என் மலர்
நீங்கள் தேடியது "Corona in Puducherry"
- புதுவையில் 2 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- இதில் புதுவையில் 180, காரைக்காலில் 38, ஏனாமில் 13, மாகியில் ஒருவர் என புதிதாக 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 180, காரைக்காலில் 38, ஏனாமில் 13, மாகியில் ஒருவர் என புதிதாக 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 25, காரைக்காலில் 3, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 34, காரைக்காலில் 171, ஏனாமில் 25, மாகியில் 2 பேர் என ஆயிரத்து 232 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 207, காரைக்காலில் 89, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 248 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநிலத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 71 ஆயிரத்து 236 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- இதில் புதுவையில் 82, காரைக்காலில் 6, ஏனாமில் 9 என 97 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 9 பேர் மருத்துவமனையிலும், 504 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக தற்போது 513 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 1214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 82, காரைக்காலில் 6, ஏனாமில் 9 என 97 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 9 பேர் மருத்துவமனையிலும், 504 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக தற்போது 513 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
36 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 33 பேர் புதுவையையும், 2 பேர் ஏனாமையும், ஒருவர் மாகியையும சேர்ந்தவர்கள். புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 348 பேர் குணமடைந்துள்ளனர், 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






