என் மலர்
நீங்கள் தேடியது "Segar confirmation"
- கட்சியில் பிளவு ஏற்பட்டு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைதி காத்திருக்க நான் விரும்பினேன்
- அதற்கு எதிர்மாறாக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் என் பகுதி பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேசினார்
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சியில் பிளவு ஏற்பட்டு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைதி காத்திருக்க நான் விரும்பினேன். அதற்கு எதிர்மாறாக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் என் பகுதி பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேசினார்.
கட்சிக்கு சோதனை காலம் வந்தபோதெல்லாம் அன்பழகன் ஆதாயம் பெற்றுக்கொண்டு பல அணிகளுக்கு தாவினார். ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரச்சினை வந்த போது ஜானகி அணிக்கு சென்றார். 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவின் தலைமையை ஏற்றார்.
ஆனால் நாங்கள் ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்த பொது செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம். சசிகலா பொது செயலாளராக பதவியேற்றபோது உங்களை ஏற்க மாட்டோம் என கூறியதால் கட்சியிலிருந்து விடுவித்தனர்.
ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கிய போது அன்பழகன் சசிகலா பக்கம் சென்றார். அடுத்து டி.டி.வி. தினகரன் குழுவினர் புதுவை விடுதியில் தங்கியபோது அன்பழகன் அவரை சந்தித்து ஆதரித்தார். எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தராமல் டி.டி.வி.தினகரனை ஆதரித்தார்.
கட்சி ஒருங்கிணைந்த போது மீண்டும் இணைந்து பிரமாண பத்திரங்களை அளித்தார். ஆனால் நான் இருக்கும் இடத்தில்தான் கட்சி இருந்தது. நான் கட்சி, கொடி, சின்னம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறேன். இருப்பேன்.
ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். இருவரும் இணைந்து பேசி ஒற்றை தலைமை யார் என அறிவித்தால் நல்லது. கட்டாயப்படுத்தி ஒற்றை தலைமை கொண்டு வர முடியாது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவித்தேன்.
ஒற்றை தலைமை வரும்போது அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார்.ஓ.பி.எஸ். மனைவியின் அஸ்தியை வைத்து பூஜை செய்த அன்பழகன் தற்போது அவரின் படத்தை கிழித்தது ஏன்? கட்சியும், சின்னமும் இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன். அ.தி.மு.க.வை தி.மு.க.விடம் காட்டிக் கொடுக்க மாட்டேன்.
அ.தி.மு.கவை கைப்பற்ற 4 பேர் முயற்சிக்கின்றனர். கட்சி, கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே கட்சி தலைமை யார் என முடிவு செய்ய வேண்டும்.
ஜூலை 11-ந் தேதி பொதுகுழு கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் செல்வேன். ஆனால், பொதுகுழு நடைபெறுமா.? என்பது சந்தேகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






