என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் குளம், செட்டிப்பட்டு ஊத்துக்குட்டை குளம், மணலிப்பட்டு செஞ்சி குளம், மற்றும் திருக்கனூர் பெரிய ஏரி ஆகியவற்றை சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை அந்தந்த கிராமங்களில் நடைபெற்ற விழாக்களில் அமைச்சர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி கள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., அருள் முருகன், முத்தழகன், தமிழ்மணி, செல்வகுமார், காட்டேரிக்குப்பம் ராஜா அ.தி.மு.க. பிரமுகர் சுத்துக்கேணி பாஸ்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • அரசு நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் நோய் பரவும் திட்டம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாதம் இன்று மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ. ரிச்சர்ட் தலைமை தாங்கி மலேரியா எதிர்ப்பு மாத நிகழ்ச்சி மற்றும் கொசு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் நோய் பரவும் திட்டம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாதம் இன்று மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தொகுதி

    எம்.எல்.ஏ. ரிச்சர்ட் தலைமை தாங்கி மலேரியா எதிர்ப்பு மாத நிகழ்ச்சி மற்றும் கொசு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். குயவர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வினி மலேரியா நோய் பற்றியும் அதன் தடுப்புமுறை மற்றும் சிகிச்சை பற்றியும் விவரித்தார்.

    தேசிய நோய் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாணவிகள் காட்சி அமைப்பினை கண்டு களித்த னர். சுகாதார ஆய்வாளர் யசோதா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை சுகாதார உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், சுதாகர், விசாலாட்சி, மற்றும் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பாண்டி மெரீனா பீச்சில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம்-வெள்ளி நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • தனது மகன் படிப்பு செலவுக்காக விநாயகம்பட்டு புதுநகரில் வசிக்கும் பழனியம்மாளிடம் ரூ.45 ஆயிரம் பெற்றார்.

    புதுச்சேரி:

    பாண்டி மெரீனா பீச்சில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம்-வெள்ளி நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    வில்லியனூர் அருகே ராமநாதபுரம் மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி முருகவேணி (வயது33). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது மகன் படிப்பு செலவுக்காக விநாயகம்பட்டு புதுநகரில் வசிக்கும் பழனியம்மாளிடம் ரூ.45 ஆயிரம் பெற்றார். அப்போது பழனியம்மாள் தனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி யதால் அவரையும், அவரது குழந்தைகளையும் முருகவேணி தனது மோட் டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புதுவை வந்தார்.

    பழனியம்மாள் தனது குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டதால் முருகவேணி அவர்களை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள பாண்டி மெரீனா பீச்சுக்கு அழைத்து சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி தான் கடன் வாங்கி கொண்டு வந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம், பழைய வெள்ளி கொலுசுகளை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு கடற்கரைக்கு சென்றார்.

    பின்னர் வந்து மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருப்பதை கண்டு முருகவேணி அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்மநபர்கள் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பணம் மற்றும் வெள்ளி நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து முருகவேணி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி.ரமேஷ், எம்.எல்.ஏ. முதன்மை கணக்காய்வு துறை தலைவர் ஆனந்த், முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி முன்னிலை வகித்தனர். தலைமை செயலர், நிதித்தறை செயலர், கலெக்டர், துறை செயலர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், 2014-15-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மீது 112 பத்திகளுக்கு பதிலளிப்பது நிலுவையில் உள்ளது. 1993-94-ல் 497 பத்திகள் நிலுவையில் உள்ளது. அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்களில் ஆய்வறிக்கை கணக்குகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    இதற்கு அரசு துறைகள் பதிலளிக்காமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    கணக்காய்வு துறை சுட்டிக்காட்டிய குறைகளை நேர்மையான எண்ணத்தோடு அணுக வேண்டும். அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரவுக்கு ஏற்ப செலவுகளை கட்டுப்படுத்துவது, தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது குறித்து அரசுக்கு சொல்லும் பொறுப்பு பொது கணக்குழுவுக்கு உண்டு. 

    நிலுவையில் உள்ள பாக்கிகள் குறித்து கால அளவுக்குள் தீர்க்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒரு அதிகாரிக்கு பொறுப்பு வழங்கி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.சுணக்கமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் 3-ம் ஆண்டு பதில் தராமல் உள்ள துறைகளுக்கு 4 வார காலஅவகாசம் அளித்து, பதில் தர உத்தரவிடப்பட்டது. பல ஆண்டு நிலுவையில் உள்ளதை 2 மாதத்தில் பதில் தர வேண்டும். மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு பதில் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன்னிலையில் நில அதிகாரத்தை கவர்னருக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
    • முதல்- அமைச்சரும் முடிவு செய்வது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன்னிலையில் நில அதிகாரத்தை கவர்னருக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிலம் தொடர்பான முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையும், முதல்- அமைச்சரும் முடிவு செய்வது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

    இப்போது கவர்னருக்கு அதை மாற்ற நினைப்பது புதுவை மக்களை வஞ்சிக்கும் செயலாகும். அரசின் பாதுகாப்பில் உள்ள நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஒரு சில அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக சில அரசு அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே இதுபோன்ற செயல்களுக்கு காரணமாகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சர் மக்களுக்கு நல்லாட்சி தர நினைக்கிறார். சில அதிகாரிகள் தவறான செயல்பாடால் திட்டங்கள் மக்களை சென்றடைய தாமதம் ஏற்படுகிறது. அரசின் பாரம்பரியமிக்க நிலங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும்.

    நிலம் சம்பந்தப்பட்ட உரிமைகள் அமைச்சரவைக்கு மட்டுமே இருக்க வேண்டும். மக்களின் எதிர்காலம் கருதி நிலம் சம்பந்தப்பட்ட உரிமைகளை மாநில அரசிடமே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய மாணவர் சங்கம் சார்பில் காமராஜர் சிலை அருகே மறியல் நடந்தது.
    • பிரதேச செயலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் காமராஜர் சிலை அருகே மறியல் நடந்தது.

    போராட்டத்திற்கு பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். பிரதேச குழு நிர்வாகிகள் ஸ்டிபன் ராஜ், வந்தனா,சிபி, அபிஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பள்ளிகள் திறந்தும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடை வழங்காததை கண்டித்தும், மாணவர் பஸ்சை இயக்காதது, தமிழ் பாடப்புத்தகம் வழங்காததை கண்டித்தும் மறியல் போராட்டம் நடந்தது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • மத்திய அரசு இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டு பணி முடிக்கும் இளைஞர்களில் 25 சதவீதத்தினர் தவிர்த்து மற்றவர்கள் ராணுவத்தி லிருந்து வெளியனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகளும் இளைஞர்களின் வேலைக்கு உத்திரவாதம் இல்லாத அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.

    அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 16 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது. சாரம் அவ்வை திடலில் நடந்த போராட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வாழ்த்தி பேசினர்.

    போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, ராஜா, வினோத் மற்றும் காங்கிரசார் பங்கேற்றனர்.

    ஜென்மராக்கினி கோவில் அருகே நடந்த போராட் டத்துக்கு காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் மருதுபாண்டியன், வேல்முருகன், பிரதீஷ்இருதயராஜ், திருமுருகன், ராமலிங்கம், டாக்டர் விஜயகுமாரி, சார்லஸ், ஜோசப், வக்கீல் சுரேஷ், ஜெரால்டு உட்பட பலர் பங்கேற்றனர்.

    அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தில் லட்சுமணன், குமரன், ராஜ்குமார், செல்வம், அய்யப்பன், ராமலிங்கம், சீனிவாசன், சக்திவேல், சுகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே நடந்த போராட்டத்திற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். போராட்டத்தில் நந்தாகலைவாணன், அய்யப்பன் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

    இதுபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை எதிர்த்து அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்யாகிரக போராட்டம் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் சிலை அருகே நடந்தது. போராட்டத்துக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் மாநில செயலாளர் சூசைராஜ், விளையாட்டு பிரிவு தலைவர் ராஜாராம், பி.சி.சி. அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் புதிய பஸ்நிலையம், முதலியார்பேட்டை தபால் நிலையம், தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பு, கன்னியக்கோவில் சந்திப்பு, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, ராஜீவ்காந்தி சதுக்கம், வில்லியனூர் கொம்யூன் அலுவலகம், பத்துக்கண்ணு சந்திப்பு, மதகடிப்பட்டு சந்திப்பு, திருக்கனூர் கடைவீதி, நெல்லித்தோப்பு சுப்பையா சிலை என மொத்தம் 16 இடங்களில் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில், அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியிருந்தனர். போராட்டம் நடந்த இடங்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் சென்று வாழ்த்தி பேசினர்.

    • ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
    • இந்நிலையில் புதுவை உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஒன்று கூடினர்.



    புதுச்சேரி:

    ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

    புதுவை மாநில அ.தி.மு.க.வில் கிழக்கு மாநிலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மேற்கு மாநிலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் உள்ளது.

    இந்நிலையில் புதுவை உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஒன்று கூடினர்.

    பின்னர் அவர்கள் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை கிழித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வின் உதவியோடும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணப்படியும், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு விரோதமாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் சதி செயலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் முறியடித்துள்ளனர்.

    அ.தி.மு.க.க்கு எதிராக, தி.மு.க.வின் பி டீமாக செயல்படும் ஓ.பி.எஸ். மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

    இதை தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம். ஓ.பி.எஸ்.,சின் மகன் மு.க.ஸ்டாலின் சிறப்பான முதல்-அமைச்சராக செயல்படுகிறார் என கூறி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை அழிக்கும் நோக்கில் அவர்கள் செயல்படுகின்றனர்.

    ஜூலை 11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பதவியேற்க கிழக்கு மாநில அ.தி.மு.க. முழு ஆதரவை தருகிறது. தமிழகம், புதுவையில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்க வேண்டும்.

    காரைக்காலில் உள்ள 12 பொதுக்குழு உறுப்பினர்களும், புதுவை கிழக்கு மாநிலத்தின் 23 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் மேற்கு மாநிலத்தில் உள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். செயலாளர் உட்பட கையெழுத்திடாத 10 பேரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததை தட்டிக்கேட்ட டிரைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை
    • புதுவை பிள்ளை தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி

    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததை தட்டிக்கேட்ட டிரைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை பிள்ளை தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவர் ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளருக்கு கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    இவர் புதுவை மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்சாலை ரோட்டில் ஒரு டீக்கடை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சாணரப்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக ரவி மீது மோதுவது போல் வந்தார். இதனை ரவி தட்டிக்கேட்டார்.

    இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் அங்கு கிடந்த சிமெண்டு ஷீட்டை எடுத்து ரவியின் தலை மற்றும் மார்பில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ரவி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருபுவனையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பொதுச்செயலாளர் தமிழரசன் கபடி சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கபடி சங்க பொதுக்குழு கூட்டம் திருபுவனையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. புதுவை மாநில கபடி சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். துணைத் தலைவர் அருள்தாஸ் வரவேற்று பேசினார்.

    பொதுச்செயலாளர் தமிழரசன் கபடி சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் புதுவை மாநில கபடி சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் 2 சிறப்பு கபடி போட்டிகள் நடத்துவது, 48-வது கபடி சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து புதுவை மாநில கபடி சங்கத்தின் சார்பில் நிர்வாக பொதுச் செயலாளராக திருபுவனை கலை அன்னை விளையாட்டுக்கழக அணியின் தலைவர் மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டார். 

    • புதுவை தனியார் விடுதியில் தங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்த சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்து போனார்.
    • ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து

    புதுச்சேரி:

    புதுவை தனியார் விடுதியில் தங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்த சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்து போனார்.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த இவரது அண்ணன் மகன் இளங்கோ(வயது29) மற்றும் 5 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் புதுவை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி புதுவையில் சுற்றுலா தலங்களில் பார்வையிட்டு வந்தனர். இவர்கள் புதுவை கடற்கரை சென்று கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.

    பின்னர் விடுதி அறையில் அனைவரும் மது குடித்தனர். அப்போது இளங்கோ அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் அனைவரும் விடுதியில் தூங்கினர். இரவு 7 மணியளவில் இளங்கோ வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி வாந்தி எடுத்தப்படி குப்புற படுத்து கிடந்தார்.

    அவரை நண்பர்கள் எழுப்பிய போது இளங்கோ பேச்சுமூச்சியின்றி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இளங்கோ அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது நண்பர்கள் பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டிவனம் எரையா னூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(56). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கமுள்ள சிவக்குமார் குடி பழக்கத்துக்கு அடிமையாகி மது குடிக்க அடிக்கடி புதுவைக்கு வருவது வழக்கம்.

    அதுபோல் இவர் மது குடிப்பதற்காக பஸ்சில் புதுவைக்கு வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மதுக்கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த சிவக்குமார் மது கடை அருகே உள்ள ஒரு விடுதி வாசலில் மயங்கி கிடந்தார்.

    இதுபற்றி விடுதி ஊழியர் செல்போன் மூலம் சிவக்குமாரின் மகன் பிரவீன் குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பிரவீன்குமார் வந்து பார்த்த போது அங்கு அவரது தந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சிவக்குமார் இறந்து போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவரது மகன் பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
    • தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மே மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் 90.90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 81.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 142 மாணவர்கள், 7 ஆயிரத்து 703 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 845 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    இதில் 6 ஆயிரத்து 153 மாணவர்கள், 7 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    புதுவையில் மட்டும் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 451 பேரில் 4 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 15 பேரில் 6 ஆயிரத்து 954 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காரைக்காலில் மட்டும் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய ஆயிரத்து 592 பேரில் ஆயிரத்து 279 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 787 பேரில் 767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 155 அரசு, தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவையில் மட்டும் 58 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவையில் ஒரு பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இயற்பியல் 17, வேதியியல் 4, உயிரியல் 34, கணிப்பொறி அறிவியல் 24, கணிதம் 17, பொருளியல் 23, வணிகவியல் 21, கணக்குப்பதிவியல் 43, வணிக கணிதம் 5, கணிணி பயன்பாடு 60, விலங்கியல் 2 பேர் என மொத்தம் 250 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    ×