search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity meter"

    • மின் மீட்டர்கள் மாயமானது
    • 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவ லகத்தில் பழைய மின் மீட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை திடீரென மாயமானது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் பதில் இல்லை.

    இதற்கிடையே டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து சிலர் தனியார் வாகனங்களில் பழைய மின் மீட்டர்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரை சத்ய சாய்நகர், ரோஜா தெருவை சேர்ந்த என்.ஜி.மோகன் என்பவர், மதுரை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார்.

    இந்த புகார் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திராவின் கவனத்திற்கு வந்தது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது இந்த சம்பவத்தில் 4 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உதவி மின் பொறியாளர் ஆனந்தகுமார், மின் கணக்கீட்டு ஆய்வாளர் ஜவகர், மின் வணிக ஆய்வாளர் தாளமுத்து நேரு ஆகிய 3 பேருக்கான ஓராண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பழைய மின்சார மீட்டர்கள் மாயமான விவகாரத்தில், அதிகாரி சுதந்திர பாண்டியனின் 3 மாத ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் உடனடியாக ரூ. 54 ஆயிரத்து 750 -ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லித்தோப்பில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து மின் மீட்டரை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • புதுவை நெல்லிதோப்பு-வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் குடியிருப்பவர் செல்வநாயகி (வயது52). இவர் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து மின் மீட்டரை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை நெல்லிதோப்பு-வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் குடியிருப்பவர் செல்வநாயகி (வயது52). இவர் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    செல்வநாயகி வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார். மதியம் உணவு இடைவேளைக்கு செல்வநாயகி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த மின் மீட்டரை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து செல்வநாயகி தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்தார். ஆனால் சி.சி.டி.வி. கேமரா இயங்காமல் இருந்தது. இதைத்தொடர்ந்து செல்வநாயகி தனது வீட்டில் வாடகைக்கு விட்டிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாலிபர் வீட்டில் அத்துமீறி நுழைந்து மின் மீட்டரை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாக வைத்து செல்வநாயகி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.சி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு மின் மீட்டரை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×