search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசின் விதிமுறைகளை புதுவையில் அமல்படுத்த வேண்டும் -  எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்

    மத்திய அரசின் விதிமுறைகளை புதுவையில் அமல்படுத்த வேண்டும் - எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்

    நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துகல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகம் கடந்த ஆண்டு கெசட்டில் வெளியிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துகல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகம் கடந்த ஆண்டு கெசட்டில் வெளியிட்டது.

    அதன்படி விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க மத்திய அரசு அல்லது மாநில நிலத்தடி நீர் அதிகார அமைப்பிடம் அனுமதி அல்லது தடையில்லா சான்றிதழ் பெற தேவையில்லை.

    அதுபோல் பெரு தொழில் நிறுவனங்கள் முறைப்படி அனுமதி பெற்றே நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தண்ணீர் பயன்பாட்டு அளவினை கணக்கிட டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மூட வேண்டும போன்ற பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    மத்திய அரசின் நெறிமுறைகள் மாநில நிலத்தடி நீர் அதிகார அமைப்பின் சட்டத்தோடு முரண்பட்டால மத்திய அரசின் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.புதுவையில் ஏற்கனவே விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஒவ்வொரு ஆழ்துளை கிணறுக்கும் இடையே 250-300 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கடற்கரையிலிருந்து 6 கி.மீ.க்குள் அனுமதியில்லை மற்றும் புதுவை நிலத்தடிநீர் அதிகார அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது.

    தற்போதைய மத்திய அரசின் நெறிமுறைகளை அமல்படுத்தினால் விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க வசதியிருப்பவர்கள் எங்கும் அலையாமல் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாய உற்பத்தியை மேற்கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் விதிமுறைகளை புதுவை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு புதுவையில் அமல்படுத்த மறுத்து வருகின்றது.

    புதுவையில் மத்திய அரசின் புதிய நெறிமுறை களை அமல்படுத்தினால் வாய்ப்புள்ள விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்வர், அதுபோல் புதுவையில் நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்படும்.

    எனவே அரசு உடனடியாக நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சக நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×