என் மலர்
புதுச்சேரி

புதுவை பா.ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேசிய காட்சி.
புதுவை பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டம்
- புதுவை பா.ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் மூலக்குளம் ரீனா மஹாலில்ந டைபெற்றது.
- செயற்குழு கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் மூலக்குளம் ரீனா மஹாலில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
பிரிவுகளின் பொறுப்பாளர்கள் அருள் முருகன், சரவணன், ஊடகப் பிரிவு அமைப்பாளர் குருசங்கரன், சமூக ஊடகப் பிரிவு அமைப்பாளர் கார்த்திகேயன் ஐ.டி. பிரிவு அமைப்பாளர் லெனின் வக்கீல்கள் பிரிவு அமைப்பாளர் கார்த்திகேயன், வணிகப்பிரிவு அமைப்பாளர் சத்யராஜ், தொழில் துறை பிரிவு அமைப்பாளர் ராஜகணபதி மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி, கல்வியாளர்கள் பிரிவு அமைப்பாளர் ரங்கநாதன், பயிற்சி முகாம் பிரிவு பொறுப்பாளர் பாலாஜி, கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம், அமைப்புசாரா பிரிவு அமைப்பாளர் சுரேஷ், அறிவுசார் பிரிவு அமைப்பாளர் முருகன் பிரச்சார பிரிவு அமைப்பாளர் ரவிச்சந்திரன், வர்த்தக பிரிவு அமைப்பாளர் கலியபெருமாள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






