என் மலர்
நீங்கள் தேடியது "Jayakumar inaugurated the event"
- மங்கலம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஆரியப்பாளையம் விஜயலட்சுமி நகருக்கு சாலை, மங்கலம் கிராமத்தில் ஜி.எம்.ஆர். ஸ்ரீராம் நகர் சாலை, திருக்காஞ்சி, ஆண்டியார்பாளையம், பங்களாமேடு, தன லட்சுமிநகர், குமாரசாமி நகர் பகுதிகளுக்கு சாலை, மங்கலம் தொகுதி ஆச்சார்யபுரம், நடேசன் நகர் பகுதிக்கு சாலை அமைக்க ரூ.1.50 கோடிக்கு அனுமதி பெறப்பட்டது.
இந்த பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை விழா இன்று நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், ஊர்பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






