என் மலர்
புதுச்சேரி

போராட்டத்தில் ஈடுபட்ட கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள்.
கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
- புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு, வழங்கப்படவில்லை.
- பொறியியல் கல்லூரி, அன்னை தெரேசா மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் பிற துறைகளில் பணிபுரிவோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு, வழங்கப்படவில்லை.
புதுவை பொறியியல் கல்லூரி, அன்னை தெரேசா மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் பிற துறைகளில் பணிபுரிவோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படியும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை,
7-வது ஊதியக்குழு நிர்ணயித்தபடி ஊதிய நிலுவைத் தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து கவர்னர், முதல்-அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், செயலாளர், உயர்கல்வித் துறை இயக்குநர் என பலரிடம் கோரிக்கை மனு அளித்தும் நேரில் பேசியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கண்டித்து கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தினர்கள் அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து கல்லூரிகளின் முகப்பில் அமர்ந்து காலவரையற்ற உள்ளிருப்புப் போரா ட்டத்தை தொடங்கினர்.
பதவி உயர்வு வழங்கும் வரை போராட்டம் செய்ய கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்தில் புதுவை தாகூர் கல்லூரி, பாரதிதாசன் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம், புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் அரசு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் கல்லூரிகளின் முன்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.






