என் மலர்
நீங்கள் தேடியது "Progressive League Demonstration"
- அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் உழவர்கரை நகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்துக்கு துணைத்தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் உழவர்கரை நகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு துணைத்தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். கம்யூனிஸ்டு (எம்.எல்.) மாநில செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில செயலாளர் புருஷோத்தமன், மாநில தலைவர் மோதிலால், அகில இந்திய விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்க தேசிய கவுன்சில் உறுப்பினர் கோ.பழனி, மத்திய பணிக்குழு உறுப்பினர், முருகன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில செயலாளர் விஜயா, மாநில தலைவர் மல்லிகா, புரட்சிகர இளைஞர் கழக அமைப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கியாஸ், பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.






