என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்த மாதம் புதுவை வருகிறார் பிரதமர் மோடி
    X

    பிரதமர் மோடியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து அழைப்பு விடுத்த காட்சி.


    இந்த மாதம் புதுவை வருகிறார் பிரதமர் மோடி

    • தியாக சுவரை பிரதமர் மோடி திறந்து வைத்து 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
    • இதற்காக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்று பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

    புதுச்சேரி:

    இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை அமிர்த பெருவிழாவாக கொண்டாடும் வகையில் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேசன் சார்பில் நாட்டில் 75 இடங்களில் 100 அடி உயர தேசிய கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுவை அரசுடன் இணைந்து கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசிய கொடி கம்பமும் 1000 சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியும் குறிப்புகளுடன் கூடிய தியாக சுவரும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா இந்த மாதம் நடைபெறுகிறது.

    தியாக சுவரை பிரதமர் மோடி திறந்து வைத்து 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்று பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். தியாக சுவரில் பதிப்பதற்காக சுதந்திர போராட்ட வீரர் பற்றிய முதல் குறிப்பு கல்லை பிரதமரிடம் இருந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பெற்றுக்கொண்டார்.

    அப்போது சபாநாயகரிடம் பிரதமர் மோடி கூறும்போது, இந்தியாவில் பிற இடங்களில் இவ்வாறு அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தியாக சுவர் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். இந்தியாவில் 75 இடங்களில் இவ்வாறு அமைக்கப்படுகிற தியாக சுவர் மற்றும் 100 அடி தேசிய கொடி கம்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்தார். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து பெறப்பட்டு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருமைப்பாடு சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையைப் போன்று சுகந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து தியாக சுவரில் கலந்து கட்ட வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    Next Story
    ×