search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நகை திருடியவர் கைது
    X

    கோப்பு படம்

    நகை திருடியவர் கைது

    • கடையில் வேலை பார்த்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் கடையில் இருந்து சிறிது சிறிதாக நகை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • திவ்யாவிடம் கேட்டபோது அவர் சிறிது சிறிதாக 120 கிராம் தங்கம், 700 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது

    புதுச்சேரி:

    புதுவை லூயி பிரகாசம் வீதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 49) பாரதி வீதியில் நகைக்கடை வைத்துள்ளார், இவரது கடையில் வேலை பார்த்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் கடையில் இருந்து சிறிது சிறிதாக நகை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டபோது அவர் சிறிது சிறிதாக 120 கிராம் தங்கம், 700 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது.

    இைதயடுத்து அந்த நகையை திவ்யாவும் , அவரது 2-வது கணவர் அருண்குமாரும் சேர்ந்து 10 நாட்களுக்குள் திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார், ஆனால் அதற்குள் கணவன்- மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து தேவநாதன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவி இருவரையும் தேடிவந்தனர். இந்த நிலையில், அருண்குமார் இடையன்சாவடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனையடுத்து போலீசார் அவரை தேடிக்கொண்டிருந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்சில் தப்பியோட நின்றிருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், முன்னதாக அவர் தனது மனைவி திவ்யாவை பஸ் ஏற்றி தலைமறைவாக்கியது தெரியவந்தது.

    இதனிடையே மனைவி திருடிக்கொண்டு வந்து கொடுத்த நகைகளில் சிலவற்றை அருண்குமார் அடமானம் வைத்துள்ளார். சிலவற்றை விற்றுள்ளார்.

    இதனையடுத்து போலீசார் 24 கிராம் தங்க நகை மற்றும் 100 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். அருண்குமார் கொடுத்த தகவலின்படி திவ்யாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×