமைப்பாளர் கார்த்திகேயன் ஐ.டி. பிரிவு அமைப்பாளர் லெனின் வக்கீல்கள் பிரிவு அமைப்பாளர் கார்த்திகேயன், வணிகப்பிரிவு அமைப்பாளர் சத்யராஜ், தொழில் துறை பிரிவு அமைப்பாளர் ராஜகணபதி மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி, கல்வியாளர்கள் பிரிவு அமைப்பாளர் ரங்கநாதன், பயிற்சி முகாம் பிரிவு பொறுப்பாளர் பாலாஜி, கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம், அமைப்புசாரா பிரிவு அமைப்பாளர் சுரேஷ், அறிவுசார் பிரிவு அமைப்பாளர் முருகன் பிரச்சார பிரிவு அமைப்பாளர் ரவிச்சந்திரன், வர்த்தக பிரிவு அமைப்பாளர் கலியபெருமாள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புது வீட்டில் மது குடித்து ரகளை செய்ததை தட்டிக்கேட்ட கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • வீட்டில் கடந்த சில நாட்களாக சிலர் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசுவது உள்ளிட்ட தகாத சம்பவங்களை செய்து வந்தனர்

    புதுச்சேரி:

    புது வீட்டில் மது குடித்து ரகளை செய்ததை தட்டிக்கேட்ட கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியாண்டி. இவரது மனைவி புஷ்ப வாணி(வயது28) குட்டியாண்டி கப்பலில் வேலை செய்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சிலர் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசுவது உள்ளிட்ட தகாத சம்பவங்களை செய்து வந்தனர். இதனை அவ்வப்போது புஷ்பவாணி சுத்தம் செய்து விட்டு வருவார்.

    இந்த நிலையில் குட்டியாண்டியும், அவரது மனைவி புஷ்பவாணியும் புதிய வீட்டை பார்வையிட சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மலர்மாறன் மற்றும் முகேஷ் ஆகியோர் இந்த வீட்டில் சிகரெட் புகைத்துகொண்டிருந்தனர். இதனை கணவன்-மனைவி இருவரும் தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த மலர்மாறன் மற்றும் முகேசும் சேர்ந்து அங்கு கிடந்த வானலை எடுத்து புஷ்பவாணியின் தலையில் தாக்கினர். இதனை குட்டியாண்டி தடுத்தப்போது அவரையும் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு மலர்மாறனும், முகேசும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து புஷ்பவாணி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மலர்மாறன் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

    • போக்சோ வழக்கில் போலீசார் தேடியதால் பயந்து போன டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் ஏழுமலையை எதிரியாக சேர்த்து அவரை முத்தியால்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    போக்சோ வழக்கில் போலீசார் தேடியதால் பயந்து போன டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது47). டெய்லர். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் ஏழுமலையை எதிரியாக சேர்த்து அவரை முத்தியால்பேட்டை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து ஏழுமலை தனக்கு முன் ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏழுமலையை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

    இதனையறிந்த ஏழுமலை கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் மன உளைச்சல் காரணமாக போலீசுக்கு பயந்து போய் இருந்த ஏழுமலை தான் வேலை பார்க்கும் டெய்லர் கடை உரிமையாளர் தேங்காய்திட்டை சேர்ந்த சதாசிவம் என்பவர் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னை போலீசார் கைது செய்தால் உறவினர்கள் மற்றும் தனது சமுதாயம் ஏளனமாக பார்ப்பார்களே என வேதனையடைந்த ஏழுமலை நேற்று காலை சதாசிவம் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்திருக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடையில் வேலை பார்த்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் கடையில் இருந்து சிறிது சிறிதாக நகை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • திவ்யாவிடம் கேட்டபோது அவர் சிறிது சிறிதாக 120 கிராம் தங்கம், 700 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது

    புதுச்சேரி:

    புதுவை லூயி பிரகாசம் வீதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 49) பாரதி வீதியில் நகைக்கடை வைத்துள்ளார், இவரது கடையில் வேலை பார்த்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் கடையில் இருந்து சிறிது சிறிதாக நகை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டபோது அவர் சிறிது சிறிதாக 120 கிராம் தங்கம், 700 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது.

    இைதயடுத்து அந்த நகையை திவ்யாவும் , அவரது 2-வது கணவர் அருண்குமாரும் சேர்ந்து 10 நாட்களுக்குள் திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார், ஆனால் அதற்குள் கணவன்- மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து தேவநாதன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவி இருவரையும் தேடிவந்தனர். இந்த நிலையில், அருண்குமார் இடையன்சாவடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனையடுத்து போலீசார் அவரை தேடிக்கொண்டிருந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்சில் தப்பியோட நின்றிருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், முன்னதாக அவர் தனது மனைவி திவ்யாவை பஸ் ஏற்றி தலைமறைவாக்கியது தெரியவந்தது.

    இதனிடையே மனைவி திருடிக்கொண்டு வந்து கொடுத்த நகைகளில் சிலவற்றை அருண்குமார் அடமானம் வைத்துள்ளார். சிலவற்றை விற்றுள்ளார்.

    இதனையடுத்து போலீசார் 24 கிராம் தங்க நகை மற்றும் 100 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். அருண்குமார் கொடுத்த தகவலின்படி திவ்யாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • மத்திய அரசு 2017ம் ஆண்டு, ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது.
    • ஜி.எஸ்.டி. வரியின் காரணமாக, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு 2017ம் ஆண்டு, ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி. வரியின் காரணமாக, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இழப்பீடு வழங்குவது நிறைவடைகிறது.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், சண்டிகரில் 2 நாட்களாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்கள், ஜி.எஸ்.டி., இழப்பீட்டினை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தின.

    கூட்டத்தில் புதுவை மாநிலம் சார்பில் பங்கேற்ற அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசிய தாவது:-

    புதுவை மாநிலத்தின் அடிப்படை ஆண்டு வருவாய் ரூ.ஆயிரத்து 95 கோடி. 2021 -22-ம் ஆண்டுக்கான தீர்வு உட்பட மொத்த ஜி.எஸ்.டி., வருவாய், ரூ.848 கோடி மட்டுமே எட்டப்பட்டது. வருவாய் இடைவெளி ரூ.247 கோடியாக உள்ளது. 2015-16-ல் ஈட்டிய வருவாயை, ஜி.எஸ்.டி, அமலுக்கு வந்து 5 ஆண்டுக்கு பிறகும் எட்ட முடியவில்லை.

    கட்டமைப்பு சிக்கல் காரணமாக விரும்பிய வருவாய் வளர்ச்சியை எட்ட முடியவில்லை. ஜூன் மாதத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்காவிட்டால் 2022-23-ம் ஆண்டுக்கான வருவாய் இடைவெளி ரூ.ஆயிரத்து 300 கோடியாக இருக்கும்.

    எனவே ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கும்படி மத்திய அரசிடம், நிதி அமைச்சகத்திடம் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். புதுவை அரசின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, வருவாய் இடைவெளியை ஈடுகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுவைக்கு வருகிறார்.
    • டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு அவர் வருகிறார். அவரை பா.ஜனதாவினர் வரவேற்கின்றனர்.

    புதுச்சேரி:

    இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது.

    பா.ஜனதா - கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதன்படி பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுவைக்கு வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு அவர் வருகிறார். அவரை பா.ஜனதாவினர் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து அங்கிருந்து ஓட்டல் அக்கார்டுக்கு செல்கிறார். அங்கு பா.ஜனதா கூட்டணி, ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கு நடைபெற உள்ள கூட்டத்திலும் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    இந்த தகவலை புதுவை மாநில ஆதரவு திரட்டுகிறார் தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரையும், கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியாக தலித் சமூகத்தை சேர்ந்தவரையும் பா. ஜனதா தேர்வு செய்தது. தற்போது எளிய குடும்பத்தில் பிறந்த அரசியல் பின்புலம் இல்லாத திரவுபதி முர்மு பா. ஜனதா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம் என்ற பிரதமரின் லட்சியத்தை உறுதிபடுத்தும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி அணியில் இருக்கும் பிஜூ ஜனதா தளம் உட்பட பல கட்சிகள் பா. ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க.வினர் தங்களை சந்திக்கவில்லை என துரைமுருகன் கூறியுள்ளார்.

    மலைவாழ்சமூகத்தை சேர்ந்த திரவுபதிமுர்முவை ஆதரிக்காததால் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச தகுதியில்லை.

    நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டில் முதல்முறையாக மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளார். பா.ஜனதா வேட்பாளர் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு புதுவைக்கு வர உள்ளார்.

    ஓட்டல் அக்கார்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது.

    கூட்டத்தில் திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசுகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். திரவுபதி முர்மு வருகை புதுவைக்கு வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்

    புதுச்சேரி:

    புதுவை அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை காப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பேரணி தவளக்குப்பத்தில் நடந்தது.

    அரவிந்தர் கண் மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இப்பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி துணிப்பைகளை பொது மக்களுக்கு சபாநாயகர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரமேஷ், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, தட்சிணாமூர்த்தி ,லட்சுமிகாந்தன், மணி, தண்டபாணி, ரவி, விஜி, செல்வி, விமலா ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×