search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekananda Devotees"

    • மாநாட்டு பணிகளுக்காக 36 துறைகள் பிரிக்கப்பட்டன.
    • தோராயமான வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு ஸ்ரீராமகிருஷ்ண ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்த பக்தர்களின் மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் சார்பாக அதன் கிளை ஸ்தாபனமான ஸ்ரீ சாரதா தேவி நிவாசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி சத்யஞானானந்தஜி மகராஜ் தலைமையேற்று வழி நடத்தினார்.

    நாட்டறம்பள்ளி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் ,செங்கல்பட்டு ராமகிருஷ்ண மிஷனின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதப்பிரியானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினர். மாநாட்டு பணிகளுக்காக 36 துறைகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

    தோராயமான வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதம் 23,24 மற்றும் 25 ந்தேதிகளில் இந்த பக்தர்கள் மாநாடு அவிநாசி, ஆட்டையம்பாளையம், ஸ்ரீ செந்தூர் மகாலில் நடைபெறவுள்ளது. அகில உலக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் பக்தர்களின் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மாநிலத்தின் அனைத்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியர்களும், ஸ்ரீ சாரதா மடத்தின் மாதாஜிக்களும் கலந்து கொள்கின்றனர்.

    இசைப்பாடகி நித்தியஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி நடக்க உள்ளது. நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவைகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. சுமார் 5,000 பக்தர்கள் தங்க இட வசதி மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் 50 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×