search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் காங்கிரசார் போராட்டம்
    X

    ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகே நடந்த காங்கிரஸ் போராட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய காட்சி.

    புதுவையில் காங்கிரசார் போராட்டம்

    • மத்திய அரசு இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டு பணி முடிக்கும் இளைஞர்களில் 25 சதவீதத்தினர் தவிர்த்து மற்றவர்கள் ராணுவத்தி லிருந்து வெளியனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகளும் இளைஞர்களின் வேலைக்கு உத்திரவாதம் இல்லாத அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.

    அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 16 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது. சாரம் அவ்வை திடலில் நடந்த போராட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வாழ்த்தி பேசினர்.

    போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, ராஜா, வினோத் மற்றும் காங்கிரசார் பங்கேற்றனர்.

    ஜென்மராக்கினி கோவில் அருகே நடந்த போராட் டத்துக்கு காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் மருதுபாண்டியன், வேல்முருகன், பிரதீஷ்இருதயராஜ், திருமுருகன், ராமலிங்கம், டாக்டர் விஜயகுமாரி, சார்லஸ், ஜோசப், வக்கீல் சுரேஷ், ஜெரால்டு உட்பட பலர் பங்கேற்றனர்.

    அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தில் லட்சுமணன், குமரன், ராஜ்குமார், செல்வம், அய்யப்பன், ராமலிங்கம், சீனிவாசன், சக்திவேல், சுகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே நடந்த போராட்டத்திற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். போராட்டத்தில் நந்தாகலைவாணன், அய்யப்பன் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

    இதுபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை எதிர்த்து அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்யாகிரக போராட்டம் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் சிலை அருகே நடந்தது. போராட்டத்துக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் மாநில செயலாளர் சூசைராஜ், விளையாட்டு பிரிவு தலைவர் ராஜாராம், பி.சி.சி. அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் புதிய பஸ்நிலையம், முதலியார்பேட்டை தபால் நிலையம், தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பு, கன்னியக்கோவில் சந்திப்பு, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, ராஜீவ்காந்தி சதுக்கம், வில்லியனூர் கொம்யூன் அலுவலகம், பத்துக்கண்ணு சந்திப்பு, மதகடிப்பட்டு சந்திப்பு, திருக்கனூர் கடைவீதி, நெல்லித்தோப்பு சுப்பையா சிலை என மொத்தம் 16 இடங்களில் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில், அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியிருந்தனர். போராட்டம் நடந்த இடங்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் சென்று வாழ்த்தி பேசினர்.

    Next Story
    ×