என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விருது-  அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்
    X

    கோப்பு படம்

    சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விருது- அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்

    • ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் புதுவை ஆணையர் அலுவலகம் சார்பில், 5-வது ஜி.எஸ்.டி., தினம் ஓட்டல் ஜெயராமில் கொண்டாடப் பட்டது.
    • புதுவை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வரவேற்றார்.

    புதுச்சேரி:

    ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் புதுவை ஆணையர் அலுவலகம் சார்பில், 5-வது ஜி.எஸ்.டி., தினம் ஓட்டல் ஜெயராமில் கொண்டாடப் பட்டது.

    புதுவை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன், பல்கலைக்கழக ஆய்வுத் துறை இயக்குனர் தரணிக்கரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.

    விழாவில், அதிக ஜி.எஸ்.டி., வரி செலுத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விருதுகளை, அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார். விழாவில், அர்ப்பணிப்புடன் துறையில் சேவையாற்றிய புதுவை ஆணையக சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இணை ஆணையர் சதீஷ்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×