என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
    • பிரகாஷ் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். பிரகாஷ் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இதற்கிடையே பிரகாஷ் சென்னையை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த புவனேஸ்வரி கண்டித்த போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஒரே வீட்டில் புவனேஸ்வரி தனது குழந்தைகளுடனும் மற்றொரு பகுதியில் பிரகாசும் தனித்தனியே வசித்து வந்தனர். ஒவ்வொரு மாதமும் குடும்ப செலவுக்கு புவனேஸ்வரிக்கு பிரகாஷ் ரூ.10ஆயிரம் கொடுத்து வந்தர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூர் நாவிதர் மடத்துவீதியில் வசித்து வந்த பிரகாசின் தந்தை இறந்து போனார்.

    இதையடுத்து புவனேஸ்வரி சம்பவத்தன்று 7-ம் நாள் துக்கம் படைக்க மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறிய நிலையில் புவனேஸ்வரி தனது கணவருக்கும் உணவு பரிமாறினார். இதனால் ஆவேசமடைந்த பிரகாஷ் புவனேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி நீயாரடி எனக்கு உணவு பரிமாற என கூறி கையால் சரமாரியாக தாக்கினார். மேலும் புவனேஸ்வரியின் கைவிரலை கடித்து அவரை மாடியில் இருந்து கீழே தள்ள முயன்றார். உடனே அங்கிருந்த உறவினர்கள் புவனேஸ்வரியை பாது காப்பாக பிடித்து கொண்டனர்.

    தொடர்ந்து புவனேஸ்வ ரியை விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவேன் என்றும் சாப்பாட்டு அரிசியில் வெந்தைய அளவு விஷமாத்திரைகளை கலந்து கொன்று விடுவேன் என்றும் பிரகாஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து புவனே ஸ்வரி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • அரசின் குடிசை மாற்று மூலம் ஏழை, எளிய மக்கள் வீடுக்கட்டும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்றாவது தவணையாக வங்கி ஆவணத்தை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.
    • தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், ஜெயசீலன், ராஜ், பாலாஜி, லாரா, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் குடிசை மாற்று மூலம் ஏழை, எளிய மக்கள் வீடுக்கட்டும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்றாவது தவணையாக வங்கி ஆவணத்தை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இதில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தி.மு.க. செயலாளர் சக்திவேல், மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், இளைஞர் அணி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், ஜெயசீலன், ராஜ், பாலாஜி, லாரா, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • செவிலிய அதிகாரி பானுமதி வரவேற்றார். மருத்துவ அதிகாரி மேனகா தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    செவிலிய அதிகாரி பானுமதி வரவேற்றார். மருத்துவ அதிகாரி மேனகா தலைமை தாங்கினார். சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் கிராமப்புற செவிலியர் மாலினி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. களப்பணியாளர் தினேஷ் நன்றியுரை கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை அரசு போக்கு வரத்துக்கழகமான பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப் படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது

    புதுச்சேரி:

    புதுவை அரசு போக்கு வரத்துக்கழகமான பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப் படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. கிராமப்புற பகுதியில் பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நேற்று அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட 12 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. கோரிக்கை நிறை–வேறும்வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறி–வித்தனர்.

    இதனால் 7-வது நாளாக பி.ஆர்.டி.சி. ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல்- அமைச்சர் ரங்கசாமியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. எதிர்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ. மற்றும் போராட்டகுழுவினர் பங்கேற்றனர்.

    பணிக்கு திரும்பி பஸ்களை இயக்குங்கள். கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதாக முதல்-அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பிற்பகலில் பஸ்களை இயக்கினர். 

    • புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு, வழங்கப்படவில்லை.
    • பொறியியல் கல்லூரி, அன்னை தெரேசா மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் பிற துறைகளில் பணிபுரிவோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு, வழங்கப்படவில்லை.

    புதுவை பொறியியல் கல்லூரி, அன்னை தெரேசா மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் பிற துறைகளில் பணிபுரிவோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படியும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை,

    7-வது ஊதியக்குழு நிர்ணயித்தபடி ஊதிய நிலுவைத் தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து கவர்னர், முதல்-அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், செயலாளர், உயர்கல்வித் துறை இயக்குநர் என பலரிடம் கோரிக்கை மனு அளித்தும் நேரில் பேசியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்து கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தினர்கள் அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து கல்லூரிகளின் முகப்பில் அமர்ந்து காலவரையற்ற உள்ளிருப்புப் போரா ட்டத்தை தொடங்கினர்.

    பதவி உயர்வு வழங்கும் வரை போராட்டம் செய்ய கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்தில் புதுவை தாகூர் கல்லூரி, பாரதிதாசன் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம், புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் அரசு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் கல்லூரிகளின் முன்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    • கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில 23-வது மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் நடந்தது.
    • மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில 23-வது மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் நடந்தது.

    மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் அபிஷேகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் தினேஷ்பொன்னையா, சிவா, பொருளாளர் சுப்பையா ஆகியோர் பேசினர். தொகுதி செயலாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.

    மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், தொகுதி துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் 23-வது மாநில மாநாடு ஆகஸ்டு 17, 18-ந் தேதிகளில் ஜீவா ருக்மணி திருமண நிலையத்தில் நடத்துவது. ஆகஸ்டு 18-ந் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. அரசு, தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    அந்த தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி வழங்கப்படுவதாக பொது நலஅமைப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வரவழைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதன் தரத்தை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனைகளையும் கூறினார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து, அதை சாப்பிட்டு பார்த்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    • கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
    • இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு ஒத்திகை நடக்கிறது. ஒத்திகையின் போது கடல்வழியாக புதிய நபர்கள் மற்றும் புதிய படகுகள் வருவதை கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணியில் சீனியர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு வம்சி ரெட்டி, இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் கடற்கரை பாதுகாப்பினை ஆய்வு செய்தனர்.

    • உருளையன்பேட்டை தொகுதியில் சின்ன வாய்க்கால் வீதி அண்ணாசாலை முதல் செஞ்சி சாலை வரை நகரின் முக்கியமான பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உள்ளது.
    • இந்த வாய்க்கால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.8 கோடியில் நவீனப்படுத்தி மேம்படுத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதியில் சின்ன வாய்க்கால் வீதி அண்ணாசாலை முதல் செஞ்சி சாலை வரை நகரின் முக்கியமான பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உள்ளது.

    இந்த வாய்க்கால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.8 கோடியில் நவீனப்படுத்தி மேம்படுத்தப்பட உள்ளது. மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலர் அருண், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப தலைமை அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொதுப் பணித்துறை பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் முருகானந்தம், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மின் துறை செயற்பொறியாளர் கனியமுது, நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் சம்பந்தம், திருஞானம், வாசு, வைத்தியநாதன், மின்துறை உதவி பொறியாளர் கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ஆய்வில், அப்பகுதியிலிருந்து வாய்க்காலில் வெளியேறும் கழிவு நீரை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மழை காலங்களில் மட்டும் மழைநீர் ஓட வேண்டிய நிலை மாறி, நாள்தோறும் கழிவுநீர் செல்லும் வாயக்காலாக மாறியுள்ளதை தடுக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    அதிகாரிகள் கழிவு நீர் கலப்பதை தடுக்கக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிகளை விரைந்து முடித்து, நகரின் முன்மாதிரியான மழைநீர் வடிகால் வாய்க்காலாக மாற்றி அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

    • புதுவையில் வீட்டு மனை தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்தது.
    • புதுவை லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குத்தூஸ்

    புதுச்சேரி:

    புதுவையில் வீட்டு மனை தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்தது.

    புதுவை லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மனைவி எழிலரசி (வயது 59). இவரது வீட்டுக்கும் அருகில் உள்ள பாலன் குடும்பத்துக்கும் வீட்டு மனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பாலன் அவரது மனைவி மோகனாம்பாள் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எழிலரசி மற்றும் அவரது மகன் அரி அமிர்தராஜ் (27). ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இருதரப்பினருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் பாலன் தரப்பினர் எழிலரசியை கத்தியால் குத்தினர். மேலும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கினார்கள். அதோடு எழிலரசி கையில் வைத்திருந்த கேமராவையும் அவர்கள் பறித்து அடித்து நொறுக்கினார்கள்.

    இதுபோல் எழிலரசி தரப்பினர் இரும்பு கம்பியால் பாலனையும் தாக்கினர். இந்த மோதலில் காயமடைந்த எழிலரசி மற்றும் பாலன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • புதுவையில் ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    புதுவையில் ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 28, காரைக்காலில் 7, ஏனாமில் 9 பேர் என புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 3, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 185, காரைக்காலில் 24, ஏனாமில் 26, மாகியில் 7 பேர் என 242 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 30, காரைக்காலில் ஒருவர் என 31 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாநிலத்தில் கொரோ னாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 40 ஆயிரத்து 693 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோ னா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • புதுவையில் நிலம் சம்பந்தமான அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்பட்டால் தி.மு.க. போராட்ட களத்தில் இறங்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா மாநில உரிமைகளை மீட்கும் எண்ணத்தில் தனது எச்சரிக்கையை பதிவு செய்திருந்தார்.
    • புதுவையில் மக்கள் மன்றத்தில் தோற்று தனது அதிகார பலத்தை இழந்து நிற்கும் அ.தி.மு.க. முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

    புதுவையில் நிலம் சம்பந்தமான அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்பட்டால் தி.மு.க. போராட்ட களத்தில் இறங்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா மாநில உரிமைகளை மீட்கும் எண்ணத்தில் தனது எச்சரிக்கையை பதிவு செய்திருந்தார்.

    புதுவையில் மக்கள் மன்றத்தில் தோற்று தனது அதிகார பலத்தை இழந்து நிற்கும் அ.தி.மு.க. முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும். மக்கள் மீது உண்மையான மரியாதையையும் அன்பையும் வைத்திருக்கும் தி.மு.க.வை குற்றம் சொல்ல புதுவை அ.தி.மு.க.விற்கு தகுதி கிடையாது.

    நில உரிமையை கவர்னர் வசம் ஒப்படைத்தால் புதுவை அரசு, அரசு சார்பு நிறுவனங்களின் வசம் உள்ள சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள 1,500 ஏக்கர் நிலங்கள் அவரின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல நேரிடும்.

    மக்களால் தேர்ந ்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் மக்களின் தேவை, மக்களின் மன ஓட்டம் அனைத்தும் முழுமையாக தெரியும் மக்கள் நலன்சார்ந்து ஏதேனும் ஒரு கொள்கை முடிவு நிலம் சார்ந்து எடுக்கும் பட்சத்தில் கவர்னருக்கு ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் நிலத்தை கையாளும் உரிமையை வழங்க வேண்டும்.

    புதுவையின் நில உரிமையை யாருக்கும் விட்டுத்தரக்கூடாது என்ற தி.மு.க.வின் முழக்கத்திற்கு அனைத்து கட்சியும் ஒன்றிணைந்து வலு சேர்க்க வேண்டும். மாநில உரிமைக்கு குரல் கொடுக்க, அணி திரளும் நேரத்தில் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தி.மு.க. முறியடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×