என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
    • ஆன்மிக பூமியான புதுவையில் அதிக அளவிலான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் அறங்காவலர் குழுக்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோவில்களில் வருவாய் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆன்மிக பூமியான புதுவையில் அதிக அளவிலான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் அறங்காவலர் குழுக்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோவில்களில் வருவாய் உள்ளது. அதனால் அவற்றை பராமரிப்பது எளிதாக உள்ளது.

    பெரும்பாலான கோவில்கள் வருவாய் இல்லாததால் அன்றாட செலவீனங்களுக்கு ஆலய நிர்வாகிகள் சிரமப்படுகின்றனர். கோவில்களுக்கு மின்கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வரும் காலத்தில் மின்துறை தனியார் மயமாக்கப்படலாம் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

    தனியார் மயமாக்கும் பட்சத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என பரவலான கருத்தும் உள்ளது. எனவே கோவில்கள் தங்கள் தேவைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டால் மின் கட்டணத்தில் பெரிய அளவு மிச்சமாகும். கோவில்களில் சூரிய மின்உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இதற்கு 50 சத வீதம் மானிய தொகையை மத்திய அரசு வழங்குகிறது. மீதம் உள்ள 50 சதவீதம் மானிய தொகையை மாநில அரசின் அறங்காவல் துறை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • அழிந்து வரும் மரங்களில் ஒன்றான ஆலமரம், இலுப்ப மரம், நாவல் மரம் ஆகிய மரக்கன்றினை, இயக்குனர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், டாக்டர் தியாகராஜன் ஆகியோர் நட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பொதுநல சமூக பேரவையின் சார்பில் உலக மருத்துவர் தினம் மற்றும் வன மகோத்சவம் விழாவையொட்டி புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் அழிந்து வரும் மரங்களில் ஒன்றான ஆலமரம், இலுப்ப மரம், நாவல் மரம் ஆகிய மரக்கன்றினை, இயக்குனர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், டாக்டர் தியாகராஜன் ஆகியோர் நட்டனர். விழாவில் பேரவையின் நிர்வாகி சிவா, சுரேஷ், மருத்துவமனை ஊழியர்கள், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசால் ஜூலை மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.
    • இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உட்பட்ட அனைத்து வியாபாரிகளையும் அழைத்து, ஆணையர் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசால் ஜூலை மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உட்பட்ட அனைத்து வியாபாரிகளையும் அழைத்து, ஆணையர் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர் சுரேஷ், இளநிலை எழுத்தர் செழியன், வியாபாரி சங்கத் தலைவர் ராமபத்திரன், செயலாளர் சந்துரு மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆேலாசனை கூட்டத்தில் வியாபாரிகளுக்கு துணி பை, விளம்பர பதாகை வழங்கப்பட்டது. தொடர்ந்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கி ஒத்துழைப்பு தருமாறும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் ஆணையாளர் ரமேஷ் கேட்டுக்கொண்டார்.

    • பாகூர் கொம்யூன், மூ.புதுக்குப்பம் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் உயர் மின் ஹைமாஸ் விளக்கு அமைந்துள்ளது. இந்த விளக்கு சுமார் 3 மாதங்களாக எரியாமல் உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை சரி செய்யாமல் உள்ளனர்.
    • இந்த விளக்கிற்கு கீழே மாணவர்கள் இரவு நேரத்தில் வாலிபால் விளையாடுவார்கள். மேலும் புதியதாக படவேட்டம்மன் கோவில் கட்டுமான வேலை நடைெபறுகிறது.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன், மூ.புதுக்குப்பம் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் உயர் மின் ஹைமாஸ் விளக்கு அமைந்துள்ளது. இந்த விளக்கு சுமார் 3 மாதங்களாக எரியாமல் உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை சரி செய்யாமல் உள்ளனர்.

    இந்த விளக்கிற்கு கீழே மாணவர்கள் இரவு நேரத்தில் வாலிபால் விளையாடுவார்கள். மேலும் புதியதாக படவேட்டம்மன் கோவில் கட்டுமான வேலை நடைெபறுகிறது. ரேஷன் கடை, மீனவர் கூட்டுறவு சங்க கட்டிடம், நூலகம், கலையரங்கம், பஸ் நிறுத்தம், அரசு பள்ளி இவை அனைத்திற்கும் வேளிச்சம் கிடைத்த நிலையில் 3 மாதங்களாக இருள் சூழ்ந்துள்ளது. விரைந்து ஹைமாஸ் விளக்கினை சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • நேற்று முன்தினம் 110, நேற்று 101 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. 

    கடந்த சில மாதமாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 100-ஐ தாண்டி சென்றுள்ளது. நேற்று முன்தினம் 110, நேற்று 101 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    கொரோனா தொற்று பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசும் அறிவுறுத்தி வருகிறது. முதல்- அமைச்சர் ரங்கசாமியும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை புதுவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் புதுவை மாநில மேலாண்மைக்குழு கூட்டத்தில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது.மேலாண்மை குழுவில் எடுத்துள்ள முடிவுகள் குறித்து கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

    நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி புதுவை அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கழகங்கள் கொரோனா குறித்த கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

    சுகாதாரத்துறை மத்திய அரசின் அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகள், கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் கல்வித்துறையின் அனைத்து உத்தரவுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    பொதுமக்கள் மார்க்கெட், கடற்கரை சாலை, பூங்காக்கள், ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். வணிக, வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் 100 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த வேண்டும்.

    அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சுகாதாரம், போலீஸ், வருவாய், உள்ளாட்சி, தொழிலாளர் துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இன்றி, முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

    தேவையான கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வணிகர்கள், விடுதிகள், ஓட்டல்கள், தொழிலதிபர்களுடன் பேசி தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற செய்ய வேண்டும். அண்டை மாநிலம், மாவட்டங்களோடு பேசி எல்லைகளில் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. புதுவை அரசு, கவர்னர் தமிழிசை ஒப்புதலோடு இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த 2 ஆண்டாக இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    • ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் புதுவை ஆணையர் அலுவலகம் சார்பில், 5-வது ஜி.எஸ்.டி., தினம் ஓட்டல் ஜெயராமில் கொண்டாடப் பட்டது.
    • புதுவை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வரவேற்றார்.

    புதுச்சேரி:

    ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் புதுவை ஆணையர் அலுவலகம் சார்பில், 5-வது ஜி.எஸ்.டி., தினம் ஓட்டல் ஜெயராமில் கொண்டாடப் பட்டது.

    புதுவை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன், பல்கலைக்கழக ஆய்வுத் துறை இயக்குனர் தரணிக்கரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.

    விழாவில், அதிக ஜி.எஸ்.டி., வரி செலுத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விருதுகளை, அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார். விழாவில், அர்ப்பணிப்புடன் துறையில் சேவையாற்றிய புதுவை ஆணையக சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இணை ஆணையர் சதீஷ்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் சவுரி படையாட்சி அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது. தொகுதி தலைவர் உமாபதி தலைமை வகித்தார்.
    • தொகுதி பொறுப்பாளர் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., மூத்த தலைவர் இளங்கோ, நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் சவுரி படையாட்சி அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.

    தொகுதி தலைவர் உமாபதி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., மூத்த தலைவர் இளங்கோ, நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தொகுதியில் நடந்த பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி வழங்க அசோக்பாபு எஎம்.எல்.ஏ., உறுதியளித்தார். செயற்குழு உறுப்பின மாமதி ராஜன் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

    இளங்கோவன் கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாடு, மக்கள் பணிகள் குறித்து விளக்கினார்.

    கூட்டத்தில், தொகுதி நிர்வாகிகள் சண்முகம், ரேணுகாதேவி, முருகன், ஜெயந்தி, செந்தில், கண்ணதாசன், வெங்கடேசன், முருகேசன், ஜான் பீட்டர், ரவி, திலகவதி, மனோகர், மாநில நிர்வாகிகள் லெனின், விஜயலட்சுமி, விஜய ராஜேஷ், சுந்தரமூர்த்தி, மாதவி, மகேந்திரன், வைத்தியநாதன், ஜூன் கேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • சொத்து தகராறில் தம்பி மகளை கடத்தி சென்று சீரழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த அக்காள் குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சகுந்தலா தனது மகன் பாபு பெயரில் எழுதி வைத்து விட்டார். இதனால் பாபு குடும்பத்தினர் மீது செல்வி குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

    புதுச்சேரி:

    சொத்து தகராறில் தம்பி மகளை கடத்தி சென்று சீரழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த அக்காள் குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை சாரம் சத்யாநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு (வயது50). இவர் தனது தாய் சகுந்தலா, மனைவி சாந்தி, மகன் கோகுலகிருஷ்ணன், மகள் வினோதினி ஆகியோருடன் வீட்டின் கீழ் தளத்திலும், வீட்டின் மாடியில் இவரது அக்காள் செல்வி அவரது கணவர் ராமலிங்கம், மகன் பிரவீன்குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே இவர்கள் குடியிருக்கும் வீடு சகுந்தலா பெயரில் இருந்த நிலையில் அந்த வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா தனது மகன் பாபு பெயரில் எழுதி வைத்து விட்டார். இதனால் பாபு குடும்பத்தினர் மீது செல்வி குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

    அவ்வப்போது பாபு குடும்பத்தினரை செல்வி குடும்பத்தினர் திட்டி வந்தனர். இந்த நிலையில் செல்வி மற்றும் அவரது கணவர் ராமலிங்கம் திட்டியதால் பாபு வீட்டின் கதவையும், ஜன்னலையும் உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வியின் மகன் பிரவீன் குமார் தகாத வார்த்தை களால் திட்டி கதவை காலால் எட்டி உதைத்தார்.

    இதையடுத்து பாபுவின் மனைவி சாந்தி கதவை திறந்து தட்டிக் கேட்டார். இதனால் ஆவேசமடைந்த செல்வி அவரது கணவர் ராமலிங்கம் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாபு, அவரது மனைவி சாந்தி, தாயார் சகுந்தலா ஆகிய 3 பேரையும் தாக்கினர். அதோடு ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்ய முயன்றனர்.

    இதனால் பயந்து போன பாபு இதுபற்றி உருளையன்பேட்டை போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த பாபு , அவரது மனைவி சாந்தி, தாய் சகுந்தலா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது செல்வி தனது கணவர் மற்றும் மகனுடன் அங்கு வந்து பாபு குடும்பத்தையே வெட்டி கொலை செய்து விடுவோம், மேலும் உன் மகளை கடத்தி சென்று சீரழித்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

    இதையடுத்து பாபு இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெல்லித்தோப்பில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து மின் மீட்டரை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • புதுவை நெல்லிதோப்பு-வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் குடியிருப்பவர் செல்வநாயகி (வயது52). இவர் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து மின் மீட்டரை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை நெல்லிதோப்பு-வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் குடியிருப்பவர் செல்வநாயகி (வயது52). இவர் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    செல்வநாயகி வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார். மதியம் உணவு இடைவேளைக்கு செல்வநாயகி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த மின் மீட்டரை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து செல்வநாயகி தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்தார். ஆனால் சி.சி.டி.வி. கேமரா இயங்காமல் இருந்தது. இதைத்தொடர்ந்து செல்வநாயகி தனது வீட்டில் வாடகைக்கு விட்டிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாலிபர் வீட்டில் அத்துமீறி நுழைந்து மின் மீட்டரை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாக வைத்து செல்வநாயகி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.சி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு மின் மீட்டரை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர்.
    • இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இதற்காக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் லிப்டில் ஏறி அறைக்கு சென்ற அவர் 10 நிமிடத்துக்கு பின் மீண்டும் காரில் ஏறிச்சென்றுவிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் வந்தார்.

    கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் ஓட்டலுக்கு வந்து சென்றதாக தெரிகிறது.

    • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
    • இதன்படி பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது.

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரவுபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர்.

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதன்படி பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

    விமான நிலைய நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ஜதா சார்பில் மங்கள இசையுடன் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு 12 மணிக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மகளிரணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின் தரை தளத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்டு, பாஸ்கர், லட்சுமிகாந்தன், ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், திருமுருகன், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், பிரகாஷ்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், அ.தி.மு.க. மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை அறிமுகப்படுத்தினர். அவர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி பேசினார். தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்தார்.

    ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுடன் மத்திய மந்திரிகள் முரளீதரன், எல்.முருகன், பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ., நீத்துதாமஸ், சுரத்குமார் முகந்தா, சுபாஷ் சந்திரா ஆகியோரும் பங்கேற்றனர். இதன்பின் அவர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.

    • புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.
    • அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வன வார விழாவை ஒருமாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளளது.

    புதுவை அரசின் வனத்துறை மற்ற அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவர்களோடு இணைந்து மரம் நடு விழாவை கொண்டாட உள்ளது.

    புதுவை முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்த ஒரு மாதத்தில் 50 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள், பிற மரக்கன்றுகள் 10 ஆயிரம் வழங்குதல், மரங்களை சுத்தப்படுத்துதல், பனைவிதை நடுதல்,சைக்கிள் விழிப்புணர்வு, மாணவர்களுக்கு போட்டிகள், கருத்தரங்கு, வன பாதுகாப்பு ப யிற்சி என பல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் தொடக்க விழா திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தேக்கு மரக்கன்றுகளை வழங்கி நவகிரகங்களுக்கு உரிய மரங்களை நட்டார். துறை செயலர் ரவிபிரகாசம், வன அதிகாரிகள் சத்தியமூர்த்தி, வஞ்சுள வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

    ×