என் மலர்
புதுச்சேரி
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- வீர. பொன்னிவளவனுக்கு கட்சியினர் ஆளுய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் கிழக்கு மாவட்டமான வானூர், கண்ணமங்கலம், கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக வீர.பொன்னிவளவன் நியமிக்கப்பட்டார்.
அவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீர. பொன்னிவளவன் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதையடுத்து அக்கட்சியினர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வீர. பொன்னிவளவனுக்கு கட்சியினர் ஆளுய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி துணை செயலாளர் நல்லாவூர் அன்பரசு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் நாகராஜன், தமிழ்ச்செல்வன், ஈழத்தமிழன், ராமதாஸ், கலைமாறன், தங்கராசு, ஆதிமுத்துராம், வீரப்புதல்வன், நீதிதேவன், மோகன், வெங்கடேசன், ஜான், தட்சிணாமூர்த்தி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஜிப்மர் இயக்குனரிடம் தொழிற்சங்கத்தினர் மனு
- ஆண் பெண் தொழிலாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரிடம் சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் ரமேசு, முருகையன், விஜயன், ஜானகிராமன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில தலைவர் மோதிலால் ஆகியோர் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரில் ஒப்பந்ததாரரிடம் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த ஆண் பெண் தொழிலாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு பணிபுரிந்து வந்தவர்களுக்கு பணி மறுப்பது வேதனைக்குரியது. பணியில் சேர ரூ.1 லட்சம் வரை பணம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
- மக்களை முன்னேற்றம் அடைய செம்மையாக பணி செய்து கொண்டிருக்கும் நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் இருந்தோம்.
- அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இணைப்பு சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கிராம திட்ட ஊழியர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் செயலாளர் கருணைபிரகாசம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு உருவாக்கி கிராமப்புற மக்களை முன்னேற்றம் அடைய செம்மையாக பணி செய்து கொண்டிருக்கும் நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் இருந்தோம்.
தற்போது ஊதிய உயர்வு வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய்.ஜ.சரவணன்குமார். ஊரக வளர்ச்சி துறை செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி மற்றும் புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இணைப்பு சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தகவல்
- கலந்தாய்வில் மாணவர்கள், பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகல், மாற்று சான்றிதழ், சாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்தது. இதில் இடம் கிடைக்காதவர்கள், சமீபத்தில் நடந்த துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி என்.கே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இந்த கலந்தாய்வில் மாணவர்கள், பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகல், மாற்று சான்றிதழ், சாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
அதில் 300 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 1-ம் தேதி காலை 9.30 மணிக்கும், 299 முதல் 250 வரை பெற்றவர்களுக்கு மதியம் 2.30 மணிக்கும், 249 முதல் 175 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும். குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வரும் 2-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
- சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் சமோசா வியாபாரி ராஜ் என்கிற ராஜேஸ்வரி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- சென்னை சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீசன் மற்றும் சூர்யாவை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறையில் இருந்து வானூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
சேதராப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த விழுப்புரம் நெமிலி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவரது மனைவி காயத்ரி. கடந்த 13-ம் தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று புதுவை திருக்கனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை சிகிச்சை முடிந்ததும் நெமிலியில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த நெக்லஸ், ஆரம், கம்மல், வளையல் என 20 சவரன் தங்க நகைகளும், கொலுசு உள்ளிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களும் என ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டுப் போயிருந்தது.
சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் செல்வத்தின் வீட்டில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சமோசா வியாபாரி ராஜ் என்கிற ராஜேஸ்வரி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலையில் கைதான சைதாப்பேட்டை ஜெகதீசன், பொன்னேரி அடுத்த மீஞ்சூரை சேர்ந்த சூர்யா, திண்டிவனம் சக்திவேல், சென்னை ஜான்சன் மற்றும் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி ஆகிய 5 பேரிடமும் எழும்பூர் ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு நடத்திய விசாரணையில், 19-ம் தேதி அரங்கேற்றிய கொலைக்கு முன்னர் கடந்த 14-ம் தேதி திண்டிவனம் வந்த சைதாப்பேட்டை ஜெகதீசன், பொன்னேரி சூர்யா ஆகிய இருவரும் திண்டிவனத்தில் உள்ள சக்திவேல் வீட்டில் தங்கி இருந்து நெமிலி சீனிவாசபுரத்தில் டிரைவர் செல்வம் வீட்டை நோட்டமிட்டு பகல் நேரத்திலேயே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி தங்கம் மற்றும் வெள்ளி நகையை திருடி சென்றதும் தெரிய வந்தது. மேலும் சென்னை சென்ற ஜெகதீசன், சூர்யா திண்டிவனம் சக்திவேல் ஆகியோர் இவர்களது நண்பர் நாகவள்ளி தூண்டுதலின் பேரில் ராஜேஸ்வரியை கொலை செய்ததும் தெரிய வந்தது.
ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்ட ஜெகதீசன் தலைமையிலான கும்பல் திண்டிவனத்தைச் சேர்ந்த சக்திவேலுடன் கலந்தாலோசித்து செலவுக்காக டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவல் குறித்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு, விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாயிடம் அளித்த தகவலின் அடிப்படையில் வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் சென்னை சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீசன் மற்றும் சூர்யாவை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறையில் இருந்து வானூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில தி.மு.க. துணை அமை ப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை நிர்வாக சீர்திருத்த துறை தற்போது நடந்த மேல்நிலை எழுத்தர் தேர்வில் 116 பணியிடங்கள் மட்டுமின்றி கூடுதலாக 146 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பாணை வெளியிட்டது.
ஆனால் 116 மேல்நிலை எழுத்தர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.
அரசிடம் ஏற்கனவே உதவியாளர் பணியை தற்போதுள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
அதுமட்டுமின்றி புதுவை அமைச்சக ஊழியர்கள் கடந்த ஓராண்டாக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பல கட்ட போராட்ட ங்களையும் நடத்தி உள்ளனர்.
தற்போது அமைச்சக ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருவதால் புதுச்சேரி நிர்வாக துறை அவர்களின் கோரிக்கையை ஏற்று உதவியாளர் பதவியை தற்போதுள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
மேலும் முதல்-அமைச்சரும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி இக்கோரிக்கையை நிறை வேற்றவேண்டும்.
அதுமட்டு மல்லாமல் தற்போது துறை ரீதியான தேர்வு எனப்படும் யூ.டி.சி.தேர்வினை நடத்தினால் அது உதவியாளர் பணிக்கு நேரடி போட்டித்தேர்வுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே யூ.டி.சி.போட்டித்தேர்விற்கு கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து வெறும் 116 இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மேலும் உதவியாளர் தேர்வு நடத்தினால் அதில் வெளிமாநிலத்தவரும் பங்குபெறும் நிலைமை உருவாகும்.
இது புதுச்சேரி மாநிலத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். எனவே முதல்-அமைச்சர் கடந்த காலங்களில் உள்ள நடைமுறையை பின்பற்றி அரசு ஊழியர்களின் கோரிக்கையை தீர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- விவசாயத்துக்கு தேவையான பண்ணைக் கருவிகள் விலைக்கு மற்றும் வாடகைக்கும் கிடைக்கும்.
- மாநில செயற்குழு உறுப் பினர் ராமு, மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒரே இடத் தில் கிடைக்கும் நோக்கத் தில், 'விவசாய மேம்பாட்டு 'மையம்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன்படி, நாடு முழு வதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாதிரி விவசாய மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டது
இந்த திட்டத்தின் கீழ், தற்போதுள்ள சில்லறை விற்பனை உரக்கடைகள், விவசாயிகளின் தேவைகள் மற்றும் சேவைகளை நிறை வேற்றும் விவசாய மேம்பாட்டு மையமாக மாற்றப்படும். இந்த மையங்களில் தரமான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், விதைகள்ஆகியவை விற்கப்படும். இந்த மையங்கள் மூலமாக விவசாயத்துக்கு தேவையான பண்ணைக் கருவிகள் விலைக்கு மற்றும் வாடகைக்கும் கிடைக்கும்.
புதுச்சேரி பா.ஜ., விவசாய அணி சார்பில், விவசாய மேம்பாட்டு மையம் தொடக்க நிகழ்ச்சி, அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள விவசாய மேம்பாட்டு மையமாக மாற்றப்பட்ட சந்தானம் அக்ரோ சர்வீஸ் சென்டரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமரின் தொலைக்காட்சி உரை விவசாயிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விவசாய அணி தேசிய செயற் குழு உறுப்பினர் பாரதி மோகன் தலைமை தாங்கினார். கட்சியின் தொகுதி தலைவர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப் பினர் ராமு, மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர்கள் செல்வம், முருகன், மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொகுதி பொதுச் செயலாளர் முருகவேல் நன்றி கூறினார்.
- தெருநாய்களுக்கு பயந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர்.
- வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஏதேனும் நோய் ஏற்ப்பட்டால் அந்த நாய்களை தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகின்றனர்.
புதுச்சேரி:
திருபுவனை, மதகடிப்பட்டு , திருவண்டார் கோவில்,மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், சன்னியாசி குப்பம், நல்லூர், குச்சிப் பாளையம், சிலுக்காரி பாளையம் ஆண்டியார் பாளையம், கொத்தபுரி நத்தம், வம்புப் பட்டு, சோரப்பட்டு, விநாயகம் பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இந்த தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் நடந்து செல்லும் பொது மக்களையும் விரட்டி விரட்டி துரத்துகின்றன.
இந்த தெருநாய்களுக்கு பயந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். அதோடு குழந்தைகளை தெரு நாய்கள் துரத்தும் போது பயத்தில் கதறி அழும் காட்சி தினமும் நடந்து வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் தெரு நாய்களின் தொல்லையால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
தெருநாய்களின் தொல்லை ஒரு புறம் இருக்க விட்டில் நாய் வளர்ப்ப வர்களும் நடைபயிற்சி என்ற பெயரில் தெருவில் நாய்களை அழைத்து செல்லும் போது தெரு நாய்களும், வளர்ப்பு நாய்களும் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு கொள்கி ன்றன. மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஏதேனும் நோய் ஏற்ப்பட்டால் அந்த நாய்களை தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நாய் பெருக்கம் அதிகரித்து விட்டது.
அதனை கட்டுப்படுத்த கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகமும் எந்த வித நடவடிக்கையும் எடுப்ப தில்லை. முன்பெல்லாம் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு கருத்தடை செய்து இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை மீண்டும் செயல்படுத்தினால் இது போன்று தெருநாய் பெரு க்கத்தை கட்டுப்படுத்தலாம் என பொதுமக்கள் தெரிவிக் கின்றன.
- மனிதவள மேலாண்மை குறித்த பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.
- புதுச்சேரி மனித வள வட்டார துணை தலைவர் ஹரிஹர பாண்டியன், பொருளாளர் சாய் அருண் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
புதுச்சேரி, ஜூலை.28-
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), புதுச்சேரி மனித வள வட்டாரம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.
எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை குறித்த பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் புதுச்சேரி மனித வள வட்டார தலைவர் டட்லி டக்ளஸ், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் புதுச்சேரி மனித வள வட்டார துணை தலைவர் ஹரிஹர பாண்டியன், பொருளாளர் சாய் அருண் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.
- நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர்.
வில்லியனூர்:
புதுச்சேரி வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரி பகுதியில் பாலமுருகன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசேஷ நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் கோவில் பூசாரி கந்தன் நேற்று முன்தினம் இரவு கோவிலில் வழக்கமான பூஜைகளை செய்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி கந்தன் வந்தபோது, வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.
இதுபற்றி கோவில் நிர்வாகி வைத்தியநாதன் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர். அதில் ஒரு பகுதி கீழே விழுந்த நிலையில் மற்ற பகுதியை திருடியுள்ளனர். மேலும் கொடிமரத்தில் இருந்த 3 சிறிய கலசங்களையும் உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
தங்களை பற்றி அடையாளம் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோபுர கலசம் திருடப்பட்டது பற்றி அறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதே கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பஞ்சலோக முருகன் சிலை திருடு போனதும் இதுதொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக அரசை கண்டித்து புதுச்சேரி- கடலூர் எல்லையான முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி, துணை அமைப்பாளர் வடிவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.
தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே சிலர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த லாரி டயரை எடுத்து வந்து போராட்டம் நடந்த இடத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி சாலையில் போட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பா.ம.க.வினர் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு
- காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் கூட்டினார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு நடந்து வருகிறது.
மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளை ஒரு கும்பல் திட்டமிட்டு திருடியது. இது புதுவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் கூட்டினார். காவல்துறை தலைமை யகத்தில் கூட்டம் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். டி.ஜி.பி சீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுவையில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு தொடர்பாகவும், கஞ்சா, போதைப்பொருட்கள், வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், இரவில் குடித்துவிட்டு வாகனங்களை
செல்வதை கண்காணிக்கவும், வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார்.
மேலும் இரவு நேர ரோந்துகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.






