என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் இருந்து மதுராந்தகத்திற்கு மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
    • புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக உருளை யன் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து மதுராந்தகத்திற்கு மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக உருளை யன் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து உருளையன் பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது ஒரு பெண் சாக்கு மூட்டையுடன் நின்று கெரண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனை ெதாடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப் பெண் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த போது அதில் 200 மது பாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பெண் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் சத்யா (40), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    • பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
    • இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும்.

    புதுச்சேரி:

    பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது.

    காலை 5 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகமும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.

    இதில், அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், துணை தலைவர் சக்திவேல், செயலாளர் காத்தவராயன், பொருளாளர் பிரபு, நிர்வாக அதிகாரி பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும், யானை, குதிரை, நாகம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது.

    வருகிற 10-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், தேர் திருவிழா 12-ந் தேதி நடக்கிறது. 13-ந் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்ப உற்சவமும், 14-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.

    • கரையாம்புத்தூரில் மளிகை கடை குடோனில் பதுக்கி வைத்த ரூ.2¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கரையாம்புத்தூர் புற காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கரையாம்புத்தூரில் மளிகை கடை குடோனில் பதுக்கி வைத்த ரூ.2¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கரையாம்புத்தூர் புற காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையாம்புத்தூரை அடுத்த சொர்ணாவூர் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த மளிகை கடையை சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

    அதனை பிரித்து பார்த்த போது தடை செய்யப்பட்ட புகையிலை - ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் மளிகை கடையில் இருந்த குடோனை திறந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மூட்டை மூட்டையாக புகையில்லை மற்றும் ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து ரூ.2¼ மதிப்புள்ள அந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மளிகை கடை உரிமையாளர்ஜெயக்குமார் (வயது60) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை பாட்டில் குத்து
    • மங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது38). டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை பாட்டிலால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே மங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது38). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மணிமொழி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஞானவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தினமும் அவர் வேலை முடிந்ததும் மங்கலம் சாராயக்கடையில் சாராயம் குடிப்பது வழக்கம் அதுபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் டிரைவர் வேலைக்கு செல்லாமல் ஞானவேல் மங்கலம் சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க சென்றார்.

    அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த போது ஞானவேலுக்கு தெரிந்த நபரான குரு(38) என்பவரும் சாராயம் குடித்தார். அப்போது குடி போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த குரு தகாத வார்த்தைகளால் திட்டி சாராய பாட்டிலால் ஞானவேல் தலையில் தாக்கினார். இதனால் ரத்தம் கொட்டிய நிலையில் வலி தாங்காமல் ஞானவேல் அலறினார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே குரு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காய மடைந்த ஞானவேல் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை தேடி வருகிறார்கள்.

    • காலரா தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் லட்சுமிநாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து சராசரியாக 15 பேர் மட்டுமே வெளிப்புற சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் காலரா பரவியுள்ளது.

    அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் நிலை குறித்து அறிய புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அங்கு சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், பி.ஆர்.சிவா, கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    காரைக்காலில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. காரைக்காலில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு நடைபெறும் பாலிடெக்னிக் மட்டும் வழக்கம்போல செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    காலரா குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்காலில் குடி தண்ணீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீரில் கழிவு நீர் கலந்ததாலும் சுகாதாரமற்ற குடிநீரை பருகியதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகின்றது.

    இதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் காரைக்கால் நலவழித்துறை எடுத்து வருகிறது.

    காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை யாரும் வயிற்றுப்போக்கால் இறக்கவில்லை. இணை நோய் உள்ள 2 பேர் இறந்துள்ளனர். அவர்கள் வயிற்றுப்போக்கால் இறந்துள்ளதாக தகவல்கள் பரப்புவதாக அறிகிறோம்.

    பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர்.

    வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    முகநூல்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். கண்டிப்பாக அனைவரும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். சுத்தமான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    விரைவில் இந்த வயிற்றுப்போக்கு காரைக்கால் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் ஒத்துழைத்து விழிப்புணர்வை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காலரா தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் லட்சுமிநாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து சராசரியாக 15 பேர் மட்டுமே வெளிப்புற சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல்.

    காரைக்கால்:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

    காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். இந்த 3 நாட்கள் விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துகல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகம் கடந்த ஆண்டு கெசட்டில் வெளியிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துகல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகம் கடந்த ஆண்டு கெசட்டில் வெளியிட்டது.

    அதன்படி விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க மத்திய அரசு அல்லது மாநில நிலத்தடி நீர் அதிகார அமைப்பிடம் அனுமதி அல்லது தடையில்லா சான்றிதழ் பெற தேவையில்லை.

    அதுபோல் பெரு தொழில் நிறுவனங்கள் முறைப்படி அனுமதி பெற்றே நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தண்ணீர் பயன்பாட்டு அளவினை கணக்கிட டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மூட வேண்டும போன்ற பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    மத்திய அரசின் நெறிமுறைகள் மாநில நிலத்தடி நீர் அதிகார அமைப்பின் சட்டத்தோடு முரண்பட்டால மத்திய அரசின் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.புதுவையில் ஏற்கனவே விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஒவ்வொரு ஆழ்துளை கிணறுக்கும் இடையே 250-300 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கடற்கரையிலிருந்து 6 கி.மீ.க்குள் அனுமதியில்லை மற்றும் புதுவை நிலத்தடிநீர் அதிகார அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது.

    தற்போதைய மத்திய அரசின் நெறிமுறைகளை அமல்படுத்தினால் விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க வசதியிருப்பவர்கள் எங்கும் அலையாமல் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாய உற்பத்தியை மேற்கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் விதிமுறைகளை புதுவை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு புதுவையில் அமல்படுத்த மறுத்து வருகின்றது.

    புதுவையில் மத்திய அரசின் புதிய நெறிமுறை களை அமல்படுத்தினால் வாய்ப்புள்ள விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்வர், அதுபோல் புதுவையில் நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்படும்.

    எனவே அரசு உடனடியாக நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சக நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஜனாதிபதி வேட்பாளர்களை ஒப்பிட்டு பார்த்து மனசாட்சியோடு திறமையின் அடிப்படையிலும், தகுதி மற்றும் சுதந்திரமாக செயல்படுபவர்களுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. கள் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகவாதியான யஷ்வந்த் சின்கா தனது அதிகாரத்தை பயன்படுத்துவார்
    • மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி 5 ஆண்டுகளில் படுதோல்வி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே வரி என கூறிய மோடி தற்போது பல வரிகளை விதித்து வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிரு பர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதி வேட்பாளர்களை ஒப்பிட்டு பார்த்து மனசாட்சியோடு திறமையின் அடிப்படையிலும், தகுதி மற்றும் சுதந்திரமாக செயல்படுபவர்களுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. கள் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகவாதியான யஷ்வந்த் சின்கா தனது அதிகாரத்தை பயன்படுத்துவார்.

    மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி 5 ஆண்டுகளில் படுதோல்வி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே வரி என கூறிய மோடி தற்போது பல வரிகளை விதித்து வருகிறார். இதனால் பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கி வருகிறது. ஜி.எஸ்.டி யால் லட்சக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 25 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

    காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்டுள்ளது புதுவை நிர்வாகம் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

    தேர்தல் முடிந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு முறை கூட ரங்கசாமி காரைக்கால் செல்லவில்லை. அங்குள்ள பல துறைகளில் செயல்பாடுகளை அவர் கவனிக்கவில்லை. காரைக்கால் மீது முதல்-அமைச்சரும் அமைச்சர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி இழப்பீடு கிடைக்வில்லை என்றால் ரங்கசாமி பொருளாதார நெருக்கடியை சந்திப்பார்.கொரோனா விழிப்பு ணர்வை சுகாதாரத்துறை ஏற்படுத்தவில்லை. பல அரசியல் காரணங்க ளுக்காக ஏனாம் புறக்கணிக்கப்படுகிறது.

    காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள் என முன்பே நான் கூறியுள்ளேன். இப்போது அதுதான் நடக்கிறது. ஏனாம் மக்கள் தன்னை ஏமாற்றியவர்கள் என நினைக்காமல் ரங்கசாமி அங்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதில் புதுவையில் 82, காரைக்காலில் 6, ஏனாமில் 9 என 97 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
    • தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 9 பேர் மருத்துவமனையிலும், 504 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக தற்போது 513 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 1214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 82, காரைக்காலில் 6, ஏனாமில் 9 என 97 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 9 பேர் மருத்துவமனையிலும், 504 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக தற்போது 513 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

    36 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 33 பேர் புதுவையையும், 2 பேர் ஏனாமையும், ஒருவர் மாகியையும சேர்ந்தவர்கள். புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 348 பேர் குணமடைந்துள்ளனர், 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது.
    • நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பாசிக் சங்க செயலாளர்.முத்துராமனும், எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வமும் பேசினார்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு பாசிக் சங்க பொருளாளர் தரணிராஜன் தலைமை வகித்தார்.நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பாசிக் சங்க செயலாளர்.முத்துராமனும், எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வமும் பேசினார்.

    பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, சூரி, மகேந்திரன், மணிகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாண்லே நிறுவனம் தனியார் நிறுவன மினரல் வாட்டர் விற்பனை செய்வதை நிறுத்தி பாசிக் மினரல் வாட்டர் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிக் மதுபான கடைகளை மீண்டும் திறந்து கேண்டீன்களை லாபம் வரும் வகையில் குத்தகைக்கு விட வேண்டும். பாசிக் தொழிலாளர்கள் நிலுவை சம்பளத்தை முழுமையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் சகரிகா நேற்று கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருந்தார்.
    • நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது.

    புதுச்சேரி:

    பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் சகரிகா நேற்று கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருந்தார்.

    நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது.

    இதுகுறித்து அவர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் அசோக்குமார், விஸ்வநாதன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு செல்போனை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் அங்கு வந்த நோயாளிகளின் விவரங்களை கேட்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள மந்தவெளி திடலில் செல்போன் கிடந்ததாக அங்கு வந்த ஒரு மூதாட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த போன் டாக்டருடையது என்பது தெரிய வந்தது.

    பின்னர் அந்த செல்போனை டாக்டரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு செல்போனை கண்டுபிடித்து டாக்டரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • முகமூடி கொள்ளையர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
    • புதுவை அரியாங்குப்பம் ட்ரீம் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பூரண சந்திரன்.

    பாகூர்:

    அரியாங்குப்பத்தில் அரிசி கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுவை அரியாங்குப்பம் ட்ரீம் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பூரண சந்திரன் (வயது 31). இவர் அரியாங்குப்பம் புறவழி சாலை தேசிய வங்கி அருகில் அரிசி கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அரிசி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மீண்டும் அரிசி கடையைத் திறக்க பூரணசந்திரன் வந்தார். அப்போது அரிசி கடையின் ஷட்டரில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் பூரணசந்திரன் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததோடு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் கையோடு எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பூரண சந்திரன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்கு மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் முகமூடி அணிந்தும், முகவசம் அணிந்தும் கொள்ளையில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது.

    எனவே முகமூடி கொள்ளையர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள புறவழி சாலையில் அமைந்துள்ள அரிசி கடையில் பூட்டை உடைத்து துணிகரமாக பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளாததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே

    போலீஸ் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்திட அரியாங்குப்பம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×