என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டாக்டர் தவற விட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன் உடனடி மீட்பு
    X

    செல்போனை மீட்டு டாக்டரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரி.

    டாக்டர் தவற விட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன் உடனடி மீட்பு

    • மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் சகரிகா நேற்று கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருந்தார்.
    • நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது.

    புதுச்சேரி:

    பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் சகரிகா நேற்று கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருந்தார்.

    நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது.

    இதுகுறித்து அவர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் அசோக்குமார், விஸ்வநாதன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு செல்போனை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் அங்கு வந்த நோயாளிகளின் விவரங்களை கேட்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள மந்தவெளி திடலில் செல்போன் கிடந்ததாக அங்கு வந்த ஒரு மூதாட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த போன் டாக்டருடையது என்பது தெரிய வந்தது.

    பின்னர் அந்த செல்போனை டாக்டரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு செல்போனை கண்டுபிடித்து டாக்டரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×