search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சபாநாயகர் தலைமையில் கணக்காய்வு குழு கூட்டம்
    X

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் கணக்காய்வு குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

    சபாநாயகர் தலைமையில் கணக்காய்வு குழு கூட்டம்

    • புதுவை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி.ரமேஷ், எம்.எல்.ஏ. முதன்மை கணக்காய்வு துறை தலைவர் ஆனந்த், முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி முன்னிலை வகித்தனர். தலைமை செயலர், நிதித்தறை செயலர், கலெக்டர், துறை செயலர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், 2014-15-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மீது 112 பத்திகளுக்கு பதிலளிப்பது நிலுவையில் உள்ளது. 1993-94-ல் 497 பத்திகள் நிலுவையில் உள்ளது. அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்களில் ஆய்வறிக்கை கணக்குகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    இதற்கு அரசு துறைகள் பதிலளிக்காமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    கணக்காய்வு துறை சுட்டிக்காட்டிய குறைகளை நேர்மையான எண்ணத்தோடு அணுக வேண்டும். அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரவுக்கு ஏற்ப செலவுகளை கட்டுப்படுத்துவது, தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது குறித்து அரசுக்கு சொல்லும் பொறுப்பு பொது கணக்குழுவுக்கு உண்டு.

    நிலுவையில் உள்ள பாக்கிகள் குறித்து கால அளவுக்குள் தீர்க்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒரு அதிகாரிக்கு பொறுப்பு வழங்கி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.சுணக்கமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் 3-ம் ஆண்டு பதில் தராமல் உள்ள துறைகளுக்கு 4 வார காலஅவகாசம் அளித்து, பதில் தர உத்தரவிடப்பட்டது. பல ஆண்டு நிலுவையில் உள்ளதை 2 மாதத்தில் பதில் தர வேண்டும். மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு பதில் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Next Story
    ×