என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
டிரைவர் மீது தாக்குதல்
- மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததை தட்டிக்கேட்ட டிரைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை
- புதுவை பிள்ளை தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி
புதுச்சேரி:
மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததை தட்டிக்கேட்ட டிரைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை பிள்ளை தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவர் ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளருக்கு கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவர் புதுவை மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்சாலை ரோட்டில் ஒரு டீக்கடை எதிரே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சாணரப்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக ரவி மீது மோதுவது போல் வந்தார். இதனை ரவி தட்டிக்கேட்டார்.
இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் அங்கு கிடந்த சிமெண்டு ஷீட்டை எடுத்து ரவியின் தலை மற்றும் மார்பில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ரவி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






