என் மலர்
நீங்கள் தேடியது "Anpazhagan insists"
- தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்கின்றனர். ஊழல் ஊற்றுக்கண்ணாக உள்ள திமுகவுக்கு ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
- அமலாக்கத்துறையின் ஒரு கிளையை மத்திய அரசு புதுவையில் நிரந்தரமாக அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அமைப்பாளர் சிவா, அரசின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறியுள்ளார். அவர் 15 நாட்களில் அந்த பட்டியலை வெளியிட தயாரா? கடந்த வாரம் சுயேச்சை எம்எல்ஏ நேரு, எதிர்கட்சித்தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இதற்கு உரிய விளக்கத்தைக்கூற முடியாமல், அரசைப்பற்றி பேசியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்கின்றனர். ஊழல் ஊற்றுக்கண்ணாக உள்ள திமுகவுக்கு ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
புதுவையில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சில எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வங்கிகளையும், வருமான வரித்துறையையும் ஏமாற்றி அதிக சொத்துக்களை சேர்த்துள்ளனர். எனவே அமலாக்கத்துறையின் ஒரு கிளையை மத்திய அரசு புதுவையில் நிரந்தரமாக அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
யூ.டி.சி. தேர்வு நேர்மையாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக முதல்- அமைச்சருக்கு அ.தி.மு.க. சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






