என் மலர்
புதுச்சேரி
- உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் முன்பு இருந்த பழைய மண்டபத்தை புதுப்பித்து தரவேண்டும்.
- அந்த ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக மண்டபத்தை கட்டிதரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் முன்பு இருந்த பழைய மண்டபத்தை புதுப்பித்து தரவேண்டும்.
அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்துள்ளார்கள். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக மண்டபத்தை கட்டிதரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், வருவாய் அதிகாரி சாம்பவசிவம், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகம், நகராட்சி ஆய்வாளர் ரவி மற்றும் நகராட்சி அதிகாரி களுடன் கென்னடி எம்.எல்.ஏ. அறப்பணி அவ்வை தோட்டத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு செயல்பாட்டில் இல்லாத நகராட்சி பழைய கழிப்பிடத்தை அகற்றி இலவச மனைப்பட்டா வழங்குவதற்கும் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆலோ சனை நடத்தப்பட்டது.
- திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தலீத் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தந்தைபிரியன் வரவேற்றார். விஜயசங்கர் முன்னிலை வகித்தார். லோகு.அய்யப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழின், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தலீத் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுவையில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா புழங்கி வருவதை போலீசார் தடுக்காமல் உள்ளதை கண்டித்தும், சீரழியும் பள்ளிகளை கண்டுகொள்ளாத கல்வித்துறையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலையில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுமார் 250 பேர் பயன்பெரும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான நவீன தொலைக்காட்சி, மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் ஆகியவற்றை பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.
- இந்நிகழ்ச்சியின் போது, புதுவை கல்வித்துறையின் 5-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை கீதா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலையில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுமார் 250 பேர் பயன்பெரும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான நவீன தொலைக்காட்சி, மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் ஆகியவற்றை பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, புதுவை கல்வித்துறையின் 5-ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை கீதா தலைமை தாங்கினார்.
இதில் பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் சேர்மன் கௌதம் மற்றும் உறுப்பினர்கள், சேர்மன்கள் மன்பிரிட், , தீபிகா, மேகா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உபகரணங்களை வழங்கினர்.
- கட்சியில் பிளவு ஏற்பட்டு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைதி காத்திருக்க நான் விரும்பினேன்
- அதற்கு எதிர்மாறாக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் என் பகுதி பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேசினார்
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சியில் பிளவு ஏற்பட்டு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைதி காத்திருக்க நான் விரும்பினேன். அதற்கு எதிர்மாறாக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் என் பகுதி பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேசினார்.
கட்சிக்கு சோதனை காலம் வந்தபோதெல்லாம் அன்பழகன் ஆதாயம் பெற்றுக்கொண்டு பல அணிகளுக்கு தாவினார். ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரச்சினை வந்த போது ஜானகி அணிக்கு சென்றார். 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவின் தலைமையை ஏற்றார்.
ஆனால் நாங்கள் ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்த பொது செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம். சசிகலா பொது செயலாளராக பதவியேற்றபோது உங்களை ஏற்க மாட்டோம் என கூறியதால் கட்சியிலிருந்து விடுவித்தனர்.
ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கிய போது அன்பழகன் சசிகலா பக்கம் சென்றார். அடுத்து டி.டி.வி. தினகரன் குழுவினர் புதுவை விடுதியில் தங்கியபோது அன்பழகன் அவரை சந்தித்து ஆதரித்தார். எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தராமல் டி.டி.வி.தினகரனை ஆதரித்தார்.
கட்சி ஒருங்கிணைந்த போது மீண்டும் இணைந்து பிரமாண பத்திரங்களை அளித்தார். ஆனால் நான் இருக்கும் இடத்தில்தான் கட்சி இருந்தது. நான் கட்சி, கொடி, சின்னம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறேன். இருப்பேன்.
ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். இருவரும் இணைந்து பேசி ஒற்றை தலைமை யார் என அறிவித்தால் நல்லது. கட்டாயப்படுத்தி ஒற்றை தலைமை கொண்டு வர முடியாது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவித்தேன்.
ஒற்றை தலைமை வரும்போது அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார்.ஓ.பி.எஸ். மனைவியின் அஸ்தியை வைத்து பூஜை செய்த அன்பழகன் தற்போது அவரின் படத்தை கிழித்தது ஏன்? கட்சியும், சின்னமும் இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன். அ.தி.மு.க.வை தி.மு.க.விடம் காட்டிக் கொடுக்க மாட்டேன்.
அ.தி.மு.கவை கைப்பற்ற 4 பேர் முயற்சிக்கின்றனர். கட்சி, கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே கட்சி தலைமை யார் என முடிவு செய்ய வேண்டும்.
ஜூலை 11-ந் தேதி பொதுகுழு கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் செல்வேன். ஆனால், பொதுகுழு நடைபெறுமா.? என்பது சந்தேகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டே சட்டசபையில் கருணா நிதியின் புகழை பாடியவர் ஓ.பன்னீர்செல்வம்.
- அவர் எழுதிய புத்தகத்தை தனது டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார். அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டே சட்டசபையில் கருணா நிதியின் புகழை பாடியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் எழுதிய புத்தகத்தை தனது டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார். அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்தார்.
தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு ஸ்டாலின் செயல்படுவதாக அவர் கூறினார். தி.மு.க. என்ற தீய சக்தியை அழிப்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.
தி.மு.க.வோடு கள்ள உறவு வைத்திருப்பவர்கள் அ.தி.மு.க.வில் தொடர முடியாது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல், ஓ.பன்னீர்செல்வம் பல தடைகளை செய்தார். இவற்றை முறியடித்து பொதுக்குழு நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் சின்னம் பெற கையெழுத்த போட வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துவிட்டார். வரும் 11-ம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
என்னை பொறுத்தவரை அரசியலில் சில வியாபாரிகளை கொண்டு வந்தது மட்டும்தான் தவறு. அரசியல் முதலீடு செய்து லாபம் பெறக்கூடியது அல்ல. மேற்கு மாநிலத்தை சேர்ந்த 11 பொதுக்குழு உறுப்பினர்கள் என் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
அதுமட்டுமின்றி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். கட்சியின் தலைமைக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறுபவர்கள் தலைமையை ஏற்பேன் என கூறுவது அழகா? நான் எடப்பாடி பழனிசாமியை உறுதிபட ஆதரிக்கிறேன். அதேபோல மற்றவர்கள் யாரை ஆதரிக்கிறேன்? என சொல்வார்களா?
மேற்கு மாநிலத்தில் 65 சதவீதத்தினர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். நான் ஒரே கட்சியில் 44 ஆண்டாக விசுவாசமாக பணியாற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவையில் ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- இதில் புதுவையில் 82, காரைக்காலில் 12, ஏனாமில் 16 பேர் என புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று பரவியுள்ளதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. புதுவையில் ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 82, காரைக்காலில் 12, ஏனாமில் 16 பேர் என புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் 10, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 297, காரைக்காலில் 46, ஏனாமில் 40, மாகியில் 6 பேர் என 389 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 36, காரைக்காலில் 10, ஏனாமில் 4 பேர் என 50 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 43 ஆயிரத்து 336 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.
- சந்திரக்குமார் ஆகியோரை கென்னடி எம்.எல்.ஏ, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து பொது பணித்துறை உதவி பொறியாளர் பார்த்த சாரதி, திட்ட உதவி பொறியாளர் சந்திரக்குமார் ஆகியோரை கென்னடி எம்.எல்.ஏ, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். எம்.எல்.ஏ.வின் கோரிக்கைனை ஏற்று மிக விரைவாக குறைபாடுகளை சரிசெய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் செல்வம், குணசீலன், பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
- சேதராப்பட்டு அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம் பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.
- வீட்டு வேலை செய்ய வில்லை என பரமேஸ்வரியை அவரது தாயார் வசந்தா கண்டித்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம் பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.
சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு கல்லறை வீதியை சேர்ந்தவர் தாஸ். கூலித்தொழிலாளி இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் பரமேஸ்வரி (வயது 24). சம்பத்தன்று வீட்டு வேலை செய்ய வில்லை என பரமேஸ்வரியை அவரது தாயார் வசந்தா கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தில் இருந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட பரமேஸ்வரியை அவரது பெற்றோர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் பரமேஸ்வரியை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது உறவினர் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாகள்.
- பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற டிரைவர் தாக்கப்பட்டார்.
- பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்த கரையாம்புத்தூரை சேர்ந்த பசுபதி மற்றும் சீனு ஆகியோருக்கும் ஆட்டோ கவியரசனுக்கு திடீரென வாய்தகராறு ஏற்பட்டது.
புதுச்சேரி:
பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற டிரைவர் தாக்கப்பட்டார்.
கரையாம்புத்தூர் அருகே தமிழகப்பகுதியான களிஞ்சிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி. (வயது 30). டிரைவர். சம்பவத்தன்று பட்டாம்பாக்கத்தில் நடந்த தனது நண்பரின் குழந்தை பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு விஜி தனது நண்பர் ஆட்டோ கவியரசன் என்பவருடன் சென்றார். அப்போது பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்த கரையாம்புத்தூரை சேர்ந்த பசுபதி மற்றும் சீனு ஆகியோருக்கும் ஆட்டோ கவியரசனுக்கு திடீரென வாய்தகராறு ஏற்பட்டது.
ஆட்டோ கவியரசனை இருவரும் சேர்ந்து தாக்கினர். இதனை விஜி தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார். அப்போது ஆத்திரமடைந்த பசுபதி மற்றும் சீனு ஆகிய இருவரும் நீயார் இதனை தடுப்பதற்கு? உன்னை பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக்கொள்கிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் விஜி கரையாம்புத்தூர் குளத்து தெருவில் உள்ள மணிகண்டன் என்பவரை பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்த பசுபதியும் சீனுவும் விஜியை வழிமறித்து உன்னை அடித்தால் இங்கு யார் கேட்பார்கள் என கூறி கையாலும் தடியாலும் விஜியை சரமாரியாக தாக்கினார்கள்.
மேலும் இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த விஜி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உழவர்கரையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- ஒரு வங்கி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
புதுச்சேரி:
உழவர்கரையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுவை உழவர்கரை சிவகாமி நகரில் 3-வது குறுக்குத்தெருவில் ஒரு வங்கி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சட்டைப்பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் 315 கிராம் கஞ்சாவை அவர்கள் சட்டைப்பையில் பதுக்கி வைத்திருந்தனர்.
இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் உழவர்கரை-வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்த விமல் (வயது24) மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த பாரத் (24) என்பதும். இவர்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- திருபுவனை அருகே பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்து மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
- திருபுவனை பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கராத்தே முருகன் (வயது 41). இவர் திருபுவனை தொகுதி பா.ஜனதா தலைவராக உள்ளார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்து மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை அருகே திருபுவனை பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கராத்தே முருகன் (வயது 41). இவர் திருபுவனை தொகுதி பா.ஜனதா தலைவராக உள்ளார். இவர் மதகடிப்பட்டு பஸ்நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் திருபுவனை தொகுதி செயற்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த ஷர்மா மற்றும் அவருடன் வந்த 6 பேர் மது போதையில் கராத்தே முருகனையும் அவரது பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் உன்னை வீட்டிலேயே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் கரேத்தே முருகன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார். நள்ளிரவு திடீரென மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்தது.
இதையடுத்து கராத்தே முருகன் திருபுவனை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் எனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தியாக சுவரை பிரதமர் மோடி திறந்து வைத்து 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
- இதற்காக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்று பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
புதுச்சேரி:
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை அமிர்த பெருவிழாவாக கொண்டாடும் வகையில் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேசன் சார்பில் நாட்டில் 75 இடங்களில் 100 அடி உயர தேசிய கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுவை அரசுடன் இணைந்து கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசிய கொடி கம்பமும் 1000 சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியும் குறிப்புகளுடன் கூடிய தியாக சுவரும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா இந்த மாதம் நடைபெறுகிறது.
தியாக சுவரை பிரதமர் மோடி திறந்து வைத்து 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்று பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். தியாக சுவரில் பதிப்பதற்காக சுதந்திர போராட்ட வீரர் பற்றிய முதல் குறிப்பு கல்லை பிரதமரிடம் இருந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பெற்றுக்கொண்டார்.
அப்போது சபாநாயகரிடம் பிரதமர் மோடி கூறும்போது, இந்தியாவில் பிற இடங்களில் இவ்வாறு அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தியாக சுவர் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். இந்தியாவில் 75 இடங்களில் இவ்வாறு அமைக்கப்படுகிற தியாக சுவர் மற்றும் 100 அடி தேசிய கொடி கம்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்தார். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து பெறப்பட்டு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருமைப்பாடு சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையைப் போன்று சுகந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து தியாக சுவரில் கலந்து கட்ட வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.






