என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இவ்வாண்டிற்கான மாநாட்டினையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளை மருத்துவ தொழிற்நுட்பம் மற்றும் சுகாதார துறை என்ற தலைப்பில் சென்னையில் நடத்தியது.
    • மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

     புதுச்சேரி:

    தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைப்பானது இந்திய வணிகத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் சேவை புரிந்து வரும் ஒர் முன்னணி அமைப்பாகும்.

    இது ஆண்டுதோறும் புதிய தொழிற்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் மாநாடுகளையும், அவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது.

    இதனடிப்படையில் இவ்வாண்டிற்கான மாநாட்டினையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளை மருத்துவ தொழிற்நுட்பம் மற்றும் சுகாதார துறை என்ற தலைப்பில் சென்னையில் நடத்தியது.

    இதில் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    இவ்விருதானது பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படியும், இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆலோசனையின்படியும் விண்ணப்பிக்கப்பட்டது.

    இம்மாநாட்டில் பல்வேறு சுகாதார துறையை சார்ந்த வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்களை சார்ந்த கல்வியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

    இவ்விருதினை பல்கலைக்கழகத்தின் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் மற்றும் நிர்வாக பிரிவின் துணைப்பதிவாளர் டாக்டர். ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழிக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
    • ராம சந்திரன்,தனவேலு, செல்லா என்ற தமிழ் செல்வன், கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழிக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    புதுவையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுவை அ.ம.மு.க. சார்பில் திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் தெற்கு மாநில அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், இணைச்செயலாளர் லாவண்யா மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் ரகுபதி,ராஜா எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சீத்தாராமன்,

    ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்கள் சுதாகர், கபிரியேல் தொழிற்சங்க பேரவை செயலாளர் சுரேஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேல், ராம சந்திரன்,தனவேலு, செல்லா என்ற தமிழ் செல்வன், கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை கோரிமேட்டில் அரசு நர்சிங் கல்லூரி உள்ளது.
    • அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் அரசு நர்சிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் வழக்கம்போல் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மாணவிகளை பார்த்து ஆபாச செய்கை செய்தார். மேலும் திடீரென மாணவிகள் முன் சென்று தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓட தொடங்கினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் திண்டுக்கல் அடியனூத்து பகுதியை சேர்ந்த ரகுமான் (வயது 23) என்பதும், இவர் புதுவை ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

    • புகையிலையினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசினை குறைக்கவும் புதுச்சேரி ராக் கடற்கரையில் புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

    உலகில் புகையிலை பயன்பாட்டினால் 12-ல் ஒருவர் பலியாகின்றனர்.

    இந்தியாவில் 40 சதவீதம் புற்றுநோயால் இறப்பவர்கள் புகையிலை பயன்படுத்துபவர்கள். இதனால் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.

    இதற்கிடையே தேசிய சுகாதார இயக்ககம் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் (அரசு மார்பு நோய் நிலையம்) மற்றும் புதுச்சேரி போலீஸ் துறை சார்பில் ராக் பீச் (புதுவை கடற்கரை) புகையிலை இல்லா கடற்கரையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், புகையிலை பாதிப்பில் இருந்து அவர்களை காக்கவும், புகையிலையினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசினை குறைக்கவும் புதுச்சேரி ராக் கடற்கரையில் புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கடற்கரை சாலை முழுவதும் புகை பிடிக்க வேண்டாம் என்றும், புகையிலை பொருட்கள் வீசுவதை தவிர்க்கும் வகையில் கடற்கரைக்குள் எந்தவிதமாக புகையிலை பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.

    இப்பலகையை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர். வெங்கடேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்வாதி சிங், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில ஆலோசகர் டாக்டர். சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒரே நாளில் லாபத்துடன் பணம் திரும்பி கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் கூட இதில் முதலீடு செய்தனர்.
    • சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, வில்லியனுார் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது, அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் 'டோல்' என்ற ஐரோப்பிய ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பழங்கள், காய்கறி ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம், இந்தியாவில் கிளைகளை தொடங்கி உள்ளது. இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, கூறி வாட்ஸ் ஆப் மூலம் டெலிகிராம் லிங்க் அனுப்பினார்.

    அதன் பின்னர் டெலிகிராமில் இதற்கென தனி குரூப் உருவாக்கி, அனைவரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர். பிரியதர்ஷினி தனது நண்பர்கள் 4 பேரை அந்த குழுவில் சேர்த்துள்ளார். புதிய நபர்களை அறிமுகப்படுத்தியதிற்காக பிரியதர்ஷினிக்கு சிறிய தொகை அனுப்பட்டது.

    அதன் பின்பு ஒவ்வொரு புதிய நபரும் இணையும்போது பிரியதர்ஷினிக்கு 110 ரூபாய் அறிமுக போனஸ் தொகையாக வழங்கி உள்ளனர்.

    இந்த தகவலை கேள்விப்பட்டு முதலியார்பேட்டை, நயினார்மண் டபம், நோணாங்குப்பம், அரியாங்குப்பம், தவளக் குப்பம் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த பலர் ரூ. 550 முதல் ரூ.5 லட்சம் வரை செலுத்தினர்.

    ஒரே நாளில் லாபத்துடன் பணம் திரும்பி கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் கூட இதில் முதலீடு செய்தனர். அந்த குழுவில் 326 பேர் உறுப்பினராக சேர்ந்து ரூ. 2 ½ கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர்.

    ஆனால் ஒரே நாளில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய அந்த மர்ம நபர் அதன் பிறகு தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து ஏமாற்றப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். டோல் என்ற சைபர் கிரைம் ஆசாமிகள் இந்தியா முழுவதும் இது போன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

    நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து இணைய வழி தொடர்புகள் அமெரிக்காவில் இருந்து செயல்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஆரோவில் மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் ‘போன்பயர்’ எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானமும் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆரோவில் சர்வதேச நகரம் 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அதன் நோக்கம் வேற்றுமையில் மனித ஒற்றுமையாகும்.

    இந்த நிலையில் ஆரோவில் நிறுவன தினத்தையொட்டியும், அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டியும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 8-ந்தேதி ஆரோவில்லுக்கு வருகை தருகிறார்.

    அன்று நண்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ஆரோவில் மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் 'போன்பயர்' எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானமும் நடக்கிறது.

    அரவிந்தர் பிறந்த மாதமான ஆகஸ்டு மாதம் முழுவதும் ஆரோவில்லில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஒற்றுமை நடைபயணம், மரம் வளர்ப்பு குறித்து கலந்துரையாடல், 25 முதல் 27-ந் தேதி வரை அரவிந்தரின் பன்முக திறன் குறித்து சர்வதேச எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வேளாண்துறையில் விவசாயிகளுக்கு தேவை யான டிராக்டர், பவர்டில்லர், நெல்நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம், மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.224 கோடி இதற்காக பெறப்பட்டுள்ளது. இதுவரை புதுவை பிராந்தியத்தை சேர்ந்த 28 பயனாளிகளுக்கு மானியத்தில் எந்திரங்கள், உபகரணங்கள் வாங்க ரூ.54.43 லட்சம் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இப்போது அடுத்த 7 பயனாளிகளுக்கு எந்தரம் வாங்க ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போதுவேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு
    • 1996-ல் மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜானகிராமன் கொண்டுவந்தார்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் அரியூர் அங்காளம்மன் கோவில் எதிரில் நடந்தது.

    மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சண்.குமரவேல் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அசோக் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், பரமபதம், முருகதாஸ், அவைத்தலைவர் புஷ்பராஜ், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது:-

    1996-ல் மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜானகிராமன் கொண்டுவந்தார். பின்னர் டெல்லிக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்து ெசன்று வலியுறுத்தினோம். ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    இது டெல்லிக்கு சென்று பரிசீலனையில் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

    பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி எம்.பி. சுப்புராயன் கேள்வி கேட்டபோது, இதுபோன்ற தீர்மானம் வரவில்லை என்று பாராளுமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா எம்.பி. உட் பட பலர் பேசினார்கள். ஆனால் இதற்கு எழுத்துப்பூர்வமான பதில் வரவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது.

    விவசாயிகளுக்கு தனியாக ஒரு மின் பாதை பணி நடைபெற உள்ளது. அப்படி நடந்தால் அவர்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பாதுதான் மின்சாரம் கொடுப்பார்கள்.

    அது நள்ளிரவாகக்கூட இருக்கலாம். இது நடக்க கூடாது என எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. புதுவை மாநிலத்தில் பல கார்ப்பரேஷன்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 11 கார்ப்பரேஷன்களை மூடிவிட்டனர்.

    இங்கு மிக மோசமான பாவப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களை ஏமாற்றக் கூட கூடிய செயல்களை செய்ய வேண்டாம். தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுவையில் 1-ம் வகுப்பு 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் 10 சதவீத இட ஒதுக்கி வழங்கப்படும் என கூறுகிறார். இது ஏற்கத்தக்கதல்ல. எற்கனவே படிக்கும் குழந்தைகளுக்கு எப்படி சீட் கிடைக்கும்.?

    இவ்வாறு சிவா பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோணி சிப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    உளுந்தே வாங்காமல் ஆயிரம் வடை சுடக்கூடிய திறமை பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். மங்களம் என்றால் நல்ல காரியத்தை தொடங்குவதற்காக கூறுவது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மதவெறி பிடித்த பாஜகவை இந்தியாவைவிட்டு விரட்டி இந்தியா எனும் மதச்சார்பற்ற கூட்டணியின் தலைமையில் ஆட்சி நடக்கப்போகிறது என்பதற்கு மங்களம் சொல்லும் தொகுதியில் இந்த கூட்டம் நடக்கிறது.

    புதுவையில் கருப்பு, சிகப்பு கொடியுடன் உதயசூரியன் உதிக்கப் போகிறது என்பதற்கான அடையாளமாக இந்த மங்களம் தொகுதி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள்

    எம்.பி., திருநாவுக்கரசு, எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்கின்றனர். ஊழல் ஊற்றுக்கண்ணாக உள்ள திமுகவுக்கு ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
    • அமலாக்கத்துறையின் ஒரு கிளையை மத்திய அரசு புதுவையில் நிரந்தரமாக அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    புதுச்சேரி: 

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அமைப்பாளர் சிவா, அரசின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறியுள்ளார். அவர் 15 நாட்களில் அந்த பட்டியலை வெளியிட தயாரா? கடந்த வாரம் சுயேச்சை எம்எல்ஏ நேரு, எதிர்கட்சித்தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

    இதற்கு உரிய விளக்கத்தைக்கூற முடியாமல், அரசைப்பற்றி பேசியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்கின்றனர். ஊழல் ஊற்றுக்கண்ணாக உள்ள திமுகவுக்கு ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

    புதுவையில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சில எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வங்கிகளையும், வருமான வரித்துறையையும் ஏமாற்றி அதிக சொத்துக்களை சேர்த்துள்ளனர். எனவே அமலாக்கத்துறையின் ஒரு கிளையை மத்திய அரசு புதுவையில் நிரந்தரமாக அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    யூ.டி.சி. தேர்வு நேர்மையாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக முதல்- அமைச்சருக்கு அ.தி.மு.க. சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • முன்னாள் எம்.பி. கண்ணன் வலியுறுத்தல்
    • பெரியமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முழுமையாக கவனத்திலும், நம்பகத்தன்மையோடும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரியமார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நவீனப்படுத்த அரசு விரும்புவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த விஷயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பெரியமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முழுமையாக கவனத்திலும், நம்பகத்தன்மையோடும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.

    இந்த விஷயத்தில் வேறு விதமான கவுரவ பிரச்சினை ஏதும் இருக்க தேவையில்லை. அனைத்து எதிர்கட்சிகளும் இதே கருத்தையே வெளிப்ப டுத்தி உள்ளனர்.

    புதுவை அரசு உடனடியாக பெரி யமார்க்கெட் வியாபாரிகளின் கூட்டத்தை கூட்டி, கலந்துபேசி நல்ல முடிவெடுப்பதே ஒரு ஸ்மார்ட்டான செயல்பாடாக இருக்கும் என்பதை அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை மாநில மண்ணின் மைந்தர்கள் மட்டும் முழுவதுமாக பலனடைய தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
    • சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும் அல்லது சமச்சீர் கல்வி திட்டத்தை கற்பிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு தமிழகத்தை பின்பற்றி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மேற்படிப்பில் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது மிகவும் வரவேற்கதக்கது.

    இதற்காக புதுவை அரசை பாராட்டுகின்ற அதே வேளையில் அந்த 10 சதவீத இட ஒதுக்கீடு முழுவதும் புதுவை மாநில மண்ணின் மைந்தர்கள் மட்டும் முழுவதுமாக பலனடைய தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.

    மேலும் இதன் மூலமாக பயன்பெறும் மாணவர்கள் குறைந்தபட்சம் 7 வருடங்க ளாக அரசுப் பள்ளியில் படித்த வராக இருக்க வேண்டும் என்ற திருத் தத்தையும் கொண்டு வர வேண்டும்.அதேபோல் புதுவை மாநிலத் திற்கு என்று தனியான கல்வி வாரிய த்தை அரசு ஏற்படுத்த வேண்டும், மேலும் புதுவையில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முழுவதுமாக ஒரே முறையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும் அல்லது சமச்சீர் கல்வி திட்டத்தை கற்பிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    எனவே புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தையும் பாரபட்சம் இன்றி ஒரே கல்வி திட்டத்திற்கு கொண்டு வர வேண்டும், அப்பொழுதுதான் மாநிலத்தின் அனைத்து மாணவர்களும் எந்தவித ஏற்றத்தாழ்வுமின்றி பலனடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

    • ஊசுடு வட்டார காங். தலைவர் ராமு வலியுறுத்தல்
    • 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் சேதராப்பட்டில் நடந்தது.

    ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஊசுடு செந்தில்குமார், வட்டார துணைத்தலைவர் பிரபாகர், முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தலின்படி நடந்த கூட்டத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு பேசியதாவது:-

    ஊசுடு தொகுதியில் ஊசுடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினைமேலும் வலுப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்க வேண்டும்.

    9 ஆண்டுகால மோடி அரசின் மக்கள் விரோத போக்கை பொது மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் படும் இன்னல்க ளுக்கு பா.ஜனதா அரசு தான் காரணம். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஊசுடு தொகுதி பொறுப்பா ளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கார்த்திகேயன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார்.

    இதில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் தங்க. கணேசன், சேகர், தேவராசு ,சுந்தரமூர்த்தி, ஆறுமுகம் ,பி.சி.சி. உறுப்பினர் பாபு என்ற பழனி ராஜா, வட்டார காங்கிரஸ் குணா, மாவட்டத் துணைத் தலைவர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சம்பத், இருசப்பன், அல்போன்ஸ் ,பாபு, தண்டபாணி, தனசேகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வீரபாலு, இளைஞர் காங்கிரஸ் துணை தலை வர்உதயகுமார் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உ ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×