என் மலர்

  நீங்கள் தேடியது "State Conference"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநாட்டு பணிகளுக்காக 36 துறைகள் பிரிக்கப்பட்டன.
  • தோராயமான வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டது.

  அனுப்பர்பாளையம் :

  தமிழ்நாடு ஸ்ரீராமகிருஷ்ண ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்த பக்தர்களின் மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் சார்பாக அதன் கிளை ஸ்தாபனமான ஸ்ரீ சாரதா தேவி நிவாசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி சத்யஞானானந்தஜி மகராஜ் தலைமையேற்று வழி நடத்தினார்.

  நாட்டறம்பள்ளி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் ,செங்கல்பட்டு ராமகிருஷ்ண மிஷனின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதப்பிரியானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினர். மாநாட்டு பணிகளுக்காக 36 துறைகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

  தோராயமான வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதம் 23,24 மற்றும் 25 ந்தேதிகளில் இந்த பக்தர்கள் மாநாடு அவிநாசி, ஆட்டையம்பாளையம், ஸ்ரீ செந்தூர் மகாலில் நடைபெறவுள்ளது. அகில உலக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் பக்தர்களின் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மாநிலத்தின் அனைத்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியர்களும், ஸ்ரீ சாரதா மடத்தின் மாதாஜிக்களும் கலந்து கொள்கின்றனர்.

  இசைப்பாடகி நித்தியஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி நடக்க உள்ளது. நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவைகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. சுமார் 5,000 பக்தர்கள் தங்க இட வசதி மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் 50 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.
  • மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணி நடைபெறும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அவிநாசி :

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின், 25வது மாநில மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டம் அவிநாசியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது.

  மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், ஒன்றிய செயலாளர் சண்முகம், துணை செயலாளர்கள் கோபால், முத்துசாமி, பொருளாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.

  இதில், கட்சியினர் பங்கேற்க வேண்டும். மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல்லில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
  • உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் நாளை நடைபெறுகிறது.

  நாமக்கல்:

  நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராேஜஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சார்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் நாளை நடைபெறுகிறது.

  இம்மாநாட்டினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ெதாடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.

  காலை 9.30 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் ஆ.ராசா எம்.பி. மற்றும் தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன்சுல்தானா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

  மதியம் 12 மணி அளவில் உணவு இடைவெளிக்கு பிறகு வரலாற்று சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மக்களோடு நில், மக்களோடு வாழ் என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறார்.

  மாலை 4 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறுகிறார்.

  இம்மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில 23-வது மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் நடந்தது.
  • மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்

  புதுச்சேரி:

  இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில 23-வது மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் நடந்தது.

  மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் அபிஷேகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் தினேஷ்பொன்னையா, சிவா, பொருளாளர் சுப்பையா ஆகியோர் பேசினர். தொகுதி செயலாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.

  மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், தொகுதி துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் 23-வது மாநில மாநாடு ஆகஸ்டு 17, 18-ந் தேதிகளில் ஜீவா ருக்மணி திருமண நிலையத்தில் நடத்துவது. ஆகஸ்டு 18-ந் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

  ×